மனுஷ்யபுத்ரன் கவித்துவத்தின் அழகிய வெளிப்பாடு


white-jasmine-garland-red-rose-35080119

மனுஷ்யபுத்ரன் கவித்துவத்தின் அழகிய வெளிப்பாடு

நவம்பர் 2014 உயிர்மை இதழில் மனுஷ்ய புத்திரனின் ஒன்பது கவிதைகள் வந்திருந்தாலும் நீர்த்ததாகவே முதல் எட்டு கவிதைகள் அவரது கவித்துவம் தென்படாதவையாக எட்டு கவிதைகள் இருந்தன.

அது என்ன கவித்துவம்? ஒரு கவிதையில் ஒரு ஆழ்ந்த தரிசனம், ஒரு அற்புதமான கற்பனை, நெருப்புப் பொறியாகத் தெறிக்கும் சிந்தனை என எதாவது ஒன்று நம்மைத் தொடும். வாசகன் ஒரு கவிஞனாகவோ அல்லது எழுத்தாளனகவோ இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு கவிதையை இந்தப் பொறிக்காகத் தேடும் ஒரு தேடல் இருந்தால் மட்டுமே போதும்.

ஒரு முழம் பூ

என்ன அதிசயம் பார்
எவ்வளவு எளிய மனிதர்கள் நாம்

ஒரு முழம் பூ
ஒரு இரும்புச் சங்கிலியை
அறுக்கப் போதுமானதாயிருந்தது

மனுஷ்ய புத்திரனுக்குக் கவிதையின் வீச்சும் நுட்பமும் எவ்வளவு அண்மையானவை என்பது கவிதையில் நமக்குப் பிடிபடுகிறது. பதினைந்தே வார்த்தைகள் இந்தக் கவிதைகள். மனித உறவின் மிக நுட்பமான தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. யார் பிடிவாதமாக இருந்தவர்? மகளா? சகோதரியா? காதலியா? அல்லது தோழியா? என்ன மன வருத்தம்? என்ன கருத்து வேறுபாடு?

ஆண் பெண் உறவின் வெவ்வேறு நிலைகள் முறைகள் கண்டிப்பாக இருக்கின்றன. ஆனால் ஒரு பெண் ஒரு ஆணின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறாளா அல்லது அவனை உண்மையிலேயே நேசிக்கிறாளா என்பது வெகு விரைவிலேயே வெளிப்பட்டு விடும்.

காதலர்கள் அல்லது வாழ்க்கைத் துணைவர் இருவர் என்று எடுத்துக் கொண்டு பார்ப்போம்.

ஒரு பெண்ணின் உளப்பாங்கு மிகவும் சிக்கலானது. அன்பின் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்த விரும்புவதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. ஆணின் எதிர்பார்ப்பு அல்லது பெண்ணின் எதிர்பார்ப்பு இந்த இரண்டுமே இருவர் இடைப்பட்ட உறவில் பெரும் பக்கு வகிக்கிறது.

இந்த எதிர்பார்ப்பும் அது நிறைவேறிக் கொண்டே இருப்பதும் உறவு வலுப்பெற எந்த அளவு உதவுகிறதோ மறுபக்கம் எதிர்பார்ப்பு நிறைவேறாத போது உறவு உடைந்து சுக்கு நூறாகி விடுகிறது. சிக்கலான எதிர்பார்ப்புகள் முறுக்கிப் பிணைந்து விட்ட நூல் கண்டாக ஒரு பெண்ணின் மனதுள் இருக்கும். அதை விளங்கி அவளைத் திருப்திப் படுத்துவது ஒரு ஆணுக்கு இயலாத சவாலே.

ஆதிக்கம் செலுத்தும் போது எதிர்பார்ப்பின் தகிப்பில் கொதிக்கும் போது- பரஸ்பரம் இந்த உஷ்ணக் கொண்டாட்டத்தைப் பெரிதாகக் கொள்ளும் போது உறவு பிறவிப் பயனாகத் தோன்றுகிறது. எதிர்பார்ப்பு நிறைவேறாத போது – ஆதிக்கம் முடிவுக்கு வரும் போது அதே உறவு தன்னைத் தொற்றிய சாபமாகத் தோன்றுகிறது.

தற்காலிக சமாதானங்கள் மீண்டும் பெரும் யுத்தங்கள்.

நீண்ட காலத்தில் ஒரு ஆண் தேடுவது தன் எல்லாப் பணிகளிலும் துணை நின்று தோள் கொடுக்கும் தோழியை. பெண் தரத் தயாராயிருப்பது தனக்கு முக்கியமாகப் படும் பணிகளில் அவன் கேள்வி கேட்காமல் பங்களிப்பதை. அவனது எல்லாப் பணிகளும் அவளுக்கு ஆர்வமாயிருப்பதில்லை. தன் மீது அன்பைப் பொழியும் அவன் தான் போடும் புள்ளிகளுக்கும் சிக்கும் கோலமாக இருப்பதையே விரும்புவாள்.

இந்த எதிர்ப்பார்ப்பு ஆதிக்கம் என்னும் கண்ணிகள் ஒரு பெரிய இரும்புச் சங்கிலியாய் பெண்ணைப் பிணைத்து விடுகின்றன. அவள் தற்காலிகமாக அந்தச் சங்கிலியைத் தாண்டி வர ஒரு முழம் பூ போதுமானது. பூ வாடிவிடும். அந்தத் தற்காலிக விட்டுக் கொடுத்தலும் தான்.

(image courtesy:http://www.dreamstime.com/)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s