அக்டோபர் 2014 உயிர்மை இதழில் கவிதைகள்
கவிஞராகவே துவங்கி, பத்திரிக்கை ஆசிரியர் என்னும் சுமையை ஏற்ற பின்பும் கவிதையை விடாமல் படைத்து வருபவர் மனுஷ்ய புத்திரன். ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும், அறிவு ஜீவியாகவும் பல சமாதானங்களை, அரசியல் நடவடிக்கைகளை அவர் மேற் கொள்கிறார். அவை ரசிக்கத் தக்கவையே அல்ல. ஆணால் ஒரு கவிஞராக மிகவும் செறிவுள்ள கவிதைகளை அவர் தந்தபடி இருக்கிறார்.
கவித்துவம் நிறைந்த சில பகுதிகள்
சந்திப்பு —
நாம் சந்தித்துக் கொண்டோம்
ஆனால்
நமது
இரண்டு தருணங்கள்
சந்தித்துக் கொள்ளவில்லை
முறிவுகள்—-
உடைகிற
ஒவ்வொரு கண்ணாடிக் கோப்பையிலிருந்தும்
என் விரல்கள் ரத்தம் சிந்துகின்றன
அன்னையரும் தந்தையரும்–
தந்தையரின் தேசங்கள்
திடபொருளிலானவை
என்னை அருந்தும் போது—
என்னை நீ
அருந்தும் போது
எப்போதும் ஏன்
கோப்பையின் அடியில்
கொஞ்சம் மிச்சம் வைத்து விடுகிறாய்