200 பேரின் எதிர்காலம் பேணும் லட்சிய தம்பதி


2014-12-28 13.39.38
200 பேரின் எதிர்காலம் பேணும் லட்சிய தம்பதி

108 திவ்ய தேசங்களில் ஒன்று திருச்சி – துறையூர் செல்லும் வழியில் உள்ள திருவள்ளரை. திருவள்ளரையில் உள்ள பெருமாளைப் பற்றி நாம் அறிவோம். இந்தக் கட்டுரை நாம் அறியாத ஒரு அபூர்வ தம்பதி பற்றி.

முதியவரில் பெண்கள் ஆண்கள் என 60- 70 பேர், 130-140 குழந்தைகள். இவர்கள் எல்லோரும் அனாதைகளா? இல்லை. இவர்களில் மிகச் சிலரே அவ்வாறானவர். பெரும்பான்மையினர் வறுமையின் காரணத்தாலோ அல்லது குடும்பம் உடைந்ததாலோ உறவுகளால் நிராகரிக்கப்பட்டவர்கள். ஒரு சிறுவனின் தாயும் தந்தையும் பிரிந்து விட்டனர். இருவரும் அவனை அங்கே வந்து பார்த்துச் செல்கின்றனர். பல முதியவர் காலமானதும் உடலை ஏற்று நல்லடக்கம் செய்யக் கூட உறவு முன் வருவதில்லை.

ஹம்சவல்லி ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை. அவரது கணவர் திருமலை ராஜன். இருவரும் தமது பரம்பரைச் சொத்தான பல ஏக்கர் நிலத்தில் முதியோர் மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கான ‘ கிருஷ்ணாஸ் ஹோம் ‘ என்னும் இல்லத்தைத் துவக்கிப் பல குழந்தைகளை 12ம் வகுப்பு வரை படிக்க வைத்து நல்ல நிலையில் வாழச் செய்திருக்கிறார்கள். அரிய சாதனைக்கான எந்தச் செருக்கும் இல்லாத எளிய இனிய குடும்பம் இது.

திருச்சியின் பல நல்லியதங்கள் ஓரளவு உதவியிருக்கின்றனர். என் தாயார் மற்றும் அண்ணன் சிறுமிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு சுற்றுச் சுவர் எழுப்ப ஒரு பங்கு செலவை ஏற்றனர். தமது ஒரே மகனை இழந்து பரிதவிக்கும் என் சகோதரியும் அவரது கணவரும் குழந்தைகளுக்கு சிறிய பாடல்கள் கதைகள் சொல்லி மனம் ஆறுதல் பெறுகின்றனர். தங்களது பல பொருட்களையும் அவர்கள் இல்லத்துக்குத் தந்திருக்கின்றனர்.

28.12.2014 அன்று என் மனைவி மகள் மற்றும் அம்மாவுடன் நான் அங்கே நேரில் சென்று அவர்கள் செய்யும் பணியைப் பார்த்தேன். கடுமையான நிதிப் பற்றாக்குறையை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனைவருக்கும் ஒரு வேளை உணவுக்கான தொகையை மட்டுமே கொடுத்து விட்டு வந்தோம். துணி, பாத்திரம், அரிசி, பணம் என எதை வேண்டுமானாலும் நாம் அளித்து அவர்களது தொண்டுப் பணியில் நாம் பங்கு பெறலாம். தமது இளம் வயது மகன்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தி இருக்கும் இந்தத் தம்பதியின் தொண்டுள்ளம் போற்றுதற்குரியது.

திருவள்ளரை பேருந்து நிறுத்தத்தில் கோயில் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் 200மீட்டர் தூரத்தில் இந்த இல்லம் இருக்கிறது. திரு.திருமலைராஜன் அவர்களின் கைபேசி எண் 9715834845. குறிப்பாக திருச்சி , துறையூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் நேரில் சென்று இந்த இல்லத்தைப் பார்த்து பிறருக்கும் தெரிவிக்கவும். இவர்கள் பணி ஆலமரமாய் விரிந்து பலரையும் வாழ்விக்க நம் நல் வாழ்த்துக்கள்.

2014-12-28 13.35.42

2014-12-28 13.35.16

2014-12-28 13.29.27

2014-12-28 13.39.38

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s