ஆயிஷா நடராசனுக்கு பால சாகித்ய அகாதமி விருது


index_051
ஆயிஷா நடராசனுக்கு பால சாகித்ய அகாதமி விருது

1999ம் ஆண்டு தான் ஒரு முறை கடலூரில் வைத்து இரா.நடராசனை சந்தித்தேன். எஸ்ஸார்சி எனக்கும் அவருக்கும் பொது நண்பர். ஆயிஷாவை நான் படித்து முடித்திருந்ததால் அவரிடம் அது குறித்துப் பேசினேன். வாழ்த்தினேன்.

ஆயிஷா ஒரு குறுநாவல் ஒரு பெண் குழந்தை. பதின் களில் உள்ள குழந்தை. கிராமப்புறப் பள்ளியில் விஞ்ஞானத்தில் மிகவும் ஈடுபாடு ஏற்பட்டு தனது ஆசிரியகளிடம் பல கேள்விகளைக் கேட்கிறாள். அவள் உற்சாகப் படுத்தப் படவில்லை. தன்னால் முடிந்த அளவு சிற்சில பரிசோதனைகளைச் செய்கிறாள். அவளில் நுட்பமான அறிவும் உற்சாகமும் குடும்பத்தினரால் புரிந்து கொள்ளப் படவில்லை. ஆசிரியர்கள் அங்கீகரித்துப் பாராட்டாத சூழல். மிகவும் ஆபத்தான ஒரு ரசாயனத்தை உட்கொண்டு பரிசோதிக்கும் போது இறந்து விடுகிறாள். 15 ஆண்டுகளுக்கு முன் படித்தது. நினைவில் இருந்து எழுதுகிறேன். இந்த நாவலின் மிகப் பெரிய பலம். கதை சொல்லிக்கு ரசாயனப் பரிசோதனைகள் குறித்து இருந்த அறிவும் ஒரு ஆசிரியராக, கிராமப்புற மாணவர்கள் மீது இருந்த பரிவும்.

அவ்வளவு ஆழ்ந்த வாசிப்பு அமையாமற் போன நிலையில் அப்போது நான் இருந்தேன். ஆயிஷா நாவலில் சற்றே மிகை எனக்குப் பட்டது. வணிகப் பத்திரிக்கைகளாலும் பாராட்டப் பட்ட குறுநாவல் அது. பரிதாபத்துக்காக ஒரு கதாபாத்திரத்தை சாகடிக்கும் உத்தி அதில் இருப்பதாகவே நான் கருதினேன்.

ஒரு மேல்நிலைப்பள்ளியின் முதல்வராகவும் எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் பன்முகமாகப் பணியாற்றிய நடராசனின் குழந்தைகளுக்கான கதைகளை நான் வாசித்ததில்லை. வளரும் தலைமுறை மீது அவருக்கு உள்ள அக்கறை மிகவும் பாராட்டத் தக்கது. கடந்த பத்தாண்டுகளில் பல குழந்தை நூல்களை அவர் எழுதி இன்று பாலசாகித்ய அகாதமி விருதையும் பெற்றுள்ளார்.

நான் பழகிய ஒருவர் விருது பெறுவது இதுவே முதல் முறை. (சுப்ரபாரதி நான் பழகும் முன்பே சில விருதுகளைப் பெற்றவர்.)

சமுதாயம் உருப்படும் எண்ணம் உள்ள யாரும் வளரும் தலைமுறையையே அவர்களின் நலன் மற்றும் பன்முக வளர்ச்சியையே இலக்காகக் கொள்ள வேண்டும். அத்தகைய இலக்குள்ளவர் இரா. நடராசன். வாழ்த்துகள்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s