Monthly Archives: October 2014

ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி


ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி ராஜம் கிருஷ்ணனின் “சூரியக் கதிர்கள்” என்னும் சிறுகதையை முதலில் வாசிப்போம். சமூக மாற்றத்துக்கான எழுத்துகள் பன்னெடுங்காலமாகவே குறைவு. சமூகம் புதிய சிந்தனையில், தனிமனித உரிமைகளை மதிக்கும் மனித உறவுகளில் பளிச்சிட வேண்டும் என்னும் கனவு உள்ள எழுத்தாளர்களே மிகக் குறைவு. ஒரு அனாதையான சிறுவன் ஒரு ஆசிரியையால் வளர்க்கப் படுகிறான். … Continue reading

Advertisements
Posted in தனிக் கட்டுரை | Leave a comment

தீபாவளி கொண்டாடுவது என்னும் குழந்தைப் பருவ நீட்சி


தீபாவளி கொண்டாடுவது என்னும் குழந்தைப் பருவ நீட்சி என் குழந்தைப் பருவத்தில் நான் இதைக் கொண்டாடினேன் – நீயும் கொண்டாடு என்று பல பண்டிகைகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நீட்சி பெறுகின்றன. என் குழந்தைப் பருவம் மீண்டும் கொண்டாடப் படுகிறது என்னும் அகந்தையில் ஒரு குடும்பமே சமூகமே கொண்டாடிக் கொண்டே போகிறது. தீபாவளியின் புகையும் … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சிங்களவர் திராவிடர்களா ?


சிங்களவர் திராவிடர்களா ? ஆம் என்ற கருத்தை முன் வைக்கிறது காலச்சுவடு அக்டோபர் 2014 இதழில் பக்தவத்சல பாரதியின் ‘திராவிடச் சிங்களவர்’ என்னும் கட்டுரை. நெருங்கிய உறவினர் இடையே நிகழும் திருமணங்கள் திராவிடம் என்னும் பகுதியில் உள்ள இனங்களில் பாரம்பரியமான ஒன்று. இதற்கு இராகுவார் முறை என்று பெயர். இதை சிங்கள சமூகம் பிற திராவிட … Continue reading

Advertisements
Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

சென்னையில் மழைக்காலம்


சென்னையில் மழைக்காலம் ஒரு நபரை நாம் சந்திக்கக் கூடாத தருணங்கள் உண்டு. அவரின் இயல்பைப் பொருத்து அந்த சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒரு நகரில் இருக்கக் கூடாத காலங்கள் உண்டு. சென்னையில் அது மழைக்காலம் சென்னை என்னும் நகரத்திலேயே நிரந்தரமாக இருக்க முடிவு செய்தவர்கள் அதற்காகத் தினமும் (குறைந்த பட்சம்) ஒரு முறை வருத்தப் படும் … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment

“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை


“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை மொழிபெயர்ப்பாளர்கள் நமக்குச் செய்யும் உதவி மகத்தானது. அவர்கள் இலக்கியத்தை நாடு, கண்டம், மொழி, மதம், இனம் எல்லாம் தாண்டி வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இருந்தாலும் மட்டமான சில படைப்புகளைத் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மொழிபெயர்த்து வாசகர்கள் மனதை வருத்தப் படச் செய்கிறார்கள். இனிய உதயம் அக்டோபர் … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தன்னம்பிக்கைக்கு வயதில்லை – காணொளி


தன்னம்பிக்கைக்கு வயதில்லை – காணொளி 89 வயது மூதாட்டி உற்சாகமாக லாகவமாகச “ஜிம்னாஸ்டிக்ஸ்” செய்யும் காணொளிக்கான இணைப்பு இது. தன்னம்பிக்கை எல்லாத் தடைகளையும், முதுமையும் வெல்லும் என்பதையே இது காட்டுகிறது. பகிர்ந்து கொண்ட ஜிமெயில் நண்பர்களுக்கு நன்றி. Advertisements

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

மலாலாவுக்கு நோபல் பரிசு- பெண் குழந்தைகளுக்கு உலகின் ஆதரவு


மலாலாவுக்கு நோபல் பரிசு- பெண் குழந்தைகளுக்கு உலகின் ஆதரவு மலாலாவை சிறுமி என்றே குறிப்பிடலாம். அளப்பரிய நெஞ்சுரத்துடன் தாலிபான் களின் தடைகளை மீறிப் பள்ளிக்கூடம் சென்று தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடியவர். உடல் நலம் பெற்றதும் இங்கிலாந்தில் இருந்து உலகக் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடி வருபவர்.இவருடைய நெஞ்சுரம் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப் பட வேண்டிய … Continue reading

Advertisements
Posted in Uncategorized | Tagged | Leave a comment

கூலிக் குழந்தைகளை மீட்கப் போராடுபவருக்கு நோபல் பரிசு


கூலிக் குழந்தைகளை மீட்கப் போராடுபவருக்கு நோபல் பரிசு பல அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடித்துத் தொடர்ந்து குழந்தைகள் நலத்துக்காக, குழந்தைகள் கூலிகளாக்கப்படுவதைத் தடுப்பதற்காகப் போராடி வரும் சத்யாத்திரி என்னும் இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடும் இவர் 78000க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகளான குழந்தைகளை … Continue reading

Advertisements
Posted in தனிக் கட்டுரை | Tagged , | Leave a comment

இந்தியா பாகிஸ்தான் இருவரின் பொது எதிரி போர்- ஹிந்து தலையங்கம்


இந்தியா பாகிஸ்தான் இருவரின் பொது எதிரி போர்- ஹிந்து தலையங்கம் போர் இந்தியா பாகிஸ்தான் இருவருக்குமே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று 9.10.2014 அன்று தமிழ் ஹிந்துவின் தலையங்கம் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. பாகிஸ்தான் அரசியலில் ராணுவம் வகிக்கும் முக்கியப் பங்கு – அவர்கள் இந்திய வெறுப்பையே மையமாகக் கொண்டு செயற்படுவதையும் பத்திரிக்கை விமர்சிக்கிறது. அதே சமயம் … Continue reading

Advertisements
Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

அக்டோபர் 2014 உயிர்மை இதழில் கவிதைகள்


அக்டோபர் 2014 உயிர்மை இதழில் கவிதைகள் கவிஞராகவே துவங்கி, பத்திரிக்கை ஆசிரியர் என்னும் சுமையை ஏற்ற பின்பும் கவிதையை விடாமல் படைத்து வருபவர் மனுஷ்ய புத்திரன். ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும், அறிவு ஜீவியாகவும் பல சமாதானங்களை, அரசியல் நடவடிக்கைகளை அவர் மேற் கொள்கிறார். அவை ரசிக்கத் தக்கவையே அல்ல. ஆணால் ஒரு கவிஞராக மிகவும் செறிவுள்ள … Continue reading

Advertisements
Posted in கவிதை | Tagged , , | Leave a comment