எஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -1


390853_255390284516554_549912888_n

எஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -1

தமது இணையதளத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் உலகச் சிறுகதைகளில் தமக்குப் பிடித்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறார். அது இன்னும் தொடராக வந்து கொண்டிருக்கிறது. முதல் ஐந்து கதைகளைப் படித்தேன்.

1.அகுடகாவாவின் ஜப்பானியச் சிறுகதை- பால்மணம் என்னும் கதை கவனம் பெறுவது குழந்தைப் பருவ நினைவுகள் எவ்வாறு மனதில் ஆழ இடம் பிடித்துக் கொள்கின்றன என்பதை மையப் படுத்துவதால். தாய்ப்பால் கிடைக்காமற் போனது ஒருவனை நடுவயதிலும் வருத்துகிறது. இந்தக் கதையில் நாம் குறிப்பால் உணர வேண்டியது ஒரு குழந்தை தனக்குப் பால் கிடைக்காமற் போனதை அம்மா மூலமாக அவர் குறிப்புகளின் வழியே தான் தெரிந்து கொள்கிறது.

2.லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஹூலியோ கொர்த்தஸாரின் சிறுகதை ‘பூங்காக்களின் தொடர்ச்சி – மிகவும் சின்னஞ்சிறு கதை இது. நவீனத்துவத்தின் மிக முக்கியமான ஒரு புனைவு இது. மிகவும் ஓய்வாகவும் வசதியாகவும் பச்சை நிற வெல்வெட் துணியால் உறையிடப்பட்ட சோபாவில் அமர்ந்து ஒருவன் ஒரு நாவலின் இறுதிப் பகுதியை வாசிப்பதாகக் கதை துவங்குகிறது. நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஒருவன் மலைப்பாதையில் ஒரு வீட்டின் தரைத் தளத்தைக் கடந்து மாடிக்கு விரைகிறான் ஒருவனைக் கொல்ல – அவன் கொல்ல விரும்புபவன் பச்சை நிற வெல்வெட் துணியாலான சோபாவில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். கதையின் முடிவில் ஒரு திடுக்கிடும் திருப்பமாக இது முதல் பார்வையில் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கதையில் கவனிக்கப் பட வேண்டியது இதற்கு இரு விதமான வாசகர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இந்தக் கதையை வாசிப்பவர் மற்றவர் இந்தக் கதையின் கதாபாத்திரமான ஒரு வாசகர். கதாபாத்திரம் அடையும் அனுபவத்தை வாசிப்பின் வழியாக வாசகன் உணரும் போது அனுபவம் என்பது அது நிகழும் தருணம் மற்றும் சூழலின் அடிப்படையில் நம்மால் அடையப் படுகிறது. நாவலின் கதை, கதாபாத்திரங்கள் காணும் அனுபவமும் வாசகன் தன்னை அந்தப் அனுபவத்தில் பொருத்திக் கொள்ளும் புள்ளியும் ஒன்றாகும் நிலையில் ஒரே அனுபவமாக அது காணப் படுகிறது. கதையை வாசித்த பிறகு அனுபவம் என்பது எந்தெந்தப் பரிமாணங்கள் உள்ளது என்னும் சிந்தனை நம்முள் தொடர்கிறது.

3. நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் லுயிகி பிரண்ட்லோவின் ‘யுத்தம்’ சிறுகதை- இது மிகவும் நேரடியான கதை. முதல் உலக யுத்தத்தின் பின்னணியில் எழுதப் பட்ட கதை. ரோம் நகரத்தை ஒட்டிய ஒரு இரயில் நிலையத்தில் ரயிலுக்குள் ஏறும் ஒரு தாய் தந்தை சக பயணிகளுடன் உரையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் மகனைக் கட்டாயமாக அரசாங்கம் யுத்தத்தில் ஈடுபடுத்திய வருத்தத்துடன் வந்திருக்கிறார்கள். சக பயணிகளுடன் அவர்கள் பேசும் போது யுத்தத்தில் மொத்தக் குடும்பத்தையுமே ஈடுபத்தியவர்கள் காணக் கிடைக்கிறார்கள். ஒருவர் தம் மகன் நாட்டுக்காக சாகத் தயார் என்று கடிதம் எழுதி அதுபோலவே யுத்தத்தில் மடிந்தான் என்னும் செய்தியை மன உறுதியுடன் தெரிவிக்க அந்தத் தாயின் மனதில் சற்றே தெளிவு பிறக்கிறது. அவள் மகனைப் பறி கொடுத்தவரிடம் “நிஜமாகவே அவன் இறந்து விட்டானா?” என்று கேட்கும் போது அது வரை சமநிலையில் நின்று பேசிக் கொண்டிருந்தவர் கதறிக் கதறி அழுகிறார். யுத்தம் குடும்பங்களை, சமூகத்தை, மனித இனத்தையே முடப் படுத்திப் பல தலைமுறைகளுக்கு வீழ்த்தி விடுகிறது வெல்வது ஒரு நாடு- ஆனால் இழப்பு மனித இனம் முழுவதற்கும்.

4.லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் போர்ஹெஸின் சிறுகதை- மணல் புத்தகம்- மணலுக்கு முடிவுமில்லை முதலுமில்லை. அதே போன்ற ஒரு புத்தகம் தான் மணல் புத்தகம். இந்தியாவுக்குப் பயணம் சென்று வந்த ஒரு ஐரோப்பியன் கதை சொல்லியிடம் இந்தியாவில் அவனுக்குக் கிடைத்த ஒரு கிறித்துவ மதநூலைக் கொடுக்கிறான். அதைப் பிரிக்கும் போதே பலப்பல பக்கங்கள் வளர்ந்து கொள்கின்றன. பக்கங்களை வரிசையாக ஒரு போதும் பார்க்க முடியாது. இப்படி ஒரு மாய யதார்த்தத்தை இந்தக் கதையில் வைத்திருக்க ஒரு காரணம் இருக்கலாம். மதம்வழி ஆன்மீகத்தைத் தேடுவோருக்கு இருக்கும் வேகம் அந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் ஆழ்ந்த கருத்துக்களை உள்வாங்கப் பொருந்தாது. வாசிப்பு விவாதம் தேடல் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்தால் மட்டுமே ஒரு புரிதல் பிறக்கும். அதுவரை அந்த நூல்கள் மாயமந்திரமாக வளர்ந்து கொண்டே போகும் நூல்களே. கதைசொல்லி அந்த மாய நூலை வைத்திருப்பதால் அதிகம் தூக்கமே இல்லாத நிலைக்குப் போன பின்பு அதை ஒரு நூலகத்தில் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு நிம்மதி அடைவதாகக் கதை முடிகிறது.

5. அண்டான் செகாவின் சிறுகதை- பந்தயம்- இந்தக் கதையை நான் மிகவும் உற்சாகமாகப் படித்தேன். மரண தண்டனையை விடத் தனிமைச் சிறையே கொடுமையானது என்று நான் பல பதிவுகளில் வாதிட்டிருக்கிறேன். ஒரு பணம் லேவாதேவி செய்யும் ஆளுக்கும் ஒரு வக்கீலுக்கும் இடையே இந்த விவாதம் ஒரு பந்தயமாகிறது. லேவாதேவி சிறைதண்டனையே கொடுமையானது என்கிறார். இளம் வக்கீலோ “இல்லை. மரண தண்டனை தான் கொடூரமானது. உயிர்வாழ்வது சிறையில் என்றாலும் எதிர்காலம் என்று ஒன்று உண்டு” என வாதிடுகிறார். இருபது லட்சம் பந்தயம். அதாவது லேவாதேவிக்கு மட்டுமே பணம் கட்டாயம். வக்கீல் 15 ஆண்டுக்குள் தப்பித்தால் ஒன்றுமே கிடைக்காது. பதினைந்து ஆண்டுகளும் வக்கீல் கேட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவருக்கு காவலாட்கள் போட்டு நிறைய செலவு ஆனது ஒரு பக்கம் லேவாதேவித் தொழிலில் அவர் நசிந்து விடுகிறார். 15 வருடம் முடியும் கடைசி நாளுக்கு முதல் நாள் எப்படியாவது அவனது கிறை வாழ்வை முடித்து பணத்தை மிச்சம் படுத்தும் எண்ணத்துடன் சீல் வைத்த கதவைத் திறக்கிறார். (அவன் புத்தகங்களைப் படித்தே காலத்தைத் தள்ளி விடுகிறான்). அப்போது அவன் உறக்கத்திலிருக்க ஒரு கடிதத்தை அவர் பார்க்கிறார் அதன் உள்ளடக்கம் இப்படி:

“நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்! தவறான வழியில் சென்றுவிட்டீர்கள். பொய்யை மெய்யென்றும் அவலட்சணத்தை அழகென்றும், கருதியிருக்கிறீர்கள். ஆப்பிள், ஆரஞ்சு மரங்கள் திடீரென பழங்களுக்குப் பதிலாக, தேரைகளையும் ஓணான்களையும் உதிர்க்க ஆரம்பித்தால் நீங்கள் அதிசயப்படுவீர்கள். ரோஜா மலரில் குதிரை வியர்வை வாடை அடித்தால் வியப்படைவீர்கள். எனவே, பூமிக்காக மோட்சத்தைப் பரிவர்த்தனை செய்து கொண்ட உங்களைக் கண்டு நான் அதிசயப்படுகிறேன். நான் உங்களைப் புரிந்துகொள்ளவே விரும்பவில்லை.

“நீங்கள் அனுபவிக்கும் சுகபோகங்களை நான் வெறுக்கிறேன். ஒரு காலத்தில் இருபது லட்சத்தை சுவர்க்கபோகம் என்று எண்ணியிருந்தேன். அதே இருபது லட்சத்தை இப்பொழுது வெறுக்கிறேன். அந்த இருபது லட்சத்தை அடையும் உரிமையிலிருந்தும் என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட காலத்திற்கு ஐந்து நிமிஷங்கள் முன்னதாகவே இந்த அறையிலிருந்து நான் வெளியேறி, அந்த ஒப்பந்தத்தை மீறுகின்றேன்.”

தனது கடுமையான உழைப்பால் வாசித்தவற்றுள் அரியவற்றை நம்முடம் பகிரும் ராமகிருஷ்ணனுக்கு நன்றி.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s