சாமி வேஷம் – ஆபாச வசனம் – நாடகக்கலையின் நிழலான மறுபக்கம்


images

சாமி வேஷம் – ஆபாச வசனம் – நாடகக்கலையின் நிழலான மறுபக்கம்

‘காவியத் தலைவன்” சினிமாவைப் பார்க்கும் போது சமகாலத்தில் மேடை நாடகக் கலைஞர்களின் நிலை என்ன என்னும் கேள்வி மனத்துள் கட்டாயம் எழுந்தது. சென்னையில் நாம் காண்பது நகைச்சுவை நாடகங்கள், சமூக நாடகங்கள், கூத்துப்பட்டறையின் நவீன நாடகங்கள் இவை மட்டுமே. “வள்ளித் திருமணம்”, அரிச்சந்திரன் போன்ற நாடகக் கலையின் தொன்மமான மேடை நாடகங்கள் இப்போதும் நடக்கின்றனவா? எப்படி நடக்கின்றன? கலைஞர்களின் நிலை என்ன?

நான் கிராமப் புறத்தில் வளர்ந்தவன் தான். தெருக்கூத்து நாடகங்கள் பாடல் வடிவில் இருக்கும். ஆபாசம் இருக்காது. சமூக நாடகங்கள் ரசிக்கும் படி இருக்காது. அதிலும் ஆபாசமாக எதுவுமில்லை. நான் பதின்களை எட்டும் போதே மேடை நாடகங்கள் மிகவும் குறைந்தன. கரகாட்டக் கலைஞர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும்.

உயிர்மை ஜனவரி 2015 இதழில் லக்ஷ்மி சரவணகுமாரின் ‘வள்ளி திருமணம்’ (ஏனோ த் இல்லை!) சிறுகதை சமகால நாடகக் கலையின் கலைஞர்களின் நிலையைப் புரிய வைக்கிறது.

மாத விடாய் நாட்களிலும் சரியான மாற்றுத்துணி கூட இல்லாமல் மேடையில் வேடம் கட்டும் நடிகைகள் இருவர். அவர்கள் கூட்டத்தை குஷிப் படுத்த வள்ளித் திருமணத்தில் வள்ளியாய் நடிப்பவரும் ஆபாச வசனத்துக்குப் பதிலாக ஆபாசமாகப் பேசும் நிலை. நாரதருக்கும் தான். அவர்களுக்குள் இருக்கும் நிச்சயமின்மை, ஊதியம் குறைவு என்பதால் வறுமை, ராஜபார்ட்- முருகன் என நடிக்குமளவுத் தோற்றமும் பாட்டுத்திறமையும் உள்ள நடிகர்களுக்கு இருக்கும் தலைக்கனம் எல்லாமே கதையில் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. ஓரினச்சேர்க்கையோ அல்லது திருமணம் கடந்த உறவோ அதை அவர்கள் மூடிமறைப்பதில்லை. அவர்கள் அந்தக் கலையின் மலினப் படுத்தப் பட்ட வடிவத்துடன் பிணைக்கப் பட்டு விட்டார்கள். அதன் தொன்மையான பெருமையை மீட்க அந்த எளிய கலைஞர்கள் செய்யக்கூடியது ஏதுமில்லை.

சிறுகதையின் முடிவில் இது சமகால நாடகம் பற்றியதே என்பதான குறிப்புகள் வருகின்றன.

தமிழ், தமிழ்ப்பண்பாடு, தமிழரின் பெருமிதம் என்றெல்லாம் அரசியல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப்பவர்களது குடும்பச் சொத்தான தொலைக்காட்சியில் கூட ஒரு நிமிடம் நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒதுக்கப் படுவதில்லை. கலைகளை வளர்க்க- காக்க, கலைஞர்களை கௌரவிக்க நாம் விரும்பவில்லை. சாதி, மதம், மொழி இவற்றை வைத்து அரசியல் செய்வதில் மட்டுமே நமக்கு முனைப்பு இருக்கிறது.

சினிமாக் கலைஞர்கள் என்று தன்னை அழைத்துக் கொண்டு ஒரு இரண்டும் கெட்டான் கூட்டம் அலைகிறது. அரசியல், சினிமா இரண்டையும் நடத்திச் செல்லும் கலையார்வமில்லாத கடைந்தெடுத்த வியாபாரிகளைத் தாண்டி வெகு ஜனமும், நாட்டுப்புறக் கலைஞர்களும் சந்திக்க ஒரு களன் அல்லது மையம் தேவை. தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும் போது அது நடக்கும்.

(image courtesy: google)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s