திருவண்ணாமலை ரமணர் தரும் ஆன்மீக ஸ்பரிஸம்


திருவண்ணாமலை ரமணர் தரும் ஆன்மீக ஸ்பரிஸம்

கடந்த இருபது வருடங்களில் சுமார் பத்து முறை தான் திருவண்ணாமலை போயிருப்பேன். பௌர்ணமி அன்று கிரிவலம் செய்ததில்லை. அந்த ஆசையுமில்லை. போகும் போதெல்லாம் கிரிவலம் செய்து கொண்டிருந்தேன். கிரிவலத்தின் போது மலையில் பல்வேறு தோற்றங்கள் மிகவும் ஈர்ப்பவை. 2012ல் சென்ற போது ரமணர் இருந்த பல இடங்களை, குறிப்பாக குகைகளைப் பார்த்தேன். இந்த முறை விரூபாட்சீஸ்வரர் குகை, மற்றும் ஸ்கந்தாசிரமம் இரண்டுமே மாலை 4 மணிக்கு மூடப்பட்டுவிட்டன. நான் போகும் போதே நான்கரை மணியாகி விட்டது. ரமணர் ஆசிரமத்துக்கும் கோயிலுக்கும் மட்டுமே போய்விட்டுத் திரும்பினேன்.

ஒரு வருடம் இடைவெளியானாலே மனதில் ஒரு ஏக்கம் ஏற்படும். நாளாக நாளாக ஒரு வெறுமை தட்டும். திருவண்ணாமலைக்குப் போவது இரண்டு நாள் தேவைப்படும் திட்டம். ஒரே நாளில் சென்று வருவது உடலுக்குப் பெரிய சவாலே.

ரமணர் இருந்த இடங்களில் கண்டிப்பாக ஆன்மீகத்தின், சாந்தத்தின் ஸ்பரிஸம் நமக்கு நிகழ்கிறது. திருவண்ணாமலைக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இந்த முறை எடுத்த புகைப்படங்களில் சிலவற்றைப் பகிர்கிறேன்.

கோயிலின் சில தோற்றங்கள்:

2014-10-01 16.14.12

2014-10-01 16.27.15

2014-10-01 16.12.40

மலையில் இருந்து கோயிலின் தோற்றம்:
2014-10-01 16.54.10</a

மலையின் சில தோற்றங்கள்:

2014-10-01 16.54.22

2014-10-01 17.00.50

2014-10-01 17.02.57

2014-10-01 17.11.47

ரமணர் தவம் செய்த குகைகளில் மிகவும் உயரமான இடத்தில் உள்ளது ஸ்கந்தாஸ்ரமம் என்னும் குகை தான். அவ்வளவு உயரம் சென்று எப்படி ரமணரின் அம்மா அவருக்கும் சீடர்களுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்தார் என்பது வியப்பே, ஏறுவதில் நமக்கு மிகவும் சவாலானா ஒன்று அந்த குகை. ரமணாசிரமத்தில் இருந்து அங்கே போகப் பாதை அமைத்துள்ளார்கள். ஒரு தடம் இது:

2014-10-01 17.07.33

ரமணாசிரமத்தின் சில படங்கள். ரமணர் இருந்த அறையை அவர் அமரரான போது எப்படி இருந்ததோ அப்படியே வைத்திருக்கிறார்கள். கைத்தடி அருகே உள்ள சிறிய போட்டோ அவர் மதுரையில் ஊரை விட்டுக் கிளம்பும் போது அம்மாவுக்கு எழுதிய கடிதம். மிகுந்த கூட்டமாக இருப்பது அவரது சமாதி இருக்கும் தியான மண்டபம். மாலை வேளைகளில் பஜனை நடக்கிறது. பகல் பொழுதில் அமைதியாக தியானம் செய்ய இயலும்.

2014-10-01 17.30.51

2014-10-01 17.28.47

2014-10-01 17.27.08

பாதாள லிங்கேஸ்வரர் சன்னிதி கோயிலில் நுழைந்த உடன் நந்திக்கு வலதுபக்க வளாகத்தில் தரைக்குக் கீழே உள்ளது. பெரிய பீடத்தின் மேல் லிங்கம் உள்ள சன்னதி அது. பீடத்தைச் சுற்றி ஒருவர் நடக்கக் கூட இடம் இருக்காது. அங்கே மாதக் கணக்கில் எப்படி ரமணர் தவம் செய்தார் என்பது மிகவும் வியப்பளிப்பது. அங்கே இருந்த போது தான் அவர் பூச்சிகளால் கடிக்கப் பட்டு ஒரு காலின் நடக்கும் திறனைப் பாதி இழந்தார்.

2014-10-01 19.00.01

2014-10-01 18.58.59

ஞானத்தைத் தேடுவது மிகவும் அந்தரங்கமானது. விடுதலை என்பது தேடலின் தீவிரத்தை அதற்காகத் தேடுபவர் தரும் அர்ப்பணிப்பைப் பொருத்தது. ரமணர் வாழ்க்கை அந்தத் தேடலின் ஆகச்சிறந்த உதாரணம்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s