பெண்களைக் கவர்ச்சிப் பொருட்களாகச் சித்தரிப்பதில் இந்தியத் திரைப்படங்கள் முன்னிலை


Varma_Reverie

பெண்களைக் கவர்ச்சிப் பொருட்களாகச் சித்தரிப்பதில் இந்தியத் திரைப்படங்கள் முன்னிலை

Geena Davis Institute on Gender in Media என்னும் அமைப்பு ஐக்கிய நாடுகளின் பெண்ணுரிமைக்கான மையத்துக்காக ஒரு ஆய்வு நடத்தியது அதில் பெண்கள் எப்படி உலகத் திரைப்படங்களில் சித்தரிக்கப் படுகிறார்கள் மற்றும் திரைப்படத்தொழிலில் அவர்களின் இடம் எங்கே இருக்கிறது என்பவை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

பெண்களை கவர்ச்சிப் பொருளாகச் சித்தரிப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முதலிடம் கிடைக்காமற் போய்விட்டது. அவ்வளவே. ஜெர்மனியும் ஆஸ்திரேலியாவும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைத் தட்டிக் கொண்டு போய் விட்டன. இந்த இரண்டு நாடுகளும் இன அடிப்படையிலான அணுகுமுறைக்குப் பெயர் பெற்றவை என்பதை இங்கே நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் 35% படங்களில் பெண்கள் அரை குறை ஆடைகளுடனேயே சித்தரிக்கப் படுகின்றனர். உலகில் பாதியுள்ள பெண்கள் திரைப்படத் தொழிலில் மற்றும் திரைப்படங்களில் காட்டப் படும் கதாபாத்திரங்களில் எப்படிக் காட்டப் படுகிறார்கள் என்பது குறித்த கண்டுபிடிப்புகள் இவ்வாறு:

1. திரையில் உரையாடும் பாத்திரங்களில் 31% மட்டுமே பெண்கள். இது உலக அளவிலான சராசரி சதவீதம். இதை விடவும் குறைவாகவே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் படங்களில் 23.6% ஆகவும், இந்தியப் படங்களில் 24.9% ஆகவும் உரையாடும் பெண் கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள்.

2.சாகசம் புரியும் கதாபாத்திரங்களில் உலக சராசரி 23% மட்டுமே பெண்கள்.

3. உலக அளவில் திரைப்படத் தொழிலில் படத்தயாரிப்பாளரில் 20.5%, இயக்குனரில் 7%, கதையாசிரியர்களில் 19.7% மட்டுமே பெண்கள்.

4.பெண் கதாபாத்திரங்கள் நிறைய இருப்பது பெண் இயக்குனரின் படங்களில் தான்.

5.ஆண் கதாபாத்திரங்களைப் போல ஐந்து மடங்கு பெண் கதாபாத்திரங்கள் பாலியல் கவர்ச்சிக்காக அரை நிர்வாண முழு நிர்வாணமாகக் காட்டப் படுகிறார்கள். 13ல் இருந்து 39 வயது வரையிலான நடிகைகள் இப்படி நடிக்க வைக்கப் படுகிறார்கள்.

6.பணிபுரிபவர்களாகச் சித்தரிக்கப் படுவோரில் 77.5% ஆண்கள். 22.5% பெண்கள். உயர்பதவியில் இருக்கும் பெண் கதாபாத்திரங்கள் 13.9%. அரசியல்வாதிகளாகக் காட்டப்படுபவர் 9.5%. நீதிபதி- ஆண்13 பெண் 1, பேராசிரியர் ஆண் 16 பெண் 1, மருத்துவர்கள் ஆண் 5 பெண் 1, உயிரியல் ஆராய்ச்சியாளர் ஆண் 7 பெண் 1.

நிலைமை ஏன் இப்படி பெண்களுக்கு எதிரானதாக ஆணாதிக்கம் மிகுந்ததாக இருக்கிறது? இந்தக் கேள்விக்கு பதில் தெரிய வேறு சில கேள்விகளுக்கும் விடை தெரிய வேண்டும்.

பெண் அமைப்புகள், படித்த பெண்கள் ஏன் பெண்களை விளம்பரம் மற்றும் திரைப்படங்களில் கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை?

மிகவும் பாதிப்படையும், நடிகையர் கூட ஏன் இவற்றை ஒன்று கூடிக் கண்டிப்பதில்லை?

ஊடகங்களில் அறிவு பூர்வமான விவாதத்துக்குரிய விஷயங்களை ஏன் அதிக அளவில் பெண்கள் முன் வைப்பதில்லை?

பெண் எழுத்தாளர்கள் ஏன் ஒரே குரலில், தொடர்ந்து ( அதாவது நிலைமை மோசமாக இருப்பதால் தொடர்ச்சியாக) பெண்கள் ஆணுக்கு இணையாக அறிவுத்தளம் மற்றும் பிற துறைகளில் பங்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்துதில்லை?

சமூக அவலங்களைக் கண்டிப்பதில் ஆண்களுக்கு இணையாக ஏன் பெண்கள் குரல் கொடுப்பதில்லை?

அழகு சாதனம், ஆடைகள், அணிகலன்கள் உட்பட நவ நாகரீகமான விற்பனைப் பொருட்களுக்கான மிகப்பெரிய வணிகம் பெண் உபயோகிப்பாளர்களைக் குறி வைத்து இயங்குகிறது. அதில் காட்டும் ஆர்வமும், அக்கறையும் ஆணுக்கு இணையாக எல்லாத் துறைகளிலும் மெலெழும்ப வேண்டும் என்னும் துடிப்பில் ஏன் இல்லை?

பெண்களைத் தொலைக்காட்சித் தொடர்கள் எப்படிச் சித்தரிக்கின்றன? இந்த மட்டமான சித்தரிப்பில் பெண்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?

விழிப்புணர்வை மையப்படுத்தி பெண்களுக்கு இடையே விவாதங்கள் நிகழ்கின்றனவா?

மதம் சாராத பெண் அமைப்புகள் எத்தனை? எந்த அளவில் இயங்குகின்றன?

கேள்விகளுக்கு முடிவே இல்லை.
– See more at: http://www.unwomen.org/en/news/stories/2014/9/geena-davis-study-press-release#sthash.AzvtQo7V.dpuf

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.