தங்கர் பச்சான் தொலைத்தது வாசகருக்கும் இழப்பே


532509_480439015312621_1367674174_n

தங்கர் பச்சான் தொலைத்தது வாசகருக்கும் இழப்பே

தமிழ் ஹிந்து நாளிதழின் ஞாயிறு பதிப்பில் 30.11.2014 அன்று தங்கர் பச்சானின் “சொல்லத் தொணுது” பத்தியில் ‘எமன்’ என்னும் தலைப்பில் அவர் ஒரு முக்கியமான பிரச்சனையை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். நெய்வேலி அனல் மின் நிலையம் தென்மாநிலங்களின் முக்கியமான மின் உற்பத்தி மையம். ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை விழுங்கியே சுரங்கங்கள் உருவாகின. நிலங்களையும் இருப்பிடத்தையும் இழந்த பலர் மனம் பேதலித்துத் திரிவது உலகம் அறியாத ஒன்று. 2400 அடி வரை தோண்டினால் தான் நிலக்கரி கிடைக்கிறது. தோண்டத் தோண்ட அக்கம் பக்க கிராமங்களின் நிலத்தடி நீரும் பல நூறு அடிகள் 600 700 அடி வரை போய் விட்டது. விவசாயம் மிகப் பெரிய சவாலாகி விட்டது.

வள்ளலார் ராமலிங்க அடிகளார் காலம் தொடங்கி தென் ஆற்காட்டுப் பகுதியின் முழு வரலாறையும் நெய்வேலி என்னும் ‘எமன்’ வரும் காலம் வரை ‘எமன்’ என்னும் நாவலாக எழுதினார் தங்கர் பச்சான். 1992ல் தொடங்கிப் பல வருட உழைப்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ‘எமன்’ என்னும் நாவலின் பிரதியை அவர் தொலைத்து விட்டார். வீட்டைப் பராமரிக்கும் வேலை நடக்கும் போது அது காணாமற் போய் விட்டது. இது எந்த அளவு ஒரு படைப்பாளியை பாதிக்கும் என்பது இன்னொரு படைப்பாளிக்குத் தான் புரியும். மிகவும் ரணமாக்கும் வலி இது. சிறிய அளவில் சில நாட்கள் உழைத்தவற்றை இழந்த போதே மிகவும் மாய்ந்து போனவன் நான். தங்கர் இதைப் பதிவு செய்யும் போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு உரிய நேர அவகாசமும் சூழலும் கிடைத்து அவர் அதை மீண்டும் எழுதி வெளியிட வேண்டும். வாசகருக்கு அதுவரை இது இழப்பே.

தங்கர் பச்சான் சினிமா எழுத்து என்னும் இரு ஊடகங்களைப் பற்றிய சரியான புரிதல் உடையவர். அவரின் எழுத்தும் படமும் நம்மை மண்ணின் மணத்துடன் தொடுபவை. சுற்றுச் சூழல் ஆர்வலர் பலரும் கவனிக்காதது அனல் மின் நிலையங்களின் எதிர்மறையான பின் விளைவுகள். நமக்கு விழிப்புணர்வு தந்த தங்கர் பச்சானுக்கு நன்றி.

(image courtesy: Face Book)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s