Monthly Archives: March 2015

சலவை


சொல்வனம் 15.3.2005 இதழில் வெளியானது தனது இரு சக்கர வாகனத்தை ‘மேன்ஷனி’ன் கீழ்த்தள ஓரத்து நடையில் நிறுத்தினான் முத்துக் குமார். இரண்டாம் மாடியில் உள்ள தன் அறைக்குப் போகவில்லை. வெள்ளிக் கிழமை. வெக்காளியம்மன் கோயிலுக்கு வாகனங்களும் நடையாய்ச் செல்வோருமாய் நெரிசல். சிரமப் பட்டு சந்தின் மறுபக்கம் வந்து நேரே நடந்து ஜீயபுரம் செல்லும் சாலையில் திரும்பினான். … Continue reading

Posted in சிறுகதை | Tagged | Leave a comment

அழகிய புதிர்


அழகிய புதிர் சத்யானந்தன்  மரத்தின் இலைகிளையின் அடர்ந்த பெரும் தோற்றமாய் வெள்ளைப் படுதா மேல் வீச்சுடன் விழுந்த கருப்பு மையாய் அரிதாய்க் காணும் யானையின் சயனமாய் வெண்பஞ்சுச் சிதில் விஸ்வரூபமானதுவாய் கடலலையின் நுரை வடிவாய் மேகங்கள் அலையும் அடிக்கடி வடிவம் மாறும் வானின் மன அலைகள் என் கற்பனை விரிய விரிய வெவ்வேறாய்த் தெரியும் அழகு … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

கிரிக்கெட் தவிர்த்த விளையாட்டு வீரர்கள் நிலை – புகைப்படம்


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சாய்னா நெக்வால் நாட்டுக்குத் தந்திருக்கும் பெருமை


Career record சாய்னா நெக்வால் நாட்டுக்குத் தந்திருக்கும் பெருமை ‘பேட் மிண்டன்’ விளையாட்டில் உலகில் முதன்மை விளையாட்டு வீரர் என்னும் உயரிய சாதனையை எட்டியிருக்கிறார் சாய்னா. ” இந்தியன் ஓபன் ஸீரீஸ் பாட்மிண்டன் ” தொடரில் ஜப்பான் வீராங்கனை யூ ஹஷிமோடாவை வென்ற போது உலகத் தர வரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார். பேட் மிண்டன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனின் சிறுகதை திருட்டு நாய்


ஜெயகாந்தனின் “ஒரு பிடி சோறு” சிறுகதை கூலிக்காரப் பெண் ஒருத்தி நிறைமாத கர்ப்பிணி. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து அடுப்புப் பற்ற வைத்து சோறு வடித்து ஒரு கவளம் உண்ணும் முன் பசியிலும் பிரசவ வலியிலும் துடித்து அவள் உயிர் பிரிந்துவிடும். அந்தக் கதையை வாசகருடன் அவர் பகிரும் விதம் மனத்தில் என்றுமே நீங்காத ஒரு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஹூந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ – வைக்கம் முஹம்மது பஷீர் சிறுகதை


ஹூந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ – வைக்கம் முஹம்மது பஷீர் சிறுகதை சிறுகதையின் ஒரு இடத்தில் “பெண்ணுலகம்- பெண் ஒரு ஹூந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ . நல்லவை-கெட்டவை, நறுமணம்- நாற்றம், அழகு-அவலட்சணம் ஆகியவற்றின் நிழல் தான் பெண்” என்னும் உரையாடல் வருகிறது. எழுத்தாளர் தம் தோழியுடன் நடத்தும் உரையாடலே கதை முழுவதும். மிகவும் நகைச்சுவையான கதை. நாம் படிக்கும் கதைகளில் நகைச்சுவை உள்ள … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

சா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி


சா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி 27.3.2015 தினமணி நாளிதழில் சா.கந்தசாமி “சுதந்திரத்தின் எல்லைகள்” என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். சா.கந்தசாமியின் சாயாவனம் என்னும் நாவலை நான் வாசித்திருக்கிறேன். தமிழின் முக்கியமான படைப்புக்களில் அது ஒன்று. இயற்கையை ஒட்டிய வாழ்க்கையை அது என்றும் நினைவு படுத்தும். வன வளங்களை அழிக்கும் போக்கு இந்த நாவல் வந்த போது எந்தக் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

சமூகத்தில் எழுத்தாளனின் இடம்


சமூகத்தில் எழுத்தாளனின் இடம் தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன? என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே: ——————————————————————————————————————————- … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ஒட்டுண்ணிகள்


ஒட்டுண்ணிகள் சத்யானந்தன்  உன் உண்மை எது உண்மை என்னும் கேள்வி இரண்டும் பலிபீடம் ஏற என் உண்மை நிறுவப் படும் அலைதல் திரிதலே தேடல் பிடிபட்டதே புரிதல் என்னும் விளக்கங்கள் இடம்பிடிக்கும் அகராதிகளில் என் உண்மையின் அரசியலில் தனிமையின் உயிர்ப்பு தனித்துவத்தின் ஆற்றல் நீர்த்துப் போகும் கரவொலிகள் ஒட்டுண்ணிகளாய் (imagecourtesy:wiki)

Posted in கவிதை, திண்ணை | Tagged , , | Leave a comment

நவீனக் கவிதைகளுக்கான இடம்- ஜெயமோகனின் மனத்தடைக்கு எதிர்வினை


நவீனக் கவிதைகளுக்கான இடம்- ஜெயமோகனின் மனத்தடைக்கு எதிர்வினை சமீபத்திய பேட்டி ஒன்றில் நவீனக் கவிதை காவியங்களுடன் ஒப்பிட இரண்டாமிடமே பெறும் என்னும் ஜெயமோகனின் பதிவைக் கீழே காண்போம்: 18. மொழியின் உச்ச வெளிப்பாடு கவிதை. எந்த ஒரு மொழியிலும் கவிஞனே எழுத்தாளனுக்கு மேல் உயர்ந்தவனாய்க் கொண்டாடப்படுகிறான். (இரவு நாவலில் வரும் கவிதைகள் தவிர்த்து) நீங்கள் ஏன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment