Monthly Archives: January 2015

தமிழ் நாட்டு அரசியலின் தரத்தாழ்வு- நெடுமாறன் கட்டுரை


தமிழ் நாட்டு அரசியலின் தரத்தாழ்வு- நெடுமாறன் கட்டுரை பெரியவர் நெடுமாறன் மிகவும் வித்தியாசமான ஒரு ஆளுமை. பண்பாளர். மூத்த அரசியல்வாதி. அவர் எனக்கு வியப்பளித்தது காங்கிரஸ் பின்னணியிலிருந்து அவர் இலங்கைத் தமிழரின்  உரிமைக்காகப் போராடுபவரானது. அவர் மனமாற்றம் கொண்ட வயது இளம் வயதல்ல (சீமான் போல). எந்த பிரச்சனையைக் கையில் எடுத்தாலும் எடுப்பார்கள் தமிழ்ப் பண்பாட்டுக் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

எழுத்தாளனால் உயிர்த்தெழ முடியும்


எழுத்தாளனால் உயிர்த்தெழ முடியும் பெருமாள் முருகன் மிகவும் மனம் உடைந்து தமது எழுத்துப் பயணம் நின்று விட்டது என்றும் புத்தகங்களைத் திரும்பப் பெறுகிறேன் என்றும் அறிக்கை அளித்திருக்கிறார். இந்த விஷயத்தில் நான் இது வரை கருத்து எதுவும் கூறவில்லை. ஒரே காரணம் இந்தியாவில் எந்த இடத்திலுமே கருத்துச் சுதந்திரம் கிடையாது என்பதே. இது எல்லோருக்குமே தெரிந்ததே. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 3 Comments

வட இந்திய நாட்டுப்புறப் பாடலுக்கு குச்சுப்புடி நடனம்


வட இந்திய நாட்டுப்புறப் பாடலுக்கு குச்சுப்புடி நடனம் பாரம்பரியக் கலைகளில் கர்நாடக சங்கீதம், குச்சுப்புடி, கதகளி ஆகியவற்றில் புதுமைக்கான வாய்ப்புக்கள் குறைவு. பரத நாட்டியத்தில் தனஞ்சயன் நந்தானார் சரித்திரம் செய்தது ஒரு புதிய முயற்சி. ஆனால் அது ஒரு விதிவிலக்கே. 13.1.2015 அன்று டிடிபாரதி தொலைக்காட்சியில் நான் ஷல்லு ஜிண்டால் என்னும் கலைஞரின் குச்சுப்புடி நடனத்தைக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Leave a comment

இலங்கைக் கவிஞர் ஊர்வசியின் கவிதை


இலங்கைக் கவிஞர் ஊர்வசியின் கவிதை காலச்சுவடு ஜனவரி 2015 இதழில் இலங்கைக் கவிஞர் ஊர்வசியின் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. அவரது கவிதைத் தொகுதியில் இடம் பெற உள்ள கவிதைகளில் சில. ‘மனசும் மதிலும்’ என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது. மெல்லத் தோள் தழுவி முந்தானை எதற்கென்று கேட்கும் மென்காற்று உட்புழுக்கம் தணிக்காது எனக்கு அங்கே வெகு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

பெருமாள் முருகனின் ‘மாலை நேரத் தேனீர்’ – சரியாகக் கொதிக்கவில்லை


பெருமாள் முருகனின் ‘மாலை நேரத் தேனீர்’ – சரியாகக் கொதிக்கவில்லை காலச்சுவடு ஜனவரி 2015 இதழில் பெருமாள் முருகனின் ‘மாலை நேரத் தேனீர்’ சிறுகதை வெளியாகி இருக்கிறது. அவர் ஒரு நவீனச் சிறுகதையின் சாத்தியங்களைப் பயன்படுத்தாத ஒரு படைப்பைத் தந்து ஏமாற்றம் தந்திருக்ககிறார். ஒரு பேராசியரின் தனிமையையும் அவருக்கும் மாணவருக்கும் இடைப்பட்ட தலைமுறை இடைவெளியையும் மையப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

வால் துண்டு – நீல பத்மநாபன் கவிதை


வால் துண்டு – நீல பத்மநாபன் கவிதை ஜனவரி 2015 தீராநதி இதழில் நீல.பத்மநாபனின் ‘வால் துண்டு’ என்னும் சின்னஞ்சிறு கவிதை வந்துள்ளது: விநாயகரைப் பூஜித்தான் ஆஞ்சனேயரைப் பூஜித்தான் பிரம்மச்சரியம் கைகூடுவதாய் போக்குக் காட்டியது காண்பவை கேட்பவை சுவைப்பவை முகர்பவை தீண்டுபவைகளால் பொசுபொசுத்துப் போய்விடுமோவென அஞ்சி செய்வதறியா உயிருள்ள பல்லியின் வால் அசைவது நம் கவனத்தைப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

தகவல் தொழில்நுட்ப வேலையின் சவால்கள் – ஜெயமோகன் கட்டுரை


தகவல் தொழில்நுட்ப வேலையின் சவால்கள் – ஜெயமோகன் கட்டுரை ஒரு தந்தையின் குரலாகக் கவலையுடனும் மறுபக்கம் தைரியமாகச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்னும் கருத்தை முன் வைத்தும் ஜெயமோகன் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அவரது அறிவுரைகளை இளைஞர்கள் அனைவருமே படிக்க வேண்டும். அவர்களுக்குத் தொழிற்சங்கம் வேண்டும் ஆனால் அது அரசியல் தலையீடு அற்றதாக இருக்க வேண்டும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

சுந்தரராமசாமியின் அங்கதம்


சுந்தரராமசாமியின் அங்கதம் வழிபாட்டுத்தலங்களில், மத நிகழ்ச்சிகளில் பல சடங்கு, சம்பிரதாயங்கள் உண்டு. அவை பலரின் பிழைப்புக்கு அடிப்படையானவை. சடங்குகளைச் செய்யும் போது தம் மூதாதையருக்குச் செய்யும் ஒரு மரியாதையாக அது அமைகிறது என்பது மற்றொன்று. இவை இரண்டைத் தவிர்த்துப் பார்த்தால் சடங்குகள் எந்த உள்ளர்த்தமும் காரணமும் இல்லாத கட்டாயங்களாக நின்று விடுகின்றன. அதனால் ஒரு எல்கேஜி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

சாமி வேஷம் – ஆபாச வசனம் – நாடகக்கலையின் நிழலான மறுபக்கம்


சாமி வேஷம் – ஆபாச வசனம் – நாடகக்கலையின் நிழலான மறுபக்கம் ‘காவியத் தலைவன்” சினிமாவைப் பார்க்கும் போது சமகாலத்தில் மேடை நாடகக் கலைஞர்களின் நிலை என்ன என்னும் கேள்வி மனத்துள் கட்டாயம் எழுந்தது. சென்னையில் நாம் காண்பது நகைச்சுவை நாடகங்கள், சமூக நாடகங்கள், கூத்துப்பட்டறையின் நவீன நாடகங்கள் இவை மட்டுமே. “வள்ளித் திருமணம்”, அரிச்சந்திரன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

எல்லாம் தெரிந்த எம் முன்னோர்கள் என்னும் வறட்டுச் செருக்கைச் சாடும் கட்டுரை


இந்த வருடத்துக்கான ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதில் வாசிக்கப் பட இருக்கும் கட்டுரைகளில் ஒன்று புராதன இந்தியாவில் புஷ்பக விமானத்தில் பல கோள்களுக்கும் போனார்கள் என்னும் அபத்தமான கட்டுரை. நேற்றே இது பற்றிய கண்டனங்கள் ஊடகங்களில் வந்தன. என் மகன் இது பற்றிக் கேட்ட … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment