வெள்ளைக் கூடாரங்கள் – மலையாள எழுத்தாளர் சேதுவின் சிறுகதை


images

வெள்ளைக் கூடாரங்கள் – மலையாள எழுத்தாளர் சேதுவின் சிறுகதை

ஒரு சிறுகதை என்பதை எது முடிவு செய்கிறது? கதையின் நீளமா? கதைக்குள் வரும் காலங்களின் அளவா? இவை எதுவுமே இல்லை. நெடுங்கதை குறுநாவல் இவற்றிலிருந்து சிறுகதை தன் தொனியில் மட்டுமே வேறு படுகிறது. சிறுகதை தன் பார்வையில் ஒரு பனிமனையின் முகடைப் பார்வைக்கு வைக்கும். பதிவின் தொனி பனிமுகட்டின்  பரிமாணங்கள் பார்வையில் பட்ட அளவில் விவரிப்பாக நிற்கும். சிறுகதையின் தொனி ஒரு வாசலை மட்டும் திறந்து பிற வாசல்களை வாசகன் திறப்பதாகும்.

வெள்ளைக் கூடாரங்கள் நீளமானது ஆனால் சிறுகதையே.

நவீன சிறுகதை என்று ஒரு கதை எதை வைத்து அடையாளம் காணப் படுகிறது? வாழ்க்கையைப் பற்றிய தரிசனம் ஒன்றை எப்படி அந்தக் கதை வாசகனுக்கு சாத்தியமாக்குகிறது என்பதை வைத்தே. நிறைய சிறுகதை எழுதி இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் பலரிடமும் ஏகப்பட்டவிவரங்களை வாசகனுக்கு வரிசைப் படுத்துவது அலுப்பூட்டுவதைப் பார்க்கலாம். நவீனச் சிறுகதையின் முனைப்பு ஒரு தரிசனத்தை அதற்கான ஒரு வாசலைத் திறந்து விடுவதே. கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து அல்ல அந்தத் தரிசனம். கதாபாத்திரம் தனித்தும் வாசகன் தனித்தும் போய் விடுகிறார்கள். கதாபாத்திரம் தன் குறைபட்ட பார்வையை தனது பழுதான அணுகுமுறையைத் தாண்டமுடியாத ஒரு சராசரி ஆள் தான். எனவே வாசகன் கதாபாத்திரத்தைத் தாண்டிச் செல்கிறான். கோர்வையான விவரங்கள் அவனுக்கு இப்போது தேவைப்படவில்லை. அவனுக்கு கதையின் திருப்பங்கள் சுவாரசியம் தரவில்லை. மனித முரண்கள் வாழ்க்கையின் விடையில்லாத புதிர்களே அவனுக்குப் பிடிபடுகின்றன.

இந்தச் சிறுகதையில் ஒரு இளம் பெண் தன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மூன்று உறவுகளை நினைவு கூர்கிறாள். சீரான, துல்லியமான, விவரமான நினைவு கூரல் இல்லை இது. அவளுக்கும் அவளது அம்மாவுக்கும் தன்னை மறந்து கூச்சலிட்டு வன்முறையாகப் பொருட்களை உடைக்கும் நரம்பு தொடர்பான மன நோய் ஒன்று உண்டு. கதையில் தன் காதலனுடன் அவள் தனது இறாந்த காலம் பற்றிய சில நினைவுகளைப் பகிர்கிறாள். முழுக் கதையுமே இந்தப் பகிர்தலே. தனது அம்மாவை விட தனக்கு ஏன் அம்மாவின் தங்கையான (விதவையுமான) சித்தியையே பிடித்தது – அபுதாபியில் இருக்கும் அப்பாவுக்கு அம்மா ஏன் கடிதமே எழுதவில்லை. அவர் திரும்பி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அம்மாவுக்கு இல்லை. இந்த இடத்தில் நாம் கதை சொல்லியான பெண் அவளது தகப்பன் சித்தி என்று மூவரும் ஒரு உலகமாகத் தென் படுகிறார்கள். அந்த உலகம் அம்மாவுக்கு அன்னியமாக இருப்பது மட்டுமல்ல, சித்தியையும் அப்பாவையும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்னும் போது அவர்கள் இருவரையும் சேர்த்த ஏதோ ஒன்றே அதற்குக் காரணம் என்று நாம் யூகித்து மேற் செல்கிறோம்.

நவீன சிறுகதையின் சாத்தியங்களை உள்ளடக்கிய சிறு கதை இது.

“திசை எட்டும்” ஜனவரி- மார்ச் 2015 இதழில் வாசிக்கக் கிடைத்தது இந்தச் சிறுகதை.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s