மதுவால் அழியும் தமிழன்- தமிழ் ஹிந்துவில் தொடர் கட்டுரை
“மெல்லத் தமிழன் இனி” என டி.எல். சஞ்சீவி குமார் ஒரு தொடர் கட்டுரையைத் ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில் எழுதி வருகிறார். மதுவின் பிடியில் தமிழக உழைப்பாளிகள் பெரும்பகுதி ஆனதால் அவர்கள் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் உடல் நலம் இழப்பதில் தொடங்கி, குடும்ப வாழ்க்கையில் மனைவிக்கு உடல் இன்பம் தர இயலாமல் போய் அதன் பின் அவளைச் சந்தேகித்துச் சித்திரவதை செய்வது வரை போகிறது குடியின் நாச விளைவுகள். குழந்தைகள் படிப்பு மற்றும் மன நலம் இரண்டுமே மிகவும் பாதிக்கப் படுகின்றன. கட்டுரையாசிரியர் தொடர்ந்து பல கருத்துக்களை ஆதாரத்துடம் மதுவுக்கு எதிராக எழுதி வருகிறார். தமிழகத்தையே அழித்து வரும் மதுவை எதிர்த்து மிகவும் ஆக்க பூர்வமானபணி. கட்டுரையாசிரியருக்கும் தமிழ் ஹிந்து நாளிதழுக்கும் நம் நன்றியும் பாராட்டும்.
(iamge courtesy: google and wikimapia)