அனாரின் மூன்று கவிதைகள்
காலச்சுவடு நவம்பர் 2014 இதழில் அனார் அவர்களின் மூன்று கவிதைகள் வந்துள்ளன.
நவீனக் கவிதை என்பது என்ன? அதன் சாத்தியங்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்கு எல்லையே கிடையாது. கவித்துவமும், கற்பனையும் வார்தைப் பின்னல்களாலும் தட்டையான சித்தரிப்புகளாலும் ஒரு கவிஞனின் தரிசனங்கள் வெளிப்பட இயலவே இயலாது. துண்டு துண்டாகத் தென்படும் தூரிகைத் தூற்றல்களின் ஊடாடும் சரடான ஒரு தேடல் உண்டு. அது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் பிடிபட வேண்டியதில்லை. அழுத்தமாக ஒரு தடமாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவனுள் பொறிபோலத் தோன்றி மறைந்த ஒன்றின் பல பரிமாணங்கள் அவை. ஒரு கவிதையாக அவை வடிவம் பெறும் வரை அதை அவன் ஒரு கருவாக அதை உள்ளே உருக்கொள்ள தன்னுள்ளே விதைத்திருந்தான்.
அவரது மூன்று கவிதைகளின் சில பத்திகள்
இரவாலும் பகலாலும் மூடப்பட்ட ஆடை
கதை கேட்பவனின் காதுகளைத் தொட்டுப் பறக்கிறது
நீ சொற்களின் கதவுகளைத் திறந்து விடுகிறாய்
ஆன்மாவின் சுவரிலிருந்த ஒரே ஒரு ஜன்னலையும்
————————————————————-
காற்றினால் தான் அனைத்து வலியும்
நேர்ந்திருக்க வேண்டும்
நிச்சயமற்ற தீர்மானம்
அறையில் மங்கி ஒளிர்கிறது
__________________________________________
ஞாபகத்திலிருந்து
காதலின் முத்தத்தைப் பெயர்த்தெடுக்கிறேன்
அதன் ஒலியோடும் ஈரப்பதத்தோடும்
அனார் லா.ச.ரா கதைகளில் செய்யும் சஞ்சாரங்களைக் கவிதையில் நிகழ்த்துகிறார். இது முயன்று வருவதல்ல. ஒரு தேடலின் பிரதிபலிப்பாக, மறுபக்கமாக வருவது. அனார் நவீனக் கவிதையின் சாத்தியங்களைப் பற்றிய புரிதலுள்ளவர். கவித்துவமும் தேடலும் வெளிப்பாடாகின்றன அவரது படைப்புகளில். வாழ்த்துக்கள்.
(image courtesy:wiki)