ஃபிஜித் தீவுகளின் மது காவா


kavaceremonywakaya

ஃபிஜித் தீவுகளின் மது காவா

ஃபிஜீயின் பண்பாட்டின் முக்கியமான அம்சம் காவா விருந்து. எந்த முக்கிய சந்திப்பு நிகழ்ச்சியிலும் காவா பரிமாறி அனைவரும் அருந்தும் சடங்கு உண்டு.

தீராநதி ஜூன் 2015 இதழில் ஆசி கந்தராஜாவின் கட்டுரையில் இந்த காவா மதுவில் தொடங்கி அவர்களின் வரலாற்றைத் தொடும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம்.

விவசாயிகள் மாநாடு ஒன்றில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசிக்கச் சென்ற அவருக்கு ஆளை அரை நினைவில் மட்டுமே வைத்திருக்கும் இந்த மதுவை ஏன் கருத்தரங்கம் போன்ற விழிப்பு அதிகம் தேவைப்படும் இடத்தில் தந்து உபசரிக்கிறார்கள் என்னும் கேள்வி மனதுள் எழுகிறது. இந்தியர்கள் மீது வெறுப்பு ஃபிஜியில் அதிகம் என்பது இந்தியவம்சாவளியினரான மகேந்திர சௌத்திரி தேர்தலில் அதிபராக வெற்றி பெற்றும் ராணுவத்தால் அவர் தூக்கி எறியப்பட்டதில் நிரூபணமான ஒன்று.

எனவே தம் கேள்விக்கான விடையை இந்திய வம்சாவளியில் தமிழ் இளைஞன் ஒருவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

பொலினேசியர்கள், மெலனேசியர்கள் என இரு இனக் குழுக்களிடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் சண்டை அடிக்கடி நடக்கும். அவர்கள் சமாதானப் பேச்சைத் தொடங்கினாலும் அது அடிதடியில் தான் முடியும். இதைத் தவிர்க்க பஞ்சாயத்து கூடும் போதே எல்லோரும்  காவா அருந்தி விட்டுத் தான் பேச்சைத் தொடங்குவார்கள். அதனால் கொத்தித்தெழுந்து தாக்கிக் கொள்வது நின்றது. காலப் போக்கில் இது ஒரு முக்கிய பண்பாட்டு வழக்கமாகி பெருமளவு மண்ணின் மைந்தர்கள் போதையில் தள்ளாடி வம்சவிருத்தியே அதிகம் ஆகாமற் போகுமளவு போதை மிகுந்தது. இவர்களது போதைப் பழக்கத்தைக் கண்டு வேலை செய்ய இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் கூலிகளைக் கொணர்ந்தனர். காலப் போக்கில் வட இந்தியர்கள் முதலாளிகளாக வேரூன்றினர்.

அவருக்கு விவரம் சொன்ன இளைஞனுக்கு தாய் மொழி தமிழே பேச வராது. அவனுக்கு இந்தியாவுக்குப் போக வேண்டும் அதற்கு ஆகும் செலவுக்குப் பணமே இல்லை. அவனுக்கு அந்தப் பணத்தைக்  கொடுக்கும் கட்டுரையாசிரியரின் மனித நேயம் நெகிழ வைக்கிறது. ஃபிஜி இந்தி என்ற ஒன்றில்தான் இந்தியர்கள் உரையாடுகிறார்கள். பரம்பரையாக அங்கே வாழ்ந்தாலும் தமக்கு உரிய இடம் கிடைக்காத வருத்தமும் தாய்மண்ணை அடிக்கடி மிதிக்கக் கூட வழியில்லாத வறுமையும் அந்த இளைஞனின் ததாவிடம் தென்படுகிறது.

புலம்பெயர்ந்த இந்தியர் -தமிழர் நிலை என்ன என்பது பற்றி என்னைப் போன்றவர்களுக்கு அடிப்படை அறிவு கூடக் கிடையாது என்பது கட்டுரை வாசித்து முடித்த பின் குற்ற உணர்வாக எழுந்தது. ஆழ்ந்த கட்டுரையைத் தந்த ஆசி கந்தராஜா பாராட்டுக்குரியவர்.

(image courtesy:figiguide.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s