திண்டிவனம் முதல் தியான்மென் ஸ்கொயர் வரை


300px-Tiananmen_Square,_Beijing,_China_1988_(1)

திண்டிவனம் முதல் தியான்மென் ஸ்கொயர் வரை

திண்டிவனம் உட்பட கடலூரை ஒட்டிய பல ஊர்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் நடத்தும் ஒரு நடைபயணம் மற்றும் மாநாட்டை மையப்படுத்தி எஸ்ஸார்ஸி ‘அலைகள்‘ என்னும் சிறுகதையை திண்ணை இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். அந்தச் சிறுகதையை ஒட்டி எனக்குள் நிகழும் தொடர் சிந்தனையே இந்தக் கட்டுரை.

எஸ்ஸார்ஸி என்னும் எஸ்.ராமச்சந்திரன் என்னை சிறு பத்திரிக்கைகள் மற்றும் சீரிய இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தவர். கம்யூனிஸம் பற்றிய பல வருத்தங்களை நாங்கள் பகிர்ந்துள்ளோம். நான் தொழிற்சங்கங்களின் மீது விரக்தி கொண்டு விலகி நிற்பவன். அவரோ 40 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் தீவிரப் பணியாற்றிவர். ஜனநாயக விரோத அரசு ஒன்றின் படுகொலையை மையப் படுத்தி அவர் எழுதிய கதையே அலைகள். உலகையே உலுக்கிய மாபெரும் படுகொலை தியான்மன் சதுக்கத்தில் சீனாவின் பீஜிங் நகரில் நடந்தது.தியான்மன் சதுக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் (4.6.1989) சீனாவில் கருத்துரிமை கேட்டு ஆர்பரித்த மாணவர்கள்/ பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கில் அழிக்கப் பட்டார்கள். ஜனநாயகமும் கம்யூனிஸமும் சேர்ந்திருக்கவே முடியாது என்பதில் கம்யூனிஸம் மட்டுமே கட்சி அதன் ஆட்சி மட்டுமே ஆட்சி என்றிருக்கும் எந்த நாடும் விதிவிலக்கல்ல. வட கொரியா போன்ற சிறு நாடுகளிலும் இதைக் காணலாம்.

இது தொழிற்சங்கத்தின் மூலம் கம்யூனிஸ ஈர்ப்புக் கொண்ட சுயசிந்தனை உள்ள பல தொழிலாளிகளுக்கு ஏற்புடையதே அல்ல.

கம்யூனிஸம் மையப் படுத்தும் வர்க்கப் பிளவு அல்லது வர்க்க அடிப்படையிலான சிந்தனை இன்றும் மாறிய பாடில்லை. வலதுசாரிகள் கண்ணை மூடிக் கொண்டு கடந்து விடும் நெருப்பு ஆறு இது.

பூர்ஷூவா என்றும் கம்யூனிஸ்ட் என்றும் பிரித்துப் பார்ப்போரிலும் நான் குறிப்பிட்ட சுயசிந்தனை உள்ள தொழிற்சங்கவாதிகள் இருக்க மாட்டார்கள்.

நான் என் வசதிகள் என்று வரும்போது பூர்ஷுவாதான். என் உரிமைகள் என்று வரும் போது தீவிர கம்யூனிஸ்டாக்கும் தோழரே!

கம்யூனிஸ அணுகு முறை என்றாலே பாயும் வலது சாரிகளுக்கும் மற்றவருக்கும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.
சுமார் இரண்டு வருடத்துக்கு முன் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களின் வீடுகளும் உடமைகளும் ஆக்கிரமிக்கப் பட்டன என்று ஒரு வதந்தி காட்டுத் தீ போலப் பரவியது. அப்போது ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத் தொழிலாளிகள் எல்லா மாநிலங்களில் இருந்தும் தம் சொந்த மாநிலத்துக்கு அவசர அவசரமாகப் பயணித்தார்கள். ஒரு கட்டத்தில் தமிழ் நாட்டில் தொழிலாளிப் பற்றாக்குறை மிகவும் உணரப்பட்டது.

இப்படிப் பட்ட நாட்களில் நான் திருச்சிக்கு அடிக்கடி பயணிப்பேன். ஒரு ஞாயிறு அன்று மலைக்கோட்டை ரயிலில் நான் இருந்தேன். கையெட்டும் தூரத்தில் உள்ள அடுத்த நடைமேடையில் ஹவுரா வரை செல்லும் வண்டி வந்தது. முன்பதிவில்லாத பெட்டியில் கூலித் தொழிலாளிகள் முண்டி ஏறுவதும் பல பெண்கள் வலி தாங்க முடியாமல் அலறியபடியே ஏறி ஒரு மூட்டை போல அடை பட்டதையும் காணும் போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

கூலிகளுக்கும், ஏழைத் தொழிலாளிகளுக்கும் யார் வருத்தப் படுகிறார்கள். நான் சாப்பிடும் உணவகத்தில், நான் வாங்கும் புதிய வீட்டின் கட்டுமானத்தில் எத்தனை தொழிலாளிகள் அரை வயிற்றை நிரப்பும் கூலிக்காக உழைக்கிறார்கள்.

இவர்கள் ஒரு வர்க்கமாகத் தானே இருக்கிறார்கள். இவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்னும் வர்க்கத்தில் தானே நான் இருக்கிறேன். இந்த வர்க்கம் சார்ந்த அவல நிலையும் வர்க்கம் சார்ந்த கெடுமதியும் என்றைக்கும் மாறப் போவதில்லை.

கம்யூனிஸத்தின் பொது உடமை மனித இயல்புக்கு நேர் எதிரானது. அது நிராகரிக்கப் பட்டதும் அதனாலேயே. மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் வர்க்கம் சார்ந்த சிந்தனை. வருமான அடிப்படையில் வர்க்கங்கள் என்னும் கம்யூனிஸ வாதம் மிகவும் வலுவானது. மனசாட்சி, மனித நேயம், கருணை என்னும் வார்த்தைகளால் இந்தத் தொழிலாளிகளுக்கு என்றுமே விடிவு காலம் வராது. வலுவான கருத்து அவர்களின் நலனுக்காக உருவாகி அரசு மட்டுமே அவர்கள் குறைந்த பட்ச வசதி, கல்வி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்ய வேண்டும். அந்தக் கனவு ஒன்றுக்காகவே என்னால் கம்யூனிஸத்தின் மீதுள்ள பிடிமானத்தை விட முடியவே முடியாது.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to திண்டிவனம் முதல் தியான்மென் ஸ்கொயர் வரை

  1. ESSARCI says:

    சத்யானந்தன் அவர்கட்கு
    எல்லார்க்கும் எல்லாம் என்பது மனத்தளவில் இன்னும் ஒரு மாயையாகவே காட்சிதருகிறது.எதைச்சொல்வதற்கும் ஒரு ஆளுமை என்னும் ஒரு அகப்பொருள் உடனடித்தேவையாகி நிற்கிறது.மனித நேயம் தூக்கிப்பிடிக்க மார்க்சீயத்தின் அரசியல் குறுக்கே வந்து வழி மறிக்கிறது.
    இன்றைய சீனாவின் உயரம் நடப்பு அரசியலின் விளைச்சல்.. மனித நேயம் பொதுவுடமையைத்தவறாகப்பயிலுபவர்களால் மிதிபடலாம்.பொடியாக ப்போவது கெடு அரசியல் மட்டுமே.மனித நேயம் உலகு உள்ளவரை உயிர்ப்போடு உலாவரும்
    ‘தனக்கென முயலா நோன்தாள் பிறைர்க்கென முய்லுநர் உண்மையானே உண்டாலம்ம இவ்வுலம்’ என்கிற வாய்மை மட்டுமே பூரணாமாய் வெல்லும்.

    அன்பு
    எஸ்ஸார்சி..

    • தங்களைப் போன்று மனித நேயம் தழைக்க விழைவோர் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் அந்த ஆழ்ந்த விருப்பமும் கனவும் வெல்லும். கூலிகளாகவும், வழியற்றோராகவும் இன்று பரிதவிக்கும் கோடிக்கணக்கானோர் தமக்கு உரிய இடத்தையும் வருவாயையும் கண்டிப்பாக ஒரு நாள் பெறுவார்கள். அரசு ஊழியரையும், தனியாரிடம் வேலை செய்யும் தினக்கூலிகளையும் ஒப்பிடும் “அலைகள்” சிறுகதை தங்கள் படைப்பில் ஒரு மைல் கல். நன்றி. அன்பு சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s