ஒரு கெட்ட கனவு – ஆண்டன் செகாவ் சிறுகதை


download

ஒரு கெட்ட கனவு – ஆண்டன் செகாவ் சிறுகதை

இனிய உதயம் நவம்பர் 2014 இதழில் ‘ஒரு கெட்ட கனவு’ என்னும் ஆண்டன் செகாவின் மொழிபெயர்ப்புக் கதை சுராவின் மொழிபெயர்ப்பில் வெளி வந்துள்ளது.

வர்க்கம் என்னும் பாகுபாட்டை நாம் அன்றாடம் எதாவது ஒரு விதத்தில் உணர்ந்து கொண்டே இருக்கிறோம். தலைபோகிற செலவு தவிர் மற்றவை எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால் அவர் கண்டிப்பாக நடுத்தர வர்க்கம் தான். அத்தியாவசிய செலவையே செய்ய முடியாமல் மனதுக்குள் குமைந்தால் அவர் வறியவர்.

வறியவர் எப்படி எல்லாம் கஷ்டப் படுவார்? கல்லூரி நாட்களில் துறையூரில் இருந்து திருச்சி செல்லப் பணமில்லாமல் சில நாட்கள் கல்லூரிக்கே போக மாட்டேன். இன்று யோசித்தால் அந்நாட்களில் நண்பர்கள் யாராவது டீ குடிக்கக் கூப்பிட்டால் மறுத்து ஒதுங்கியது நினைவுக்கு வருகிறது. அப்போது நான் எப்படிப் பையில் பணமில்லாமலேயே நாட்களைக் கடத்தினேன் ஈன்பது இன்றைய வசதியுடன் ஒப்பிடப் பெரு வியப்பாக இருக்கிறது.

ஒரு கிராமத்தில் ‘சர்ச்’ மூலம் பள்ளிக் கூடம் கட்டப் பட்டுச் சேவைப் பணிகள் நடைபெற வேண்டும். குனின் என்னும் மாநில அளவிலான சேவை அமைப்பின் உறுப்பினர் குனின். அவன் யாக்கோவ் என்னும் பாதிரியாரைச் சந்தித்து அவரது திட்டமிடல் மற்றும் உற்சாகத்தை வைத்துப் பணிகளைத் துவக்க விரும்புகி’றான். முதலில் ஒரு பள்ளிக் கூடம் கட்ட வேண்டும். பாதிரியாரை குனின் தன் இடத்துக்கு வரவழைக்கிறான்,. அவரது உடையும் நடவடிக்கையும் அவனுக்கு மிகவும் அற்பத்தனமானதாகத் தென்படுகின்’றன. தேனீரை அவர் குடிக்கும் வேகமும் கொடுத்த இரண்டு பிஸ்கட்டுகளில் ஒன்’றைத் தின்று மற்றதைக் கால்சராய்ப் பைக்குள் போட்டுக் கொள்வதும் அவனுக்கு எரிச்சலூட்டுகின்றன. இவற்றுக் கெல்லாம் மேலாக அவரால் கோர்வையாகத் திட்டங்களைப் பற்றி விவாதிக்கவே இயலவில்லை. ஒரு பதட்டமாகவே இருக்கிறார். அன்றைய சந்திப்பு அத்தோடு முடிகிறது. அடுத்ததாக அவர்கள் இருவரும் சர்ச்சில் வைத்து சந்திக்கிறார்கள். சர்ச் பாழடைந்து இருக்கிறது. அதை ஒட்டிய அவர் குடியிருக்கும் இடத்திலோ உடைசலில்லாமல் ஒரு ;;நாற்காலியோ சோபாவோ இல்லை. அவன் ஸ்டூலில் அமர்கிறான். தேனீருடன் பேசுவோம் என்பவனுக்குத் தேனீரும் வரவில்லை. அவரது மனைவியும் இவனுக்கு முகமன் கூற வெளியே வரவில்லை. பாதிரியாரிடம் உருப்படியான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. வெறுத்துப் போய் அவன் தன் இடத்துக்கு வந்து விடுகிறான். அதன் பின் நாலைந்து முறை அவன் ஊரிலில்லாத போது அவனை சந்திக்கப் பாதிரியார் வந்தும் அவரைச் சந்திக்க அவன் முயலவில்லை. ஆனால். ஆறாவது முறை ஊரில் இருக்கும் அவன் அவரை உள்ளே அழைக்கிறான். சர்ச்கில் அவர் பேச வேண்டிய உரையை அவன் தயார் செய்து வைத்திருந்தான். ஏனெனில் எதையும் அவர் உருப்படியாகச் செய்வார் என்னும் உத்தரவாதம் இல்லையே. அப்போது தான் பாதிரியார் தம் கடுமையான வறுமையைக் கூறி – வீட்டில் மனைவி உடுத்த நல்ல ஆடையில்லை – இருவரும் தேனீர் குடிக்கக் கூட வழியில்லை என்பதை எல்லாம் விளக்கி எதாவது வேலை கொடுங்கள் என்று மன்றாடுகிறார். தம்மால் மதப் பணியில் பசி மற்றும் வறுமையால் ஒன்ற இயலவில்லை என்று விளக்குகிறார். அவரைப் பற்றிய தனது தவறான எண்ணங்களுக்கு வெட்கப் பட்டு அவருக்கு உதவ முடிவெடுக்கிறான்.

கதையில் மிகச் சிறப்பான அம்சம் அது சொல்லப் பட்டு இருக்கும் விதம். குனின் பார்வையில் முதலில் நாம் பாதிரியாரைப் பார்க்கிறோம். அவர் தன்னிலை விளக்கம் அளிக்கும் போது நமக்கும் அவர் மீது மிகவும் இரக்கம் ஏற்படுகிறது. வருமான அடிப்படையிலான இடைவெளி ஒருக்காலும் கடக்கவே இயலாதது. செக்காவின் கூர்மையான கதையை மொழிபெயர்த்த சுராவுக்கு நன்றி.

(image courtesy;Wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s