எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை “உலகின் கண்கள்”


images

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை “உலகின் கண்கள்”

உயிர்மை ஜனவரி 2015 இதழில் “உலகின் கண்கள்” என்னும் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை ஒரு புதிய காட்சியை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. ஒரு புராதன ஓவியத்தில் உள்ள பெண்கள் நீந்தும் நிலையில் தண்ணீரில் மூழ்கியும் வெளிவந்தும் இப்பக்கம் அப்பக்கம் அசைந்தும் தமது நிலையில் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். யார் கண்ணுக்கும் இது குகையில் உள்ள அந்த அதிசய ஓவியத்தில் காட்சி ஆகிறது. ஆனால் அந்த ஓவியம் புகைப் படமாகவோ ஓளிப் படமாகவோ அல்லது ஓவிய நகலாகவோ வருவதே இல்லை. யார் எந்த வடிவில் இதன் நகல் வடிவை அல்லது பிரதியை எடுக்க முயன்றாலும் அது தோல்வியிலேயே முடிகிறது.

மறுபக்கம் அந்தக் குகைக்குச் செல்லும் யாருக்கும் ஒரு கனவு நிலைபோல அது தென்படுவதாகவும் கொள்ளலாம். ஆனாலேன் காகிதத்தில் பென்சில் வைத்து எழுதும் ஓவியத்தில் கூட அது ஒரு நகலாக மாறாது போக வேண்டும்? பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு இளம் புத்தத் துறவி தன் மனதைக் கட்டுக்குள் வைக்க வரைந்த ஓவியம் அது. அந்த ஓவியத்தில் இடம் மாறிக் கொண்டே இருந்தவர்களில் பெண்கள் ஆசைகளையும், குரங்கு விழிப்புணர்வையும், மரம் அவனது இருப்பின் அடையாளத்தையும், தாமரை அவனை ரட்சிக்க வந்த புத்தனையும் குறியீடாக அவனுக்குத் தென்படுத்தி அவன் தன் புலன் களையும் மனத்தையும் அடக்கியாள உறுதுணையாயிருந்தன.

ஒரு வனத்துறையின் கடைநிலை ஊழியரின் மகன் வழியாகக் கதை சொல்லப் படுகிறது. பத்தாண்டுகளுக்கு மேல் அந்த ஓவியத்தின் பிரதியை வரைய முயன்று அவன் தோற்றுவிடுவதே கதை.

சற்றே நீண்ட கதை. நாம் அந்த ஓவியத்தின் வடிவம் மாறும் நிலைகளைப் புரிந்து கொள்கிறோம். எஸ்.ரா. அதில் வெற்றி கண்டிருக்கிறார். ஆனால் கதையின் தொடர்ச்சியாக ஒரு சிந்தனை நம்முள் நீள்கிறது.

கனவில் திடுக்கிட்டு எழுவது ஒரு துவக்க உதாரணமாக இருக்கும். சிறுவயதில் இருந்த ஒரு இடத்துக்குப் போகிறோம். அந்த இடம் மாறி விட்டது. ஆனால் சில கணங்களில் நம் வயது நிலை அனைத்தும் மறந்து நாம் வேறு ஆளாக உணர்கிறோம்.

வேறு ஒரு ஊரில் (பல நாள் வசித்த ஊரில்) மிகவும் மன வேதனையுடன் சுற்றித் திரிந்த இடத்துக்குப் போயிருந்தேன். நிகழ்காலமும் இறந்த காலமும் இடம்மாறியும் இரண்டுமே இல்லாமலும் போனது போல் உணர்ந்தேன்.

விழிப்பு கனவு என்னும் இரண்டு நிலைகள், நிகழ் இறந்தகாலம் என்னும் இரு கால அளவுகள் இவை கலைந்து விடும் நிலையை நாம் நீண்ட நேரம் அனுபவிப்பதில்லை ஆனால் அந்த நிலைகளில் ஒரு முக்கியமான சூட்சுமம் இருக்கிறது.

எது அனுபவம்? மனம் உணர்வது மட்டுமே அனுபவம் என்னும் ரகசியமே அது. மனம் அலைக்கழிக்கப் படுவதாகவும் பிறரால் ஆளப் படுவதாகவும் அற்ப விஷயங்களில் சமநிலை இழப்பதாகவும் இருக்கும் வரை அனேக நேரங்கள் நினைவு கூரத்தக்க அனுபவமில்லாமல் அலைக்கழிப்பு என்னும் கசப்பு மட்டுமே மனதில் நின்று விடுகிறது.

நினைவு, கனவு நிலை இரண்டின் இடைப்பட்ட கோட்டை எழுத்தாளன் எளிதாகக் கடந்தே தன் படைப்புகளைச் செய்கிறான். எஸ்.ராவின் புனைவுக்கும் கற்பனைக்கும் நல்ல எடுத்துக்காட்டு இந்தக் கதை. அவருக்கும் உயிர்மைக்கும் நன்றி.

(image courtesy:google & rocorn.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s