எழுத்தாளனால் உயிர்த்தெழ முடியும்


perumalmurugan

எழுத்தாளனால் உயிர்த்தெழ முடியும்

பெருமாள் முருகன் மிகவும் மனம் உடைந்து தமது எழுத்துப் பயணம் நின்று விட்டது என்றும் புத்தகங்களைத் திரும்பப் பெறுகிறேன் என்றும் அறிக்கை அளித்திருக்கிறார். இந்த விஷயத்தில் நான் இது வரை கருத்து எதுவும் கூறவில்லை. ஒரே காரணம் இந்தியாவில் எந்த இடத்திலுமே கருத்துச் சுதந்திரம் கிடையாது என்பதே. இது எல்லோருக்குமே தெரிந்ததே.

தமிழ் நாட்டில் இத்தனை நாள் கருத்துச் சுதந்திரம் இருந்தது – இனியும் இருக்கும்-இவருக்கு இப்போது ஜாதி-மத அமைப்புகள் செய்தது மட்டுமே அநியாயம் என்னும் அபத்தத்தை நானும் சகித்துக் கொள்கிறேன்.

முதலில் தேவை ஒரு பட்டியல்- அதில் விமர்சனங்களை ஏற்கத் தயாராயுள்ள மத அமைப்புகள், ஜாதி அமைப்புகள், கட்சிகள் இவற்றை தமிழ் நாட்டின் ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் பாதுகாப்புக் குத்தகை எடுத்தவர்கள் வெளியிட வேண்டும்.

பெருமாள் முருகன் மற்ற எழுத்தாளர்கள் எப்படிப் பிழைப்பை ஓட்டுகிறார்களோ அப்படியே தான் பிழைப்பை ஓட்ட வேண்டும். அவரது நூலை நான் இன்னும் வாசிக்கவில்லை. புனைகதையில் ஊரையும் அதன் அக்கம்பக்க இடங்களையும் குறிப்பால் உணர்த்த வழி உண்டு. அதைச் செய்திருக்கலாம். இதற்கான பொருள் நான் சகிப்புத்தன்மை இல்லாதோரை ஊக்கப் படுத்துகிறேன் என்பதல்ல. பிழைப்பை ஓட்ட வேறு வழியில்லை என்பதே.

சொரணை உள்ளவன் தமிழ் நாட்டில் எழுதுவதை விட்டுவிடுவதே மேல்.

தானே தன் புத்தகத்தை வெளியிட முயன்று அதற்கு சினிமாக்காரனைக் கூட்டிவந்து, கும்மியடித்துக் கும்பல் கூட்ட வேண்டும்.
அரை வேக்காடு அசடு வெட்டி என அலையும் பலரில் சிலரையாவது வாசகர் வட்டத்தில் சேர்த்துக் கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டும்..
புத்தகத்தை வாசித்து விமர்சிக்க நாம் பிரதியை அனுப்பினால் கூட இத்தனை நாள் நண்பனாயிருந்த சமகால எழுத்தாளரே முன் வர மாட்டார். அதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும்.
அப்படியே விமர்சனம் எழுதும் சிறுபத்திரிக்கைக்காரர் யாராவது அதை இந்த ஜாதிக்காரன் – இந்த கட்சிக்காரன் இப்படித்தான் எழுதுவான் என்று முடிப்பார். சகித்துக் கொள்ள வேண்டும்.
புத்தகங்களை சுருக்கமாகக் கூட இலக்கியப் பத்திரிக்கைகள் விமர்சிப்பதில்லை. அப்படி விமர்சித்தால் அது குழு அடிப்படையில்தான்.
புத்தகப் பதிப்பாளர்கள் எழுத்தாளனை மரியாதையாக நடத்துகிறார்களா என்பது புத்தகம் வெளியிட்ட எழுத்தாளனுக்கும் மட்டுமே தெரியும்.
குடும்பம், உறவு, நட்பு வட்டம் இது கூட எழுத்தைப் படிக்காது நம்மைச் சந்திக்கும் போது வாயில் வந்ததை உளறும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
விருதுகளுக்கு முயல வேண்டும். எப்படி முயல்வது என்பதை ‘இலக்கிய விவாதங்கள்’ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இப்படிக் கேவலாமாக நடத்தியும் மனம் உடைந்து எரிந்து போயும் மீண்டு வந்து ஏன் எழுதுகிறான் ஒரு எழுத்தாளன்?

அவன் எழுதா விட்டால் நட்டம் தன் மொழி பேசும் மக்களுக்கே என்பதால். அவன் மிகவும் நேசிக்கும் மக்களுக்காக. அவர்களுடன் தன் மனக் கிடக்கையைப் பகிர்வதற்காக. இந்தப் பாசத்தினால் தான் எருமைத் தோலோடு எழுதிக் கொண்டு அலைகிறோம்.

பெருமாள் முருகன் மீண்டும் எழுதுங்கள். தோல்வி தற்காலிகமானதே. மீண்டும் புதிய உத்வேகத்தோடு தொடங்குங்கள். எல்லா எழுத்தாளர்களும் உங்கள் பக்கமே.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

3 Responses to எழுத்தாளனால் உயிர்த்தெழ முடியும்

  1. kayalvizhi says:

    திருச்செங்கோட்டை பற்றி எழுதுவதற்கு வேறு எந்த நல்ல விஷயங்களும் கிடைக்கவேயில்லையா..பெண்களை இழிவு படுத்தி ஏன் எழுத வேண்டும்.அது வழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரத்தையும் அவரால் தர இயலவில்லை என்பதையும் அறிகிறேன்.அப்படியே இருந்திருந்தாலும் இப்போது அது பற்றி ஏன் எழுத வேண்டும்.இந்த காலத்திற்கு அது எப்படி பயன்பட போகிறது.நல்லவைகளை எழுதுங்களேன்.

    • தங்கள் தரப்பை நான் புரிந்து கொள்கிறேன். இன்று எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை தினமலரில் வந்துள்ளது. வரலாறு பற்றிய தங்கள் கருத்துக்கு அவரது விளக்கமான கட்டுரை பொருந்தும். ஒரு நிலப்பகுதி அல்லது ஜாதி மக்கள் மற்றும் பெண்கள் வருந்துவதை யாரும் நியாயப் படுத்தவில்லை. மறுபக்கம் பெருமாள் முருகன் அந்த நோக்கத்தோடு எழுதவில்லை என்பதையும் அவருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதியிருக்கிறார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாவல்கள் கற்பனைக் கதைகளே. நீண்டகால இலக்கியப் பயணம் அவருடையது. இந்த முடிவு வருத்தமளிப்பது.

  2. SENTHILKUMAR says:

    பெருமாள் முருகன் அருமையான கதை சொல்லி வருத்தமாக உள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s