Monthly Archives: December 2014

புத்தாண்டு வரவு


புத்தாண்டு வரவு சத்யானந்தன் புத்தாண்டு இரவு மணி இரண்டு விரையும் வாகனங்கள் அதிரும் பட்டாசுகள் உற்சாகக் கூக்குரல்கள் எதையும் கண்டு களிக்காது கருமமே கண்ணாய் குளிரிலும் வியர்வை வழிய மூன்றடிச் சிறுவன் மற்றும் அரும்பு மீசை ஒருவன் மாநகர நடைபாதை ஓரமெல்லாம் காலிப் போத்தல்கள் கணக்கில்லா பிளாஸ்டிக் பைகள் போத்தல்களின் மூடிகள் பிளாஸ்டிக் கோப்பைகள் அட்டை … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்


நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும் சத்யானந்தன் அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். ஒற்றைக் குரல் எதிர்ப்பாக இல்லாமல் சமுதாயம் முழுதும் விரவும் எதிர்வாக ஒருக்கப்பட்ட அனைவரின் ஒன்று பட்ட எழுச்சியே இந்த நாவலின் மையக் கரு. நாவலின் செய்தி மிகவும் நேரடியானதும் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டதும் ஆகும். 293ம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

200 பேரின் எதிர்காலம் பேணும் லட்சிய தம்பதி


200 பேரின் எதிர்காலம் பேணும் லட்சிய தம்பதி 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருச்சி – துறையூர் செல்லும் வழியில் உள்ள திருவள்ளரை. திருவள்ளரையில் உள்ள பெருமாளைப் பற்றி நாம் அறிவோம். இந்தக் கட்டுரை நாம் அறியாத ஒரு அபூர்வ தம்பதி பற்றி. முதியவரில் பெண்கள் ஆண்கள் என 60- 70 பேர், 130-140 குழந்தைகள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

இது பொறுப்பதில்லை


இது பொறுப்பதில்லை சத்யானந்தன் கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக அல்ல மத குருமார் மதத் தலைவர் இன்னும் பொறுத்தால் ஓர் நாள் அவரும் வேட்டையாடப் படுவர் புத்தரின் புராதன சிலைகள் சிதிலமான போதே மனித குலமே தாக்கப் படும் … Continue reading

Posted in திண்ணை | Tagged | 1 Comment

பயங்கரவாதத்தை மதத் தலைவர்கள் எதிர்க்க வேண்டும்


பயங்கரவாதத்தை மதத் தலைவர்கள் எதிர்க்க வேண்டும் ஆஸ்திரேலியாவில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் ஆளும் பாகிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளும் இரண்டு நாட்களில் கொடூரத் தாக்குதல்களைச் செய்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் பலியான நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களைக் கூடக் கொல்லும் மதவெறியை ஏன் பாகிஸ்தானின் மதத் தலைவர்கள் சகித்துக் கொள்கிறார்கள் மற்றும் ஆதரிக்கிறார்கள். இஸ்லாமிய மதத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

முதல் அம்பு – யுவனின் கவிதை வாசிப்பு


முதல் அம்பு – யுவனின் கவிதை வாசிப்பு ஆனந்தின் ஒரு கவிதை: நான் முதல் அம்பு. பன்னெடுங்காலமாய் இந்த மலையுச்சியில் கிடக்கிறேன் யார்மீதும் விரோதமற்ற ஒருவன் வந்து தன் வில் கொண்டு என்னை வெளியில் செலுத்துவானென காலச்சுவடு டிசம்பர் 2014 இதழில் இந்தக் கவிதை முதல் வாசிப்பிலும் அசை போடும் போதும் வெவ்வேறு புரிதல்களுக்கு இட்டுச் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

‘கலை’ மகள்


‘கலை’ மகள் ‘கலை’ மகள் இளைஞர்களிடம் நாம் கண்டறியாத பல நல்ல குணங்களும் ரசனைகளும் உண்டு. என் மகளிடம் நான் இப்போது மகிழ்ச்சியோடு தெரிந்து கொண்டது அவரது கலை ரசனை. என் அறையில் ஒரு பெரிய படுதா ஓவியம் போல புத்தரின் பொன்மொழியுடனான ஓவியம். இவை தவிர அவர் வீட்டின் பல்வேறு இடங்களை அலங்கரித்திருப்பது பிற … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

காடு-சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இதழ்


காடு-சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இதழ் தடாகம் வெளியீடாக வருவது ‘ காடு’ இதழ். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று தனியாக சிலர் இருப்பது ஏன்? சுற்றுச்சூழல் இயல்பாக எப்படி இருக்கும்? அது எந்த அளவு மாசு பட்டுச் சீரழிந்துள்ளது? நாம் அனைவரும் இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எது இயற்கையின் இயல்போ அதை ஆவணப்படுத்தி வைக்க … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

க.அம்சப்ரியாவின் கவிதை


க.அம்சப்ரியாவின் கவிதை தீராநதி டிசம்பர் 2014 இதழில் வந்துள்ள க.அம்சப்ரியாவின் ‘சொந்த மிருகங்கள்” என்னும் கவிதை எளிமையானது. ஆனால் குறிப்பிடத்தகுந்த ஒரு எச்சரிக்கையை ஒரு பெண் கவிஞர் தருகிறார். பாலியல் வன்முறையிலிருந்து காத்துக்கொள் என்று தரும் கவிதை இது. “பசியை வென்ற வரமொன்றை வைத்திருப்பதாக ஊரெல்லாம் பிதற்றித் திரிந்த” மிருகம் அது. பாலியல் வன்முறையில் வெளியிலிருந்து … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

நகை முரண்


(7.12.2014 ‘திண்ணை’ இணைய இதழில் வெளியானது) நகை முரண் சத்யானந்தன் ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர் பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள் கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர நதிநீர் பங்கு கேட்டுப் போராடும் யாரும் கேட்பதில்லை நதிநீர்த் தூய்மை அணு மின்சார அனல் மின்சார எதிர்ப்பாளர் வீட்டில் இல்லை … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment