டிடி பாரதி தொலைக்காட்சியில் சத்தீஸ்கட் மாநிலம் சிர்பூரில் நடைபெறும் இசை விழாவின் நேரடி ஒளிபரப்பை 17.1.15 இரவு ரசித்துக் கொண்டிருந்த போது ஒரு இன்ப அதிர்ச்சி. ஜப்பானிய இசைக்கலைஞர் லியோனார்ட் டியோவின் டிரம் இசை என்று அறிவித்தார்கள். ஜப்பானிய இசை நான் கேட்டதே இல்லை. மிகவும் வித்தியாசமான பெரிய டிரம். அது ஒரு பக்கம் மட்டும் தோல் உள்ள பெரிய வட்டமான தலைக்கு மேல் நின்ற வாத்தியம். இரண்டு பெரிய கழிகளால் அதை இசைத்தார். மற்றும் மிருதங்கத்தை நிற்க வைத்தது போல இரண்டு தோல் வாத்தியங்கள். நம்மூர் ஜால்ராவின் பெரிய வடிவம் இவை அனைத்தையும் வைத்து அருமையான ‘பீட்ஸ்’ ஆன தாளவாத்தியக் கச்சேரி செய்தார். யூட்யூபில் அவரது ஒரு இசைக்கான தளத்தைக் கண்டேன். இணைப்பு இதோ.
(image courtesy:DD Bharati)