Monthly Archives: May 2015

அந்தக் காலத்தில்


திண்ணை இணைய இதழில் 17.5.2015 அன்று வெளியானது அந்தக் காலத்தில் சத்யானந்தன்  எல்லாம் நன்றாக இருந்த காலத்தில் கைக்குத்தல் அரிசிதான் கைத்தறித் துணிதான் கட்டை மாட்டு வண்டி காத்துக்குப் பனை ஓலை விசிறி தொலைபேசி திரைப்படம் தொலை நோக்கி விமானம் பேனா குண்டூசி எதுவுமில்லை விதவைக்கான இருளைக் கண்டு பெண்கள் உடன் கட்டை ஏறி எரிந்து … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

எஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -1


எஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -1 தமது இணையதளத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் உலகச் சிறுகதைகளில் தமக்குப் பிடித்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறார். அது இன்னும் தொடராக வந்து கொண்டிருக்கிறது. முதல் ஐந்து கதைகளைப் படித்தேன். 1.அகுடகாவாவின் ஜப்பானியச் சிறுகதை- பால்மணம் என்னும் கதை கவனம் பெறுவது குழந்தைப் பருவ நினைவுகள் எவ்வாறு மனதில் ஆழ இடம் பிடித்துக் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சதுரங்கத் தனிமை


(சொல்வனம் 13.5.2015 இதழில் வெளியானது) சதுரங்கத் தனிமை இசை ஞானம் காரணமில்லை மற்றொரு பறவைக்கான ஒலி சமிக்ஞையே ஒரு பறவையின் சீழ்கை இருப்பைத் தாண்டாத பரிமாற்றங்களில் பறவையின் உலகு இருப்பு பற்றிய முரண்கள் எதிரும் புதிருமான சதுரங்கம் உனக்கும் எனக்கும் தான் அதன் கட்டங்களுள் யாரும் தனியனே மின்மொழியாடலில் கவனமில்லாமல் வாசித்த பேசிய பரிமாற்றங்கள் கூரேற்றும் … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

மதங்கள் தேவையா? – குழந்தைகளின் பேட்டி காணொளி


மதங்கள் தேவையா? – குழந்தைகளின் பேட்டி காணொளி மதங்கள் என்றால் என்ன? அவை தேவையா? பிற மதத்தினருடன் நட்பு உண்டா? போன்ற கேள்விகளுக்கு நேர்மறையான கருத்துக்களைப் பல மொழி பேசும் இந்தியக் குழந்தைகள் கூறியிருக்கிறார்கள். இவர்கள் தலைமுறையில் மதவெறி இல்லாத இந்தியா உருவாகும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. பகிர்ந்து கொண்ட என் மகளுக்கு நன்றி. காணொளிக்கான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

இயல்பான முரண்


(திண்ணை 10.5.2015 இதழில் வெளியானது) இயல்பான முரண் நகரும் புள்ளிகளான தடங்களில் வெவ்வேறு திசையில் நீ நான் பல முனைகளைக் கடந்த போதும் எதிலும் நாம் சந்திக்கவே இல்லை இருந்தும் என் எழுத்துக்கள் சொற்கள் இடைப்பட்டு புள்ளி ஒன்று உன்னாலே முளைத்து விடுகிறது இதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் என் முரண்பாடுகள் சில புதிதாய் சில வேறு … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

ஜெயமோகனின் சிறுகதை “பெரியம்மாவின் சொற்கள்”


ஜெயமோகனின் சிறுகதை “பெரியம்மாவின் சொற்கள்” தமிழே எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெரிய அம்மாளுக்கு கதை சொல்லி நடைமுறைக்கென சில ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களைக் கற்றுத் தருகிறார். அவருக்கும் பெரியம்மாவுக்கு இடையே நடக்கும் உரையாடல்களே கதை. மொழி என்பது என்ன? அதன் வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதால் – அதாவது அகராதியில் உள்ள அர்த்தத்தைத் தெரிந்து … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

கேகேகேயும் நானும் -5


கேகேகேயும் நானும் -5 நான் வீட்டுக்குள் நுழையும் போதே கேகேகே எனக்காக் காத்திருந்தான். அவன் கையில் ஒரு “ப்ரேஸ்லெட்”. “என்னப்பா? புதாசாயிருக்கு?” சும்மா கேட்டு வைத்தேன். “அவங்க மச்சுனருக்கு அவரு வாங்கித் தராரு” என்றபடி என்மீது ஒரு பொருள் பொதிந்த பார்வையையும் வீசி விட்டுச் சென்றாள் என் மனைவி. “மச்சுனருன்னா ரெஜிஸ்டிரார் ஆஃபீஸ்ல சம்பளம் மட்டும் … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , | Leave a comment

காந்தியடிகள் பற்றிய அவதூறுகள்- பாவண்ணன் கட்டுரை


காந்தியடிகள் பற்றிய அவதூறுகள்- பாவண்ணன் கட்டுரை காந்தியடிகளை கடவுளாகவும், விவாதங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் கருதுவோர் அவரைப்பட்ட மேம்பட்ட புரிதலை புதிய தலைமுறைகள் அடைய வேண்டும் என்னும் கனவு இல்லாதோரே. காந்திஜி என்னும் ஆளுமை காந்தியம் என்னும் அவரது உண்மை+அஹிம்ஸை உள்ளடங்கிய ஆன்மீக நிலை இவை எவ்வளவு கடுமையாக விவாதிக்கப் படுகின்றதோ அவ்வளவு புரிதல் நம் எல்லோருக்குமே சாத்தியமாகும். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment

ஜெயமோகன் முயன்றிருக்கும் சிறுகதை “ஒரு கணத்துக்கு அப்பால்”


ஜெயமோகன் முயன்றிருக்கும் சிறுகதை “ஒரு கணத்துக்கு அப்பால்” எந்த ஒரு படைப்புமே ஒரு முயற்சியே. அந்த முயற்சியில் படைப்பாளி பெற்ற வெற்றி அல்லது சறுக்கல் பற்றி வேறு யாரும் பேசத் தேவையில்லை. அந்தப் பிரதியே பேசும். வருங்காலத்தில் வரும் வாசகர்களிடமும் தான். ஒரு நவீன சிறுகதையில் சாத்தியமானவை நிறைய. அந்த சாத்தியங்களை படைப்பாளி தனது புனைவில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

சமகாலத் தமிழ் நாவல்கள் – முருகேச பாண்டியன்


சமகாலத் தமிழ் நாவல்கள் – முருகேச பாண்டியன் உயிர்மை மே 2015 இதழில் “நம் காலத்து நாவல்களின் போக்குகள்’ என்னும் ந.முருகேச பாண்டியனின் கட்டுரை ஒரு காரணத்துக்காகவே மிகவும் முக்கியத்துவமானது. மூத்த எழுத்தாளர்கள் பலருக்கும் ஆர்வமில்லாத விஷயம் சமகால எழுத்தை விமர்சிப்பது. ஆனால் அவர்கள் தனது எழுத்தை வாசிக்காமல் தனக்கு அஞ்சல் அனுப்பியவர்களில் தொடங்கி மற்றும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment