கடவுள் கேட்ட பாவமன்னிப்பு- இரா.பூபாலனின் கவிதை


images

கடவுள் கேட்ட பாவமன்னிப்பு- இரா.பூபாலனின் கவிதை

கடவுளுக்கே பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆகி விடுமா? ஒரு நாள் அப்படி ஆகி விடுகிறது. முதல் நாள் சாலையோரம் கடவுளின் படத்தை வரைந்த ஏழை ஓவியன் மறுநாள் காலை மழைச்சத்தம் கேட்டு எழுந்து ஓவியத்தை நெருங்கும் போது அது கரைந்து அவன் பாதங்களை நனைக்கிறது. கடவுள் அவன் ஓவியத்தைக் கரைத்ததற்காகக் கேட்கும் பாவமன்னிப்பாக அது கவிஞருக்குத் தோன்றுகிறது.

எளிய கவிதை தான். இருந்தாலும் கடவுள் முதலில் தரையில் ஓவியமாக வந்தது பின் கரைந்தது இவைகள் கவிஞரை பாதிக்கின்றன. அது அநேகமாக எல்லோரையும் பாதிப்பதே. அதை ஒரு கவிதையாக உருவாகியது அவரது வெற்றி. (தீராநதி ஜூன் 2015)

தரையில் அதுவும் சாலைகளில் காணப்படும் ,கடவுள் உருவங்கள் பல படைப்புகளுக்குக் கருவாக அல்லது படிமமாக இருந்திருக்கின்றன. சிறு நகரங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே சாலை ஓவியங்கள் தென்படுகின்றன. கடவுள் ஒரு கலைஞனுக்காக அவனது ஏழ்மைக்காகக் கட்டாந்தரைக்கு வந்து தான் ஆக வேண்டும். அப்படி அவர் வருவது பார்க்கப் பொருத்தமில்லாததுதான். ஆனால் அவருடைய கருணைக்கு அடையாளமாக அவர் வந்து தானே தீர வேண்டும். கடவுள் இயற்கைச் சீற்றங்களால் பல சமயம் ஒரு பாவத்தைத் தானே செய்து விடுகிறார். ஏழைகள், சிறு வியாபாரிகள், தொழிலாளிகள், சிறு விவசாயிகள், விவசாயக் கூலிகள், நெசவாளர்கள் இவர்கள் தவிர இப்படி சாலையோரக் கலைஞர்களுக்கும் கூட வருமானம் இல்லாமல் தானே செய்து விடுகிறார். அவர் செய்தால் அது குற்றமில்லையா? அவர் மட்டும் மன்னிப்புக் கேட்காமற் போகலாமா? இப்படி பலவற்றைக் கவிதை உள்ளடக்கி இருக்கிறது. இந்தக் கேள்விகள் இரண்டு வருத்தங்களால் உருவானவை. ஒன்று ஒரு ஏழை ஒருவன் அதுவும் கலைஞன் அவன் உழைப்புப் பலன் தரும் வேளையில் வீணாய்ப் போனதே. மற்றது கடவுளின் நிகழ்வு என்று கருதப்படும் மழையால் இப்படி ஆனாதே. கரைந்த வண்ணங்களில் கடவுள் அவன் பாதத்தைத் தொட்டது போன்ற கற்பனை கவித்துவம் மிக்கது.

(image courtesy:www.wsj.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , . Bookmark the permalink.

2 Responses to கடவுள் கேட்ட பாவமன்னிப்பு- இரா.பூபாலனின் கவிதை

  1. இப்போது தான் வாசிக்கிறேன். எனது கவிதையை ரசித்துப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s