அ.முத்துலிங்கத்தின் சிறுகதை- மண்ணெண்ணை கார்க்காரன்


download

அ.முத்துலிங்கத்தின் சிறுகதை- மண்ணெண்ணை கார்க்காரன்

பிப்ரவரி 2015 தீராநதி இதழில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை “மண்ணெண்ணை கார்க்காரன்” இலங்கைத் தமிழரின் நிலை பற்றிய மனதை நெருடும் பதிவு.
போராளிகள் பொது மக்கள் இருவருக்குமே பெட்ரோல் என்பது அரிதாகவே பல காலம் இருந்தது. அப்போது பெட்ரோலுக்கு ஒரு ‘டாங்க்’ மண்ணெண்ணைக்கு ஒரு டாங்க் என்று வடிவமைத்து இயங்கச்செய்ததால் புகழ் பெற்றவன் இந்த இளைஞன். வண்டி கிளம்பும் போது பெட்ரோல் வேலை செய்யும். நகர்ந்த பின் மண்ணெண்ணை.
2009ல் இறுதி யுத்தத்துக்குப் பின் ஒரு கார் ‘மெக்கானிக்’ ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப் படுகிறான். அவனால் தாங்க முடியாத காயமும் வலியுமான நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கிருந்து அவன் தப்பி தைலாந்துக்குப் பயணப் படுகிறான். அங்கேயே சில காலம் இருந்து விட்டு வேறு சில ஆண்களுடன் எங்கே போகிறோம் என்றே தெரியாமல் ஒரு சிறிய வணிகக் கப்பலில் அவன் பயணிக்கிறான். அந்தக் கப்பலில் பயிற்சியில்லாத ஒரு இளைங்கனே மாலுமி.

‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் காட்சி அனுபவத்தை ஒத்த வாசிப்பு அனுபவம் இந்த இடத்தில் இருந்து கதையில் நமக்குக் கிடைக்கிறது. மழை புயல் என சிறிய கப்பல் பல முறை கவிழுமோ என்னுமளவுத் தடுமாறிச் செல்கிறது. எல்லா மதத்துப் பிரார்தனைகளையும் அவர்கள் செய்கிறார்கள். மாலுமிகளுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆல்பாற்றுஸ் என்னும் ஒரு கடற்பறவை. அதன் இறக்கைகளே இரண்டு மூன்று அடி நீளம். அந்தப் பறவை அடிபட்டுக் கப்பலின் தளத்தில் வந்து விழுகிறது. அது இறந்தாலோ அல்லது துன்புறுத்தப்பட்டு சாபம் இட்டாலோ கப்பலுக்கு நல்லதில்லை. தங்களுக்குத் தெரிந்த முதல் உதவி செய்து அதை அவர்கள் பறக்க வைக்க அது பறந்து மறைகிறது. 45 நாட்கள் இவ்வாறாகக் கடலிலேயே கழிகின்றன. புயல்கள் ஓய்ந்த பின் கப்பலின் எஞ்சின் பழுதாகி அதை அந்தப் பயிற்சியில்லாத மாலுமியே கடலில் இறங்கிக் கப்பலின் அடித்தளத்தில் சென்று சரி செய்கிறான். அவனே எப்படியோ நாம் உலகக் காலக் கோட்டை கடந்து விட்டோம். பசிபிக் கடலில் எங்கேயோ இருக்கிறோம் என்னுமளவு உறுதி செய்கிறான். தண்ணீர் தீர்ந்து போகும் நிலையில் ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக ஒரு ஹெலிகாப்டர் தென்படுகிறது அதன் மீது கனடா நாட்டுக் கொடி. நிம்மதிப் பெருமூச்சுடன் இறங்கினால் அங்கேயும் சிறை. ஐந்து வருடம் கழித்து அகதி என்னும் அடையாளம். கதையை முடிக்கும் போது 76 நபர்கள் பற்றிய விவரம் தருகிறார்:
30 அகதிகளாக ஏற்கப்பட்டனர்
27 நிராகரிக்கப் பட்டனர்
7 திருப்பி அனுப்பப் பட்டனர்
12 பேர் முடிவு இன்னும் தெரியவில்லை.
2014 முடிவில் அகதி என்னும் நிலை கிடைக்கப்பெற்ற ஒருவனின் கதை இது.

இலங்கைத் தமிழரின் நிலையில் நீண்ட நெடுங்காலமாக இருந்த நிச்சயமின்மையும் மரணங்களும் பிரிவுகளும் புலம் பெயர்வதே தேவலாம் என்னும் நிலையும் இன்னும் மாறவில்லை என்பதையே கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இளைய அப்துல்லாவின் ஒரு பதிவும் புலம் பெயர்வதில் உள்ள போராடங்கள் பற்றியதே.
அவர்களின் காப்பாளன் நான் தான் என்று மார்தட்டி இங்கே அரசியல் செய்வோருக்கு இத்தகைய இலக்கியமே பதிலடி.

(image courtesy:totontoreviewbooks.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s