குரூரமானவனின் படைப்பு வாசிக்கப் படலாமா? மதிக்கப் படலாமா?


220px-Günter_Grass_auf_dem_Blauen_Sofa

குரூரமானவனின் படைப்பு வாசிக்கப் படலாமா? மதிக்கப் படலாமா?

இந்த மாதிரி ஒரு கேள்விக்கு வாய்ப்பளித்தவர் குந்தர் கிராஸ் (Gunter Grass) . நோபல் பரிசு வென்ற இவர் தமது வாழ்நாள் முடிவில் தாம் நாசிப் படையில் கொலைச் செயல் செய்தவர்களில் ஒருவர் என்று ஒப்புக் கொண்டார். ஆரம்பத்தில் தாம் நாசிக்களை ஏற்கவே இல்லையென்றே கூறி வந்தார். தமது சுயசரிதத்திலும் அவ்வாறே பதிவு செய்தார். 1999ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். அவரது நாடான போலந்தை மையப் படுத்தி எழுதிய TIN DRUM என்னும் நாவலே அவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான போலந்து, ஜெர்மனியை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல். டின் டிரம் மற்றும் பின் வெளிவந்த நாவல்களின் அடிப்படையில் அவர் ஜெர்மனியின் மனசாட்சி என்றே ஒரு காலகட்டத்தில் அழைக்கப் பட்டார் அப்போதெல்லாம் அவர் நாசிப் படைகளின் செயலுக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என்னும் நிலைப்பாட்டையே எடுத்து வந்தார். அவரது புகழ் உச்சத்தை எட்டியது.

தமிழின் பண்பாட்டு அடையாளமான ஆளுமைகளுள் முக்கியமானவர் எம்டிஎம் என்று அறியப்படும் எம்டி முத்துக்குமாரசாமி. நாட்டுப் புறக் கலைகளில் மற்றும் பழங்குடியினரின் மொழி, பண்பாட்டு ஆய்வாளர். அவரது கட்டுரை “மனசாட்சியின் குரலில் பிசிறு தட்டியதா?” என்னும் கட்டுரை தமிழ் ஹிந்து 19.4.2015 பதிப்பில் வெளியாகி இருக்கிறது. “ஆனால் குந்தர் கிராஸ் வாழ்க்கையை மீறி ‘டின் டிரம்’ என்ற கலைப்படைப்பு காலத்தை விஞ்சிய பயங்கர அழகுடன் மிளிர்ந்து கொண்டுதான் இருக்கும்” என்று கட்டுரையை நிறைவு செய்கிறார்.எம்டிஎம்மின் பார்வையில் ஒரு பிரதி அதன் உள்ளடக்கத்துக்காக மட்டுமே வாசிக்கப்பட முடியும். இது வித்தியாசமான அணுகுமுறை மட்டுமல்ல. வாசிப்பு மற்றும் இலக்கியம் பற்றிய ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புவது.

ஒரு எழுத்தாளன் என்பவன் அசரீரி போன்றவன் அல்லன். அவன் தனது படைப்பின் வாயிலாக முன்வைக்கும் சித்தரிப்புகள் சிந்தனைகள் அவனுடைய ஆளுமையுடன் தான் அடையாளபடுத்திக் கொள்ளப் படுகின்றன. அவனுக்கு முரண்பாடுகளுடன் படைப்பாளியாக இருப்பதற்கும் சிந்தனையில் பரிணாமம் அடைவதற்கும் உரிமை உண்டு தான். ஆனால் மனித குலமே வெறுக்கும் நாசகார இனப்படுகொலையில் பங்கேற்ற ஒருவனின் பிரதியும் அதன் உள்ளடக்கத்துக்காக வாசிக்கப் படலாம் என்றால் அதன் பொருள் பிரதியை மட்டும் பார் அதன் பின்னாலுள்ள படைப்பாளியின் குறை நிறைகள் மற்றும் பின்னணியை அல்ல என்பதாகும். இது தீர்க்கமான சிந்தனைக்கும் விவாதத்துக்கும் உரியது. கிராஸ் மிகப் பெரிய பொய்யராகவும் இருந்திருக்கிறார். நோபல் பரிசு போன்ற உயரிய விருதையும் சர்வ சாதாரணமாக ஏற்றிருக்கிறார்.

எம்டிஎம்மின் கட்டுரையைப் படித்த உடன் ஒரு பிரதியை நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் படிப்பது சாத்தியமே இல்லை என்றே தோன்றியது. ஆனால் அவரது தனித்துவமான கருத்து சிந்தனையைத் தூண்டியிருக்கிறது.

(image courtesy:wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to குரூரமானவனின் படைப்பு வாசிக்கப் படலாமா? மதிக்கப் படலாமா?

  1. Bala Sundara Vinayagam says:

    Refer to your last para. You don’t say anything definitely. What is your own view in the matter? Do you agree with the other person called Muthu Kumara swamy? Can a creative fiction be a separate and unique entity or is it compulsorily to be linked and seen with the entity i.;e. the creator?

    Say your view and I have come here to know your view. Not M D Muthukumara samy. Could you tell me what is your own view? That can enable the readers to discuss your view?

    • இந்த இணைய தளத்தில் நான் வாசித்தவை பற்றிய எனது எதிர்வினையுடன் முக்கியமான பதிவுகளை அனைவருடனும் பகிர்கிறேன். என் எழுத்துக்கள் மட்டுமே இதில் வெளிவர வேண்டும் என்று மெனக்கெடவில்லை. உங்கள் இரண்டாவது எதிர்வினைக்கு பதில் – எம்டிஎம் முன் வைக்கும் வாசிப்பு முற்றிலும் விடுதலையான வாசிப்பு. பிரதியை மட்டுமே பார்த்து படைப்பாளியைத் தனித்துக் காணும் விடுபட்ட மனநிலை. இன்று எனக்கு இது சாத்தியமில்லை. இப்படி ஒரு விடுதலையான மனப்பாங்குடன் வாசிக்கும் வாசகர் என்னை விட மேம்பட்ட வாசகரே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s