தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம்


__That_Vulgar_Display___by_AppreciatesArt

தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம்

விகடன் பிரசுரமாக வந்திருக்கும் கே.பாரதியின் ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ என்னும் நூலை விமர்சிக்கும் போது ” தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம் தான்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் பிரபஞ்சன். ஆகஸ்ட் 2014 காலச்சுவட்டில் ஆபாசம் என்றால் என்ன என்பதை விளக்குகிறார் ” எது இயல்புக்கும் இயற்கைக்கும் மாறானதோ, எது ஒன்றை ஒன்பதாக்கிக் காட்டுகிறதோ, எது இயற்கையின் மேல் தன் வக்கிரத்தைப் பூசுகிறதோ அதெல்லாம் ஆபாசம் தான்” .

பெரிதும் இலக்கியவாதிகளால் மிகை எழுத்து என்று நிராகரிக்கப் பட்ட கல்கியின் பங்களிப்பு சினிமாவில் பெண் உரிமைக்கான அழுத்தமான வாதத்தை முன் வைத்தது என்கிறது இந்த நூல். தியாக பூமியின் கதாநாயகி தன்னை நிராகரித்த கணவனால் மனம் ஊனப் படாமல் தன் காலில் நின்று அவன் நீதிமன்றத்தில் சேர்ந்து வாழும் வாதத்தை முன் வைக்க ” நான் உனக்கு ஜீவனாம்சன் தருவேன். ஆனால் உன்னுடன் வாழ மாட்டேன் ” என்று நிமிர்ந்து நிற்கிறாள். அந்தக் காலத்தில் பல பத்திரிக்கைகள் இது பண்பாட்டுக்கு விரோதமானது என்று எழுதின. திராவிட இயக்கங்கள் பலவும் திரைப்படங்களில் பெண் அடிமையானவள் என்னும் பாரம்பரிய ஆணாதிக்க நம்பிக்கையை உடைக்கும் எதையுமே சொல்லவில்லை. கலைவாணர் என்று அழைக்கப் பட்ட என்.எஸ். கிருஷ்ணன் படங்களில் மட்டுமே பெண்ணுரிமைக்கான விஷயங்கள் இருந்தன. எம்ஜியார் எப்போதுமே பெண் தன் தலைவனைச் சரணடைபவள் என்னும் பாத்திரப் படைப்புள்ள கதாநாயகிகளுக்கான கதைகளையே தேர்ந்தெடுத்தார். சிந்தாமணி, மாத்ருபூமி ஆகிய படங்கள் மட்டுமே 30களில் விதிவிலக்கானவையாக பெண்களுக்கான உரிமை பற்றிப் பேசின.

புதிய அலைப் படங்களில் ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ , தி.ஜானகிராமனின் ‘நாலு வேலி நிலம்’ , நிமாய் கோஷின் ‘பாதை தெரியுது பார்’ இவை குறிப்பிடத்தக்க யதார்த்தவாதப் படங்கள்.அரசியலில் திரைப்படத்தின் தாக்கம், மக்களின் நடை உடை பாவனைகளில் சினிமாவின் தாக்கம் ஆகியவை பற்றியும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.

மிகவும் ரத்தினச் சுருக்கமான நூல் மதிப்புரையில் பிரபஞ்சன் ஒரு முக்கியமான விஷயத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தென் ஆற்காடு புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் பிரபஞ்சன் உட்பட பல சிந்தனையாளர்கள் ‘தேர் பாஞ்சாலி’ என்னும் சத்யஜித்ரேயின் படத்தைத் திரையிட்டு கிராமத்து மக்களின் அந்த சினிமா பற்றிய விமர்சனைத்தைக் கேட்டு அறிகிறார்கள். பல அறிவுஜீவிகள் குறிப்பிட்ட அம்சங்களை அந்த மக்களும் மையப் படுத்திப் பேசுகிறார்கள். ரசனையில் அறிவுஜீவிகளுக்கு இணையான விமர்சனம் அவர்களிடமிருந்து வருகிறது.

இந்தக் கட்டுரை நிறைவே நமது சிந்தனையைத் தூண்டுகிறது. நல்ல சினிமா என்பது மிகவும் குறைந்த சதவீதம். பெண்கள் ஆக்கபூர்வமாக சித்தரிக்கப் பட்டது அதை விட அற்பமான சதவீதம். சமுதாய மாற்றத்தைப் பேசிய சினிமா வெகு வெகு அபூர்வமே.

சினிமா சமுதாயத்தின் நடை உடை பாவனைகளை பாதித்திருக்கலாம். ஆனால் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. ஜாதி தாண்டிய கல்யாணத்துக்கு மரண தண்டனை விதிக்கும் மனப்பாங்கு பல இடங்களில் இன்னும் தலை விரித்தாட அதை மையமாக வைத்து ஒரு கட்சி அரசியலே நடத்துகிறது.

சினிமா நடிகர்கள் நடிகைகள் கவனம் பெறும் அளவு மரியாதை பெறுவதில்லை. அரசியல் கட்சிகள் கூட அவர்களைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்த விரும்புகின்றனவே ஒழிய மரியாதை கொடுத்து ஒரு முக்கியப் பொறுப்பு எதையும் கொடுப்பதில்லை.

தமிழ் சினிமா கண்டிப்பாக மாறத் துவங்கி இருக்கிறது. இன்னும் வெகு தூரம் போகவும் வேண்டியிருக்கிறது. ஆய்வு நூலை அறிமுகம் செய்த பிரபஞ்சனுக்கு நன்றி.

(image courtesy: appreciatesarts.deviandart.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s