பிறப்பதும் இறப்பதும் இயல்புதானா?- டி.பத்மநாபனின் சிறுகதை “பயணம்”


220px-T.padmanabhan

பிறப்பதும் இறப்பதும் இயல்புதானா?- டி.பத்மநாபனின் சிறுகதை “பயணம்”

டிசம்பர் ‘இனிய உதயம்’ இதழில் மலையாள எழுத்தாளர் டி.பத்மநாபனின் சிறுகதை “பயணம்” சுராவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. சிறுகதை இரண்டு முறையேனும் வாசித்த பின்னரே நமக்குப் பிடிபடும். கடுமையான மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளங்கள் குறுக்கிடும் போது பஸ்ஸிலும் சிலசமயம் வெள்ளம் தணியும் போது சிறு ஓடைகளைக் கடந்தும் பயணிக்கிறார் ஒரு முதியவர். அவர் தனது மிக நெருங்கிய நண்பரை பிரியமான தம்பி இறந்து போனதற்கு துக்கம் கேட்கச் சென்று திரும்பி வருகிறார்.

நண்பனின் துயரத்தை அவர் பகிர்ந்து கொள்ளும் பாங்கும், அந்த நண்பர் பற்றிய நினைவுகளும் ஒரு நல்ல மனித உறவு பற்றிய சித்திரத்தை நமக்குத் தருகின்றன. கேரளத்தில் மழைக்காலத்தில் பயணிப்பது என்பது எவ்வளவு சவாலானது என்பது நமக்குத் தெரியவே தெரியாது. மும்பையில் மட்டுமே நான் கடும் மழையில் சிக்கிக் கழுத்தளவு நீரில் நடந்திருக்கிறேன். ஆனால் கேரளத்தில் காட்டாற்று வெள்ளம் என்னும் சவாலும் உண்டு என்பது நமக்குப் புதிய விவரமே.

அவ்வாறு போராடித் திரும்பும் அந்தப் பெரியவர் தாம் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கும் போது ஒரு சோகைமிகுந்த கர்ப்பிணிப் பெண் பேறுக்காக மருத்துவமனைக்குச் செல்ல பேருந்தில் ஏறும் இடத்தில் கதை முடிகிறது. பேருந்தால் வெகு தூரம் செல்ல இயலவில்லை. கர்ப்பிணியின் குடும்பம் இவர் பிற பயணிகள் அனைவரும் முழங்காலுக்கும் அதிகமான நீரில் நடந்து செல்கிறார்கள். பயணம் – வாழ்க்கை என்னும் பயணம் தொடர்கிறது.

மரணமும் ஜனமும் இயற்கையின் இயல்பே என்று நாம் சொல்கிறோம். தத்துவ சிந்தனைக்கான நூல்களில் வாசிக்கிறோம். ஆனால் மரணம் கசப்பானதே. வாழ்க்கை எப்போதுமே போராட்டமானதே.

துக்கம் கேட்க நாம் செய்யும் பயணம் மிகவும் வருத்தமளிப்பது. நம் மனதில் நம்முடன் இல்லாமற் போனவர் பற்றிய பல நினைவுகள். ஆறுதல் சொல்ல முயன்றாலும் சொல்வது சாத்தியமே இல்லை என்னும் உண்மையும் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும். இந்த வேதனை முழுமையாக இந்தக் கதையில் வெளிப்படுவது. ‘இனிய உதயம்’ இதழுக்கு நன்றி.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s