எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதை- நான்


261007_afp_Guevara1
எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதை- நான்

இனிய உதயம் செப்டம்பர் 2014 இதழில் மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதையான “நான்” என்னும் கதையை மொழிபெயர்த்துள்ளார்.

சிறுகதைக்குள் போவதற்கு முன்பு பின் நவீனத்துவம் பற்றிய ஒரு எளிய புரிதலைப் பகிர்வோம். செவ்விலக்கியம் உருவம் மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. பாரம்பரியம் என்று கூறுவதை விட ஒரு வரையறுக்கப் பட்ட மாதிரியாகவே செவ்விலக்கியங்கள் இருந்தன. செவ்விலக்கியம் ஒரு லட்சிய நாயகன், நாயகி மற்றும் ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை முறை மற்றும் அதற்கு மாறுபட்டவர்கள் என இரு திட்டவட்டமான பாத்திரிப் படைப்புகளைக் கொண்டிருந்தது. அதாவது நாயகன், வில்லன்- நல்லவன் கெட்டவன், லட்சியவாதி- தீய மனம் கொண்டவன் என பகுக்கப் பட்ட கதாபாத்திரங்களின் கதைகளைக் கொண்டிருந்தது. காவியங்கள், புராணங்கள் தொடங்கி 15ம் நூற்றாண்டு வரை செவ்விலக்கிய காலம் எனக் கருதப் படுகிறது. மனிதனின் இரு பக்கங்கள், சமுதாயத்தில் லட்சியவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் வலிமையைப் பொருத்து மாறும் எனப் பல முனைகளோடு நவீனத்துவ காலம் வந்தது. யாதார்த்தக் கதைகள் இந்தக் கால கட்டத்தின் முக்கிய வடிவாமாக இருந்தன. உருவமும் உள்ளடக்கமும் மக்களை நெருங்கியவையாக, மனித வாழ்க்கையை நெருக்கமாகப் பிரதிபலிப்பவையாக மாறின.

பின் நவீனத்துவம் பற்றிப் பார்க்கும் முன் செவ்விலக்கிய நவீனத்துவக் கால கட்டம் என்று வைத்துப் பார்ப்பதை விடவும் பிரதிகளின் உருவ உள்ளடக்க அடிப்படையில் பார்க்க வேண்டும். புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ சிறு கதையை செவ்விலக்கியத்திலிருந்து நவீனத்துவத்துக்கு இலக்கியம் பரிணாமம் பெற்றதற்கு ஆகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். கதையைப் பொருத்து அல்லது அதன் மையக் கருவைப் பொருத்து நம் தேர்வு செவ்விலக்கிய வடிவமோ நவீனத்துவ வடிவமோ எதுவாகவும் இருக்க முடியும்.

1800களில் இருந்தே பின் நவீனத்துவம் ஐரோப்பாவில் தொடங்கியது எனலாம். 1900களில் தான் உலகெங்கும் பின் நவீனத்துவம் ஒரு படைப்பு முறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. பின் நவீனத்துவத்துக்கான ஆக எளிய ஆனால் சரியான விளக்கம் -எழுபதுகளில் மிஷெல் ஃபூக்கோ கூறியது: ” வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை, தருக்கமும் மறுப்பும் அற்றது. பன்மையை வரவேற்பது. அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது. ஒப்புதல் உள்ளது. அதே நேரத்தில் தனிப்படுத்துவதை உபகரணமாகக் கொண்டது. பாண்டித்ய விதிகளுக்குள் கட்டுப்படாதது. தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை. ” பின் நவீனத்துவ புனைவிலக்கியத்துக்கு இதை விடப் பொருத்தமான விளக்க உரை இருக்க முடியாது.

மனித வாழ்க்கை யதார்த்தமானதாக இல்லை. பின்னர் எப்படி இருக்கிறது? முரண்களின் வடிவமாகவே இருக்கிறது. தண்டவாளத்துக்குள் செல்லவில்லை. நல்லவன், கெட்டவன், இரண்டுமானவன், அறிஞன், மூடன், ஆண், பெண், உறவு, அன்னியன் யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் நாம் எதிர்பார்க்கக் கூடிய தண்டவாளத்தில் செல்வதில்லை. அவர்களை நம்மால் யூகிக்க முடியாது. என்னையே என்னால் பிரித்து அறிய முடியாது.

இப்படி இருக்கும் போது கதையில் மட்டும் எல்லாமே தண்டவாளத்தில் சரியாகப் போய் பின்னர் தடம் மாறியோ அல்லது சரியான இடத்துக்குப் போயோ முடியுமா? வாழ்க்கையின் விடையில்லாக் கேள்விகளுக்கு விடை கூறுவதற்காக எழுத்தாளன் எழுதவில்லை. அவன் வாசகனை விட இன்னும் நெருங்கி அந்தக் கேள்விகளால் காயமுறுகிறான்- வியப்புறுகிறான் – சலிப்புறுகிறான் – நம்பிக்கை கொள்கிறான் – அவநம்பிக்கையில் கசப்பாக எழுதுகிறான்.

மிகப்பெரிய அச்சம், துக்கம் இவை ஒருவரை ஆட்கொள்ளும் பொழுதோ அல்லது தத்துவாத்தமான சிந்தனையின் பொழுதோ தெளிவான உருவங்கள், விவரங்கள், சூழல்கள், கதாபாத்திரங்கள் உண்டா? இல்லை.

ஒருவர் மிகவும் சுவை பட ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்வார். அதில் அவர் அதிகம் ஆழும் போது கோர்வையில்லாத சொல்லாடல்களும் வருணனைகளும் விவரங்களும் வரும். கேட்பவர் அவரை நிறுத்தாமல் அதைப் புரிந்து கொள்ள முயலுவார்.

பின் நவீனத்துவம் என்னும் கதை சொல்லும் முறையில் படைப்பாளி வாசகன் பாத்திரம் மூன்றும் நிறையவே இடைவெளியுடன் இருப்பது சாத்தியம் இல்லை. பிரதிக்குள் மூவரும் வெவ்வேறு புள்ளிகளில் உலாவுவர்.

ஓவியனாக முடியாமல் மாச சம்பளம் வாங்கும் ஒருவன் இறுதியில் போதைக்கு அடிமையாகிறான். அவன் நினைவலைகளில் செகுவேரா முதல் மகேஷ் யோகி, சாய்பாபா வரை நிறைய பேர் வந்து போகின்றனர். தன்னில் அவர்களைக் காண்கிறான் அவன்.பின் நவீனத்துவம் பற்றிய புரிதலுக்கு ஏற்ற கதை இது.

(image courtesy:photobucket.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s