அய்யப்ப மாதவனின் வசன கவிதை


iyyappan photos 023

அய்யப்ப மாதவனின் வசன கவிதை

வசனகவிதையில் நம்மை ஈர்ப்பது அது தரும் அழகிய வாசிப்பு அனுபவம். காதலி மனைவியாகிப் பின் கடுமையான கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகிறாள். அவளைப் பிரிந்த காலத்தில் அவளுக்குக் கணவன் எழுதும் ஒரு கவித்துவமான கடிதம் அய்யப்ப மாதவனின் “யாமினிக்கு கடிதங்கள்” என்னும் வசனகவிதை. இது தீராநதி பிப்ரவரி 2015 இதழில் வெளியாகி இருக்கிறது.

அவர்கள் மணமாகித் தான் பிரிந்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ளக் காரணம் திருமணம் செய்து கொள்ளும் ஆவலை நீண்ட கவிதையின் எந்த இடத்திலும் காணவில்லை. அருகாமையில் இருந்த ஒன்றாய் வாழ்ந்த காலங்களும் நினைவு கொள்ளப் படுகின்றன.

இந்த வசன கவிதையின் மிகப்பெரிய பலம் இதன் காவியச் சுவைதான். தன் காதலியை இயற்கையின் வடிவாக பல்வேறு பருவகாலங்களின் ஒரு அங்கமாக அவளது காதலன் காண்கிறான்.

காதல்வயப் படுவதும் அதன் தீவிரமும் கண்டிப்பாக கால ஓட்டத்தில் வேறு ஒன்றாகப் பரிணமிக்கும். திருமணமாகும் போது அது குழந்தைகள் மீதான அன்பாக இயல்பாக மாற்றம் கொண்டு அதிதீவிரத்தின் கடுமையை நீண்டகாலம் இருத்தி வைத்துக் கொள்ளும் கட்டாயத்தைத் தவிர்க்கும்.

நிறைவேறாத அல்லது மற்றொன்றாகப் பரிணமிக்காது தீவிரமாகவே நிற்கும் காதல் உள்ளார்ந்த ஒரு வேதனையைச் சுமக்கிறது. அந்த வேதனையில் கடவுளுக்கும் பக்தனுக்கும் உண்டான ஒரு பந்தத்தின் சாயல் இருக்கும். அது இந்த வசனகவிதையில் காணக் கிடைக்கிறது. இயற்கையை, வெவ்வேறு பருவகாலங்களை எல்லாவற்றையுமே காதலியாகக் காண்கிறான் காதலன்.

காதலிக்கப் படுவது யாருக்குமே இனிமையானதுதான். மறுபக்கம் கசப்பானது தன்மீது காதல்வயப் பட்டவரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது தான். அது தனது இயல்பான விருப்பமானதாக இல்லாமல் திணிக்கப் பட்ட ஒன்று. ஆனால் அதே சமயம் அவனை அல்லது அவளை விட்டுவிடவும் மனம் வராது.

முடிவில்லாத இருமை நிலை இது. இந்த இருமை நிலை தரும் சிலிர்ப்புகள் உயிர்ப்புள்ள நொடிகள் வாழ்க்கையின் நினைவு கூரத்தக்க பக்கங்களை எழுதுகின்றன. மனித உறவின் சிக்கல்களும் முரண்களும் இலக்கியத்தின் மையக் கருக்கள். அய்யப்ப மாதவனின் வசனகவிதையின் ஊடாக நாம் சென்ற்டயும் புரிதலும் இந்த முரண்களைப் பற்றியதே. மொழிபெயர்த்தவர் பெயரைப் போட்டிருக்கலாம்.

(image courtesy:letgolatha.blgspot.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s