யேசுதாஸ் – யானைக்கும் அடி சறுக்கும்


993052_10151549973557998_269977177_n

யேசுதாஸ் – யானைக்கும் அடி சறுக்கும்

நேற்று தொலைக்காட்சியில் ஒரு விவாதம். பெரியவர் யேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் அணிய வேண்டாம் என்னும் கருத்துக் கூறியது தவறா சரியா என்று ஒரு விவாதம் வந்தது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவர் செய்து விட்டார். பண்பாளரும், மத நல்லிணக்கத்தின் அடையாளமானவரும், அபூர்வமான இசைக் கலைஞருமாவார். அவர் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ள இயலாதது ஆணாதிக்கம் மிகுந்தது என்றே கொள்ள வேண்டும். அவர் பழமைவாதி என்று கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

இருந்தாலும் உடைக் கட்டுப்பாடு பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டும்.

உடைக் கட்டுப்பாடே கிடையாது – ஆனால் நாம் அனுசரிக்கிறோம். ஆண் பெண் எல்லோரும் எல்லா வயதினரும். எங்கெங்கே? ஒரு துக்கம் நிகழ்ந்து விட்டது. நாம் விசாரிக்கப் போகிறோம். ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருக்கிறார் – அவரைப் பார்க்கப் போகிறோம். ஒருவர் வீட்டில் பூஜை – நம்மை அழைத்திருக்கிறார். இந்த மாதிரி நேரத்தில் யாரும் நினைவு படுத்தாமலேயே நாம் சாதாரண உடையில் செல்கிறோமா இல்லையா?

இதுவே வழிபாட்டுத் தலம் என்று வரும் போது சுய கட்டுப்பாடு இல்லாமல் ஆணோ பெண்ணோ ஒரு கடற்கரையில் அல்லது பொழுது போக்கு இடத்தில் அணியும் உடையை அணியும் போது அது அந்தச் சூழலில் உள்ள பிரார்த்தனை செய்யும் பக்குவமான மன நிலைக்குப் பொருந்தாது நிற்கிறது இல்லையா?

நிறுவனங்களில் உள்ள உடைக்கட்டுப்பாட்டுக்கு அளவே இல்லை. ஆனால் அப்படிச் செய்ய அவர்களுக்குக் கண்டிப்பாக உரிமை உண்டு.

மருத்துவமனையில் ஒரு செவிலியர் இருக்கிறார். காவல் துறையில் ஒரு பெண் அதிகாரி இருக்கிறார். சீருடையில் வரும் போது மட்டுமே அவர்கள் எடுத்துக் கொண்ட பொறுப்புக்கும் உடைக்கும் பொருத்தமாக இருக்கும். கல்வி நிறுவனங்களுக்கும் இதுவே பொருத்தம்.

எக்ஸ்பிரஸ் அவன்யூ, பீனிக்ஸ் என்னும் பெயர்களில் ‘மால்’ என்னும் பெரிய வணிக- பொழுது போக்கு வளாகங்கள் உள்ளன. இங்கே நடுவயது மற்றும் முதுமை உள்ளவர்கள் போக வாய்ப்பே இல்லை. அங்கே ஒரு தேனீர் கூட நூறு ரூபாய் என்பது ஒரு காரணம். அங்கே வரும் இளைஞர் அணியும் ஆடைகள் இவர்களுக்குப் பார்க்க சகிக்காது. ஆனால் இந்த மாதிரி இடங்களில் கண்டிப்பாக இளம் பெண்கள் விரும்பிய ஆடைகளை அணியலாம். வித்தியாசமாகத் தெரியாது.

ஒருவர் மக்கள் முன்னே தம்மை எப்படிக் காட்டிக் கொள்ள விரும்புகிறார் என்பது கண்டிப்பாக அவரது தனிப்பட்ட உரிமையே.

அதே சமயம் இடத்துக்கும் தருணத்துக்கும் ஏற்ற உடையை அணியும் பண்பாட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே.

ஒருவர் உடையை அல்லது தோற்றத்தை எப்படி இருந்தாலும் பாலியல் ரீதியாகப் பார்க்கவே கூடாது. அது மன வக்கிரமே. மன வக்கிரம் கொண்டவர்கள் நன்றாக உடை அணிந்த பெண்களையும் விட்டு வைப்பதே இல்லை என்பதே உண்மை.

தேவையில்லாமல் ஒருவரை கவனித்துப் பார்ப்பதே பண்பாடு கிடையாது. குழந்தைகள் எப்படியும் நம் கவனத்தை ஈர்ப்பார்கள். அவர்களைக் கூட அவர்களது விளையாட்டு கெடாத படியே பார்த்து ரசிக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு அவர்கள் உடையால் பாதிக்கப் படும் என்பதும் அவர்கள் இரவில் வெளியே நடமாடக் கூடாது என்பதும் கண்டிப்பாகத் தவறான கண்ணோட்டம். பாலியல் வன்முறை செய்யும் மன வக்கிரம் உள்ளவர்கள் எந்தப் பெண்ணையும் தாக்குபவர்களே.

உடையில் சுயகட்டுப்பாடே சிறந்தது.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s