நாய் வளர்க்க என்ன வேண்டும்?


first-day-of-golden-retriever-puppies-with-new-dog-mom-lying-on-100227589

நாய் வளர்க்க என்ன வேண்டும்?

நகைச்சுவையாகச் சொல்வது என்றால் ஒரு நாய் வேண்டும் அவ்வளவு தான். ஆனால் அத்தோடு முடிவதில்லை. நாயை வளர்ப்பவர்க்கு அதைக் கொஞ்சுவதைத் தவிர அதற்கு உணவு அளிப்பதைத் தவிர சில கடமைகள் உள்ளன. இந்தக் கடமைகளில் தவறும் பட்சத்தில் நாய், அவர் (குடும்பமும்) மற்றும் சமூகம் ஆகிய மூவருமே பாதிக்கப் படுகிறார்கள். ஏழை பணக்கார பேதமில்லாத ஒரே விஷயம் நாயை மிகவும் கொஞ்சி மறுபக்கம் முற்றிலுமாக அதன் நலத்தைப் புறக்கணிப்பது.

உண்மையில் நாய் வளர்ப்பு என்பது மிகவும் லேசாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. அது வாயில்லாத ஜீவன் என்பதே காரணம். அது வெறி பிடித்துக் கடித்தால் கூட அது விலக்கப் படவேண்டியதாக அதாவது கொல்லப் பட வேண்டியதாக கருதப் படும். ஆனால் அது என்ன துயரை நோயை அனுபவித்தது என்பது எப்போதுமே வெளி வராது. குழந்தைகள் செல்லப் பிராணியான நாயை மிகவும் கொஞ்சுபவர்கள் அவர்களுக்கும் பல நோய்த்தொற்றுக்கு நாயை நாம் செய்த அலட்சியமே காரணமாகிறது.

உயிர்மை நவம்பர் 2014 இதழில் தியோடர் பாஸ்கரன் மிகவும் சுருக்கமாகவே நம் பொறுப்பின்மையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இறைச்சி அல்லது இறைச்சியால் செய்த நாய் உணவு கொடுத்தே நாயை வளர்க்க வேண்டும். மரக்கறி உணவு போட்டு வளர்த்தால் அதன் ஆயுள் குறையும். நாம் மீத்தியவற்றைப் போடும் போது அவை நோயுறவே செய்யும். இதுவே அவர் சுட்டிக் காட்டுவது. கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது? நாயைப் பழக்க வேண்டும்- மற்றவர் வந்தால் குலைக்காமலோ அல்லது பாயாமலோ இருக்கப் பழக்க வேண்டும். அப்படிச் செய்யப் பொறுமை மற்றும் முயற்சி இல்லாமல் அவற்றைக் கட்டிப் போடுவது என்பது முற்றிலும் பொறுப்பற்ற செயல். நாயை கட்டிப் போடப் படும் போது உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் துயரை அனுபவிக்கிறது. ஒரு நாயை உரிய வயதில் கருத்தடை செய்யாமல் விட்டு விடும்போது சமூகம் மிகப் பெரிய எண்ணிக்கையிலான நாய்களை என்ன செய்வது என்று தெரியாமல் மேலும் பெருக விடுகிறது.

பாஸ்கரன் குறிப்பிடாமல் விட்ட ஒன்றை நாம் கவனித்திருப்போம். கெட்டுப் போன மாமிசத்தை சாப்பிட்டு அதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு வெறிபிடித்த பல நாய்கள் குழந்தைகளைக் குதறிச் சாப்பிட்ட கோர நிகழ்ச்சிகள் பல.

அன்பு என்னும் பெயரால் மனிதன் சகமனிதனை மட்டுமே கொடுமைப் படுத்துகிறான் என்று நாம் நினைத்து வந்தது தவறு.

(image courtesy:freedigitalphotos.net)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

One Response to நாய் வளர்க்க என்ன வேண்டும்?

  1. yarlpavanan says:

    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s