சாய்னா நெக்வால் நாட்டுக்குத் தந்திருக்கும் பெருமை


1964939_786000208107657_7698998852926148001_n
Career record

சாய்னா நெக்வால் நாட்டுக்குத் தந்திருக்கும் பெருமை

‘பேட் மிண்டன்’ விளையாட்டில் உலகில் முதன்மை விளையாட்டு வீரர் என்னும் உயரிய சாதனையை எட்டியிருக்கிறார் சாய்னா. ” இந்தியன் ஓபன் ஸீரீஸ் பாட்மிண்டன் ” தொடரில் ஜப்பான் வீராங்கனை யூ ஹஷிமோடாவை வென்ற போது உலகத் தர வரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.

பேட் மிண்டன் விளையாட்டில் ஆடவர் தரவரிசையில் பிரகாஷ் படுகோன் உலகத்தில் முதன்மை பெற்றவர். ஆனால் மகளிரில் இந்த சாதனையைப் படைத்தது சாய்னா மட்டுமே. அகில இந்திய மற்றும் உலக அளவுப் பந்தயங்கள் பலவற்றிலும் வெற்றிகளைக் கண்ட சாய்னா 2012 ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றவர். அவரது சாதனைகளின் பட்டியல் இது:

Event Year Result
Philippines Philippines Open (badminton) 2006 Gold
India2012 Summer Olympics 2012 Bronze
India2010 Badminton Asia Championships 2010 Bronze
India National Games of India 2007 Gold
India Indian National Badminton Championships 2007 Gold
India Indian National Badminton Championships 2008 Gold
India Asian Satellite Badminton Tournament 2005 Gold
India Asian Satellite Badminton Tournament 2006 Gold
Czech Republic Czechoslovakia Junior Open 2003 Gold
Chinese Taipei 2008 Chinese Taipei Open Grand 2008 Gold
(courtesy:wikipedia)

பேட் மிண்டன் கடுமையான போட்டி நிறைந்த துறை. சாய்னா சமீபத்தில் பிரகாஷ் படுகோனின் பயிற்சிப் பள்ளியில் பங்களூருவில் சேர்ந்து பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தார். கடுமையான உழைப்பும் பயிற்சியுமே அவரை இன்று ஒரு சிகரமான பெருமைக்குக் கொண்டு சேர்த்திருக்கின்றன.

படிக்கும் வயதில் விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் தரப் பெற்றோரும் பள்ளிகளும் முனனைப்புக் காட்டாத சூழலே. குழந்தைகளுக்கு போட்டியிடும் உற்சாகம், பயிற்சியும் உடல் வலிமையும் பெறும் முனைப்பு இவை சிறுவயது முதலே விளையாட்டில் காட்டும் ஈடுபாட்டால் மட்டுமே சாத்தியமாகும். இப்போது வெற்றி பெற்றிருக்கும் ஓரிருவரும் தனது கனவு மற்றும் பெற்றோரின் ஆதரவு இவற்றால் மட்டுமே முன்னேறியவர்கள். அரசாங்கம் விளையாட்டைக் கட்டாயாப் பாடமாக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் ஊக்கம் அளிக்க வேண்டும். அப்போது நல்ல ஆளுமையுடன் விளையாட்டுத் தேர்ச்சியுடன் பல மாணவர்கள் வெளிவருவார்கள். லட்சக் கணக்கில் விளையாட்டு ஆர்வமுள்ளவர்களை நாம் உருவாக்கினால் அவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய உலக அளவில் சாதனை செய்யும் வீரர்கள் வெளிவருவார்கள்.

சாய்னா பல பெண் குழந்தைகளுக்குச் சரியான முன் உதாரணம். அவருக்கு நம் வாழ்த்துக்கள்.
(image courtesy:facebook)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s