கேரளாவின் பகுதி மதுவிலக்கு


200px-Glass_of_whisky

கேரளாவின் பகுதி மதுவிலக்கு

இன்னும் பத்து வருடத்தில் வெளிநாட்டு மது அல்லது உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட செயாற்கை மதுவைப் படிப்படியாக நிறுத்தி கள் மட்டும் அருந்தலாம் என்னும் சூழலைக் கொண்டு வருவதாகக் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இது பகுதி மது விலக்கே. ஆனால் நல்ல விஷயம் கள் அருந்துவோருக்கு செலவு குறைவு. ஏழைக் குடும்பங்களின் ஆண் தனது வருமானம் முழுவதையுமே குடியில் செலவிடுகிறான் இல்லையா? அதிலிருந்து செலவு குறைவான குடிக்கு அவன் மாறக் கூடும்.

எப்படி இருந்தாலும் இது வரவேற்கப் பட வேண்டிய ஒன்றே. இன்று நாட்டில் குடிக்காதவர் ‘மைனாரிட்டி’. இதில் குழப்பமே இல்லை. நான் குடிப்பதில்லை என்றால் புருவத்தை உயர்த்தும் பலரை நான் பார்த்திருக்கிறேன். நாடு முழுவதும் அவசரமாக ஒரு ‘சர்வே’ எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? கல்லூரி மாணவரில் இன்னும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எத்தனை சதவீதம்?

தமிழ் நாட்டில் 60 70களில் கள், சாராயம் விற்கும் கடைகள், ஒயின் வகைகளில் வரும் உள்நாட்டு வெளிநாட்டுத் தயாரிப்புகளை விற்கும் கடைகள் இரண்டுமே இருந்தன. எந்த வருடம் முதல் எந்த வருடம் வரை என்பது சரியாக நினைவில் இல்லை. கள்ள சாராயம் என்னும் ரசாயனக் கலவையை அருந்தி நிறைய பேர் உயிரிழக்கவே பாட்டில் வகை மது மட்டுமே அனுமதிக்கப் படும் என்னும் கட்டாயம் தமிழ் நாடு மற்றும் பல மாநிலங்களில் அமலுக்கு வந்தது. இவற்றில் விலை அதிகம் என்பதால் வரி வசூல் வருவாய் அதிகம். பின்னர் அரசு வருமானத்தை உத்தேசித்து இதை அரசே வாங்கி விற்கும் பழக்கமும் வந்தது.

இன்று புலிவாலைப் பிடித்த கதைதான். அரசுக்கு மருத்துவச் செலவு , உழைக்கும் ஆண்களின் உழைப்பு நேரம் இழப்பு, ஏழைப் பெண்கள், குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், எதிர்காலம் பெரிய கேள்விக்குறியானது இவை ஒரு பக்கம். கணிசமான வருவாய் மறுபக்கம். பாலியல் வன்முறைக்கு மது ஒரு முக்கிய காரணம் என்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் கூட இப்போது பூரண மதுவிலக்கு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். முன்பு சமூக ஆர்வலர்கள் மட்டுமே எழுப்பிய கோரிக்கை இது.

வளர்ச்சிக்குத் தேவையான வருமானமும் வேண்டும், மதுவிலக்கும் வேண்டும். தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கோடீஸ்வரர்களும் பெரிய நிறுவனங்களும் கண்டிப்பாக ஈடுகட்ட வேண்டும்.

கேரளா வழியில் பிற மாநிலங்கள் படிப்படியாக மது விற்பனையைக் குறைக்கும் பட்சத்தில் முதலில் கடைகள் மாவட்டம் முழுவதற்கும் ஒன்றே ஒன்று என்று ஏற்படுத்த வேண்டும். அங்கேயே அருந்தலாம். வாங்கிச் செல்ல முடியாது. வாடகை வண்டிகளில் மட்டுமே வர வேண்டும். சொந்த வண்டியில் வரக் கூடாது என்பதும் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

ஏழைக் குழந்தைகள் பெண்கள் இவர்களுக்கு சமூகம் செய்யும் மிகப்பெரிய உதவி இதை விட வேறில்லை.

(image courtesy: wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

One Response to கேரளாவின் பகுதி மதுவிலக்கு

  1. k.goopaalan says:

    மதுக்கடைகளை அதிகமாக்கி அதில் வரும் வருமானத்தை வைத்து இலவசங்கள் வழங்கியதன் மூலம் ஓட்டு வங்கியை உருவாக்கிய பெரும் புரட்சி நடந்து விட்டது.

    இனிமேல் மது அருந்த்த் தொடங்குபவர்களைத் தடுக்கவாவது முயற்சி செய்யலாம். இதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியம்.

    கோபாலன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s