விஜய் டிவியில் மருத்துவர் பற்றிய கருத்து பற்றி ஜெயமோகன் பதிவு- சில கேள்விகள்


download

விஜய் டிவியில் மருத்துவர் பற்றிய கருத்து பற்றி ஜெயமோகன் பதிவு– சில கேள்விகள்

விஜய் டிவியில் மருத்துவர் பற்றி “நீயா நானா” நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக ஜெயமோகனின் பதிவின் ஒரு பகுதி கீழே:

“டாக்டர் தொழில் முழுமையாகவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் எல்லைக்குள் வந்தாகவேண்டும் என்பதும், டாக்டர்களின் பிழைகள் தேவை என்றால் பொதுவான சமூகசேவகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவர்கள் கொண்ட குழுக்களால் பரிசீலிக்கப்படவேண்டும் என்பதும் இன்றைய முக்கியமான கோரிக்கைகளாக அமையவேண்டும். இந்திய மருத்துவம் மிகக்கடுமையான சட்டக்கண்காணிப்புக்கு உட்பட்டாகவேண்டிய சூழல் இன்றுள்ளது.

டாக்டர்களை எவ்வகையிலும் சிறப்பாக மதிக்கவேண்டியதில்லை, சேவையளிப்பவர்களாக மட்டும் அணுகுவோம். உலகம் முழுக்க டாக்டர்களை இன்று அப்படித்தான் அணுகுகிறார்கள். அந்த அணுகுமுறையே இன்றைய சூழலில் நமக்குப் பாதுகாப்பானது, லாபகரமானது. ஒருபோதும் ஒரு கட்டிடப்பொறியாளரை முழுமையாக நம்பி நம் பணத்தையும் பொருளையும் ஒப்படைப்பதில்லை. ஒருபோதும் டாக்டர்களையும் நம்பக்கூடாது. நம் உடலையும் உயிரையும் கொண்டு அதிகபட்ச லாபத்தை அடைய முயலும் ஒரு சேவை வணிகர் அவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.”

முதலில் ஜெயமோகன் கருத்தை நாம் வரவேற்க வேண்டும் என்பதைக் கூறி அவர் முன் வைக்கும் இரண்டு விஷயங்களில் சிறு விரிவு அல்லது மறுபக்கமான சில கேள்விகள் இருகின்றன. அவற்றைக் காண்போம்.

“சட்டக் கண்காணிப்பு” என்று ஒன்றைப் பரிந்துரைக்கிறார். இது சற்றே மேலெழுந்தவாரியானது. சட்டக் கண்காணிப்பு கிட்டத்தட்ட எதற்குமே இல்லை. நிதி நிறுவனம் ஆரம்பிக்கலாம். சுருட்டும் வரை என்ன கண்காணிப்பு இருக்கிறது? சுருட்டிய பிறகு புகார் தந்தால் சட்டம் பாயும். கட்டிடங்களை இனிமேல் வருடா வருடம் தணிக்கை செய்வார்கள் அல்லது கட்டிட வரைவுகளை சரிபார்ப்பார்கள் என்று நம்பலாம். உணவுக் கலப்படத்தில் என்ன கண்காணிப்பு இருக்கிறது? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன?

கட்டாயத் தணிக்கை என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இது விற்கப் படும் பொருட்கள் விஷயத்தில் தரத் தணிக்கையாகவும், சேவையில் தரம் மற்றும் நேர்மை பற்றிய தணிக்கையாகவும் அமைய வேண்டும்.

மருத்துவர்களை அவர்கள் துறை சார்ந்த நிபுணர்கள் குழுவே ஆண்டு முழுவதும் படிப்படியாக எல்லா மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை தரும் தனி நபர்களைத் தணிக்கை செய்யும் முறை வர வேண்டும்.

கணக்காயர்களை (Auditors). எடுத்துக் கொள்வோம். அவர்கள் ஒப்பம் இடப்பட்ட கணக்கு அறிக்கையில் ஏமாற்று இருந்தால் அவர்களே முதலில் தண்டிக்கப் படுவார்கள். அவர்களது அமைப்பான Chartered Accountants Instituteன் சட்ட திட்டங்கள் மிகக் கடுமையானவை. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கணக்கு வழக்கைத் தணிக்கை செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது.

மருத்துவர்கள் சேவை, மருத்துவமனைகளின் சேவை இவை இரண்டுமே தணிக்கைக்கு / கட்டாயத் தணிக்கைக்கு ஆட்படுத்தப் பட வேண்டும். சட்ட ரீதியான கண்காணிப்பு எதன் மீதும் இல்லை. எல்லாப் பொருட்களின் தரம், அனைத்து சேவைகளின் தரம் மற்றும் நேர்மை கட்ட்டாயத் தணிக்கைக்கு உள்ளாக வேண்டும். வழக்கறிஞர் சேவை, ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட எல்லாத் துறையினரும் கட்டாயத் தணிக்கைக்கு ஆட்பட வேண்டும். கண்காணிப்பு ஊழலின் புதிய வாசலைத் திறக்கவே வாய்ப்பு உண்டு.

அடுத்தது மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை நாம் ஒரு பீடத்தில் வைக்கத் தேவையில்லை என் கிறார். எழுத்தாளர்களே பீடங்கள் கிடைத்தால் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் போது மருத்துவரும் ஆசிரியரும் சும்மா விடுவார்களா?

பீடத்தை அந்த துறையின் சாதனையாளர்கள் ஜாம்பவான்கள் மறுதலிக்க வேண்டும்.

ஆனால் ஒளிவட்டத்தை, வணக்கத்துக்குரிய பீடத்தை மருத்துவர் ஆசிரிய எழுத்தாளர் இவர்களில் எத்தனை பேர் மறுதலித்தார்கள்?

ஆத்ம பரிசோதனைக்கான விஷயம் இது. சாமானிய ஆள் தான் மதிக்கும் (ஆதாரத்தோடோ அல்லது உணர்ச்சி வசப்பட்டோ) யார் காலிலும் விழத் தயார். நீ யார் காலிலும் விழாதே என்று கும்பிடப் படும் எந்த ஆளும் சொல்வதில்லை. என்ன முரண்!

(image courtesy: wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s