யூ ஆர் அனந்தமூர்த்தி – அறிவின் கூர் முனையில் புனைந்தவர்


220px-U_R_Ananthamurthy_Z1

யூ ஆர் அனந்தமூர்த்தி – அறிவின் கூர் முனையில் புனைந்தவர்

ஆகஸ்ட் 22 2014 அன்று உயிர் நீத்த யூ ஆர் அனந்த மூர்த்தி கன்னட இலக்கிய உலகிலும் இந்திய இலக்கியத்திலும் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர். ஞானபீடப் பரிசால் கௌரவிக்கப் பட்டவர்.

சம்ஸ்காரா, அவஸ்தே, பாரதி புரா ஆகிய நாவல்கள் அவரது படைப்புகளில் புகழ் பெற்றவை. அவரது படைப்புகள் சாஸ்திரம், சம்பிரதாயம் சடங்குகள் என்று பேசி அவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வாழ்ந்த தலைமுறையின் முரண்பாடுகளை, போலித்தனத்தை எள்ளுபவையாகவே இருந்தன. 80 வருடம் வாழ்ந்த அவரின் தலைமுறையில் அவர் மிகவுமே சர்ச்சைக்குரியவராகவே இருந்தார். இந்தியாவில் பட்டப் படிப்பும் இலக்கியத்தில் இங்கிலாந்தில் முனைவர் பட்டமும் பெற்று அவர் இந்தியாவில் கல்வித்துறையில் நீண்ட காலம் உயர்பதவிகளை வகித்தார்.

இந்திய மரபு அல்லது தொன்மையை இரண்டு விதமாக முரண்பட்டுக் காணும் அறிவு ஜீவிகள் உண்டு. மேல்ஜாதிக்காரர்களது நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகள் மூடநம்பிக்கை உள்ளவை, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரது நம்பிக்கைகள் பண்பாட்டின் குறியீடுகள் என்று. இந்த நிலைப்பாட்டையே அரசியல்வாதிகள் எடுத்தால் அது மதச்சார்பற்ற கொள்கையாகக் கொண்டாடப் படும்.

இந்த இருமையான அணுகுமுறையை அறிவுஜீவிகள் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் படித்தவர்கள் மத்தியில் புத்திஜீவிகளாகவும், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப் பட்டோர் மத்தியில் சமூக நீதி உணர்வு உள்ளவராகவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதே.

யூ ஆர் அனந்த மூர்த்தி அவர்களில் ஒருவர்தான்.

இந்தியச் சூழலில் ஒருவர் வலதுசாரி அல்லது இடதுசாரியாக அறியப்பட்டே தீர வேண்டும். தன் சுதந்திர சிந்தனையைப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்த ஒருவருக்கு அனுமதியில்லை. தனது வயது மற்றும் அனுபவத்தில் இடதுசாரிகளை விமர்சிப்பவராகப் பரிணமித்து அதே சமயம் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளி மற்றும் ஏழைகள் பக்கம் நிற்பவராகவும் ஒருவர் இருக்க முடியாது. ஒன்று வலதுசாரி அல்லது இடதுசாரி.

மறுபடி அறிவுஜீவிகள் பக்கம் வருவோம். இந்து மதம் (அல்லது பண்பாட்டை) விமர்சித்த அளவு பிற மதங்களை ஏன் விமர்சிப்பதில்லை என்னும் கேள்வியில் அவர்கள் அசடு வழியும் போலிகள் தான்.

இருந்தாலும் அவர்களை இந்துப் பண்பாட்டின் ஒரு பிரிவாகத் தான் காண வேண்டும். நாத்திகனுக்கும் இந்துப் பண்பாட்டில் இடம் உண்டு. இரு நிலைப்பாடு எடுக்கும் அறிவுஜீவிகளுக்கும் தான்.

அதே சமயம் மத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே பிழைப்பை நடத்தும் ஒரு பெரிய பாரம்பரியம் மிகவும் வேரூன்றி இருப்பதை நாம் காண வேண்டும். இங்கே எழும் எதிர்ப்புக் குரல் கண்டிப்பாக (குறைந்த பட்சம் இந்தியத் துணைக்கண்டத்தில்) மதத்தின் பேரில் பிழைப்பு நடத்தும் எல்லா மதத்தினர் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்னும் எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் 10 திருடர்களில் 2 பேரை விட்டுவிட்டது உண்மைதான். 8 பேரையாவது தட்டிக் கேட்ட அளவு நாம் சந்தோஷப் பட வேண்டும்.

எழுத்தாளர்கள் அரசியலுக்கு வந்தது வெகு அபூர்வம். எழுத்தாளர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளில் களமிறங்குபவர்களாக இன்னும் எழவில்லை. அப்படி எழுந்த அனந்த மூர்த்தியின் அணுகுமுறையை நாம் புரிந்து கொள்வது இது ஒரு நல்ல துவக்கம் என்பதாலேயே.

எந்த மதமாக இருந்தாலும் எந்தக் கொள்கையாக இருந்தாலும் அதைப் பாதுகாக்கப் பாதுகாவலர் முன் வரும் போது அது தனது அறத்தின் பலத்தில் நிற்கும் வலுவில்லாத பிம்பமே ஏற்படும். எந்த மதத் தீவிரவாதியும் அந்த மதத்துக்கு செய்யும் மிகப்பெரிய காயம் இதுவே.

அனந்த மூர்த்தி சுதந்திர சிந்தனையை, கருத்துச் சுதந்திரத்தை அவற்றின் அடையாளமாக இருந்து வளர்த்தவர். மூர்க்கமான மரபுப் பிடிப்பை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர். இத்தகையோரே தனது பாரம்பரியத்தின் பலம் பலவீனம் பற்றிய சரியான புரிதல் உள்ள ஒரு ஆரோக்கியமான தலைமுறைக்கு வழி வகுக்கிறார்கள்.

அவரின் இந்தப் பணிக்காகவே அவர் என்றும் அவர் நினைவு கூரப்படுவார். அவர் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s