கேகேகேயும் நானும் (பேய்களும்) – 6
Poltergeist மறுபடியும் வருதாம் தெரியுமா?” என்றான் கேகேகே.
“ஸ்டீவ் ஸ்பெல்பர்க்கோட படம். பைலட்டுல பாத்தோம். ரெண்டு நாள் ராத்திரித் தூக்கமில்லாம தவிச்சியே. ஞாபகம் இருக்குப்பா..”
“ஈராஸுல ஓமன் படத்தை ரெண்டு மணி நேரம் காத்திருந்து பாத்தோமில்லே…”
ஊருக்கு முன்னால் நான் சென்னைக்கு வேலைக்கு வந்தபின் அவன் அவ்வப்போது வந்து பேயாக என்னைச் செலவு செய்ய வைத்த ஞாபகங்களும் பேய்களோடு சேர்ந்தே வருகின்றன. “பேயில்லேன்னா மனுஷ வாழ்க்கை போருப்பா” என்றேன்.
“அதுக்காக.. இந்த ஜெனெரேஷன்ல் பாதிக்கிப்பாதி பேய்ப்படமா வருது”
“பேயோட முக்கியமான குணம்தாம்ப்பா அதுக்குக் காரணம்”
‘என்ன அது?”
‘பேய்க்கு வடிவமே கிடையாதே. நினைச்சா யாருக்குள்ளேயாவது பூந்து வர முடியுமே”
“இது எப்படி ரொம்ப முக்கியமானது?”
‘ஏம்ப்பா… ஒரு மனுஷன் சொன்னா இன்னொரு மனுஷன் மதிக்கிறானா?”
இல்லை என்று தலை அசைத்தான்.
“ஒரு மனுஷனால உத்திரவாதமா நிச்சியமா இன்னோத்தனப் பழி வாங்க முடியுமா?”
“முடியாது’
‘ஆனாப் பேயி… அதால இது எல்லாமே முடியும்ப்பா…..”
“ஆனா… அது ஒரு கற்பனை தானேப்பா”
“அந்தக் காலத்திலே நீ ஏன் ரெண்டு நாள் தூங்காம அவஸ்தைப் பட்டே?”
“அப்போ சிறு வயசுப்பா…’
“நமக்கப்புறம் யாருக்குமே சிறு வயசே இருக்கக் கூடாதா? இல்லே கம்யூட்டர் இண்டெர்நெட் தெரிஞ்ச மாடர்ன் பேய் வரவே கூடாதா?”
“அப்பிடி இல்லேப்பா… பேய்மேலே என்ன இவ்வளவு க்ரேஸ்?”
“மனுஷன்னு தமிழ்ப்படத்துல காமிக்கிற காரெக்டரெல்லாம் அரச்ச மாவு.. கிரியேடிவா இல்லாம புதுப் படம்னாலே நைட் மேர்… அதுக்கு பேயே தேவலாம்… வித்தியாசமா எதாவது பண்ணும்..”
“அதுக்காக இவ்வளவு பேயா,,,?”
“ஏன்ப்பா வீட்டுல… அப்பன்.. டிராஃபிக்குல போலீஸ்… சிலசமயம் கர்ல் ப்ரெண்ட்… எல்லாருமே பசங்களப் பேயா பயமுறுத்தும் போது…. ப்ரொஃபெஷனலானப் பேயைப் பாக்கணும்னு தோணாதா?”
திடீரென கேகேகேயின் முகம் விகாரமாகி அவன் கடகடவென சிரித்தான். ஏய்… சத்யானந்தா…. நான் கேகேகே இல்லே… நெஜப்பேய்….”
படுக்கையை விட்டு எழுந்தேன்.
“என்ன பாத்ரூம் வருதா?”
“இல்லே… “சமாளித்தேன்.
“எங்களப்பத்தி நல்லவிதமாப் பேசியிருக்கே… அதனால உன்னை விட்டுடறேன்….”
“தாங்க்ஸ்…”
“வெயிட்…. உன் வெப் ஸைட்டில நீ எழுதறே…. இது எல்லாத்தையும்… ஓகே….?”
(image courtesy: shuterstock.com& freepik.com)