அரவிந்தர் ஒரு புரிதல்


அரவிந்தர் ஒரு புரிதல்

sa_cb04
அரவிந்தர் ஒரு புரிதல்

மூன்று தலைவர்களும் நம் அடையாளமும் என்னும் கட்டுரையில் காந்தியடிகள் நமது அரசியல் பாரம்பரியத்தின் அடையாளம், சமூக நீதிக்கு டாக்டர் அம்பேத்கரும் ஆன்மீகத்துக்கு ஸ்ரீஅரவிந்தரும் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல் ரீதியான விடுதலைக்கு இணையாகச் சமூக சீர்திருத்தங்களுக்கு காந்தி முன்னுரிமை கொடுத்தார். பல மாற்றங்களை அவர் கோரினார். தீண்டாமை ஒழிப்பு, கிராமப்புறத் தொழில்களுக்கு உரிய கவனம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அதே சமயம் இந்திய விடுதலை அவரது தலையாய கவனமாக இருந்தது. அம்பேத்கர் சமூக நீதிக்கு அரசியல் நிர்ணயச் சட்டத்தின் மூலம் ஒரு துவக்கத்தை நீண்ட போராட்டம் மூலம் எட்டினார்.

அரவிந்தர் இவை இரண்டுக்கும் இணையாக ஆன்மீகத்துக்குத் தம் வாழ்வை அர்ப்பணித்தார். அவர் ஆன்மீகம் குறித்து எழுதிய நூலை வாசித்து விரிவான கட்டுரை எழுத வேண்டும்.

அவர் ஆன்மீகத்தை நாடிய சூழல் சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்து தொடங்கியது மிகவும் முக்கியமானது. நாட்டு விடுதலைக்கு இணையாகத் தனி மனிதம் பெறும் ஆன்மீக எழுச்சி அல்லது விடுதலை அவருக்கு முக்கியமாகப் பட்டது. அவரின் காலத்தில் அன்னை என்று அன்புடன் அழைக்கப் படும் மிரா அல்ஃப்பாஸ்ஸா அம்மையாரால் துவக்கப் பட்டதே அரபிந்தோ ஆசிரமம். புதுச்சேரியில் அமைதி தவழும் ஆன்மீக மையம் அது.

ஆன்மீக விடுதலைக்கான தேடல் கண்டிப்பாக ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் அது ஒளிர்ந்து பிராகாசிக்காமலேயே போய் விடுகிறது. அது உள்ளொளியாக உணரப் பட ஒரு நீண்ட முயற்சி அல்லது போராட்டத்தை ஒவ்வொரு தனி மனிதனும் மேற் கொள்ள வேண்டும்.

கொல்கத்தாவில் விடுதலைப் போரில் பங்கேற்றுக் கைதாகி விடுதலையான போது இளம் வயது தான் அரவிந்தருக்கு. முப்பது வயது கொண்ட அவர் பின்னர் 40 வருடங்களுக்கு மேல் புதுச்சேரியில் தமது ஆன்மீகத் தேடலை நிகழ்த்தினார். அவர் நம் இயல்பான விழிப்பில் இருந்து ஒரு மேலான விழிப்புக்கு உயர்ந்து ஒரு பேரனுபவம் மற்றும் தரிசனம் கொள்ளும் பரிணாமமாகவே ஆன்மீகத்தைக் கண்டார். ஆசிரமத்தின் தளத்தில் உள்ள அவரது The Integral Yoga என்னும் நூலின் சாரம்சத்தின் ஒரு பகுதி:

The teaching of Sri Aurobindo starts from that of the ancient sages of India that behind the appearances of the universe there is the Reality of a Being and Consciousness, a Self of all things, one and eternal. All beings are united in that One Self and Spirit but divided by a certain separativity of consciousness, an ignorance of their true Self and Reality in the mind, life and body. It is possible by a certain psychological discipline to remove this veil of separative consciousness and become aware of the true Self, the Divinity within us and all.

Sri Aurobindo’s teaching states that this One Being and Consciousness is involved here in Matter. Evolution is the method by which it liberates itself; consciousness appears in what seems to be inconscient, and once having appeared is self-impelled to grow higher and higher and at the same time to enlarge and develop towards a greater and greater perfection. Life is the first step of this release of consciousness; mind is the second; but the evolution does not finish with mind, it awaits a release into something greater, a consciousness which is spiritual and supramental. The next step of the evolution must be towards the development of Supermind and Spirit as the dominant power in the conscious being. For only then will the involved Divinity in things release itself entirely and it become possible for life to manifest perfection.

மாற்றுத் திறனாளிகளில் பார்வையற்றவர்களிடம் ஒலியின் மூலம் தொட்டறிதலின் மூலமும் ஒன்றை அறிந்து கொள்ளும் திறன் அதிசயிக்கத்தக்க அளவில் இருப்பதைப் பார்க்கலாம். தொட்டவுடன் இது ஐந்து ரூபாய், இது பத்துரூபாய், இது புது ஒரு ரூபாய நாணயம், இது பழைய ஒரு ரூபாய் என்று அவர்களால் கூற முடியும். தொடுகையில் மற்றும் ஒலியில் அவர்கள் காண்பது தனி உலகு. சாதாரணத் திறன் கொண்டவருக்கு அவர்கள் அளவு அத்தகைய புரிதல் சாத்தியமே கிடையாது.

பேரானந்தம் என்று கூறுவது சரியாகப் பிடிபடாமற் போகலாம். முதன் முதலில் விமானப் பயணம் செய்யும் போது, முதன் முதலில் ஊட்டியில் அல்லது கொடைக்கானலின் உள்ள மலைச்சரிவுகளின் பேரெழிலைக் காணும் போது கண்டிப்பாக நாம் நாம் இது வரை கண்டவற்றை ஒப்பிட அது மிகவும் அரிய, மிகவும் ஆழ்ந்து ரசிக்கிற ஒன்று என்று உணருகிறோம் இல்லையா?

இப்படி ஒரு மேம்பட்ட அனுபவத்தை ஒரு பேரனுபவம் அல்லது பேரானந்தத்தை மனித மனம் எட்ட நீண்ட யோகப் பயிற்சியும் மன ஒருமையும் தேவை என்றே அரவிந்தர் கண்டார். மனித மனத்தின் பிரம்மாண்ட நிலையாக மேலான நிலையாக ஒரு சிகரத்தைத் தொட்ட நிலையாக அதைக் கொள்ளலாம்.

வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே அதைப் புரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து முடிக்கப் போகிறோம் என்பதே. எனது வாழ்க்கை, என் சுகம், என் துக்கம் என்று நான் என்னும் அகந்தை மட்டுமே மையமான வாழ்க்கை நமது. அகந்தை அல்லது நாம் துளி அளவாவது இல்லாமல் நாம் எதையுமே செய்ய முடியாது தான். ஆனால் அந்த அகந்தையே மாயை என்னும் ஒரு வலையை நமக்கும் ஆன்மீகத்துக்கும் நடுவே பின்னி நாம் முன்னகரும் போதெல்லாம் பின்னுழிக்கிறது. அன்பில் கூட உடமைப் பற்று உண்டு இதனால் அன்பின் தூய்மை கெட்டு அகந்தை அங்கும் நுழைந்து விடுகிறது. பற்றும் அகந்தையும் மிகுந்த அன்பு அன்பின் ஒரு முனையில் தொடங்கி அந்த அன்பு பிரபஞ்சம் முழுதும் எல்லா உயிரினத்தின் மீதும் விரிவதாக அமையாமலேயே போய் விடுகிறது. என் குடும்பம், என் காதலன் அல்லது காதலி, என் வளர்ப்பு நாய் என்று உடமைப்பற்றும் அகந்தையும் மனம் குறுகிக்கொண்டே போகவே வழி செய்கின்றன.

நான் என்னும் அகந்தையே மாயை. அதைத் தாண்டும் வரை ஆன்மீகம் இல்லை. பற்றைத் துறக்க அகந்தை அழிய வேண்டும். பற்றை விட்டு விடும் போது விரிந்து பரந்த பிரபஞ்சச்தின் எல்லா அங்கமும் உயிரினமும் நேசிக்கத் தக்கதாகவும், நல்வழி என்னும் புள்ளியில் மட்டுமே இணையத்தக்கதாகவும் தென்படும். பற்றில்லா அன்பு, ஆதிக்கம் இல்லா அன்பு, உலகமே ஒரு குடும்பம் என் குடும்பம் என்று விரியும் அன்பு இவை ஆன்மீகத்தில் மட்டுமே சாத்தியம்.

கீதையின் பல நெறிகள் அரவிந்தரின் ஆழ்ந்த அவதானிப்புக்கும் ஏற்புக்கும் ஏற்றவையாக இருந்தன. அவருக்கு சத்யாவான் சாவித்திரியின் கதை ஒரு பெரிய காவியமே எழுதுமளவு ஈர்ப்புள்ளதாக இருந்திருக்கிறது. மரணம், இருப்பு இவற்றின் தொடர் சங்கிலியையே சவாலாக ஏற்ற ஒரு பெண்ணின் புராணக் கதை அது.

ஒரு ஆன்மீகவாதி , ஒரு துறவி சமுதாயத்துக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டு என்ன? அவர் பற்றற்றவராக, ஆன்மீகத்தில் லயித்தவராக இருப்பதே நம் எல்லோருக்கும் சாந்தமும் துறவுமான ஒரு வாழ்க்கை சாத்தியமென்பதை உணர்த்துகிறது. அவரது ஒரு வார்த்தை சூசமாகப் பொருள் உண்ர்த்தினாலும் நாம் ஆன்மீகத்தின் மீது ஈர்க்கப் படுபவராக அவரின் வாழ்வால் அவரின் இருப்பால் நம் மொத்த சமூகத்துக்கும் ஒரு கௌரவமும் மதிப்பும் கூடியதாக உணர்கிறோம்.

அரவிந்தர் காலத்துக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் அதனால் தான் நம்மை அவர் குறித்து சிந்திக்க அவரைப் புரிந்து கொள்ளத் தூண்டுகிறார்.

(image courtesy: aurobindoashram.org)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s