மீன், காகம், எறும்பு உதவி செய்தன – சிறுவர் இலக்கியம்


download

மீன், காகம், எறும்பு உதவி செய்தன – சிறுவர் இலக்கியம்

ஒரு ராஜாவிடம் சிங்கக் குட்டி என்னும் பெயருடையவன் வேலை செய்து வந்தான். ராஜாவுக்கு மிருகங்கள் பேசும் பாஷை தெரியும். அவருக்கு உணவு கொண்டு போய்க் கொடுப்பது அவன் தான். அவரது உணவில் ஒரு பகுதி மட்டும் தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். அதை ஒரு பெட்டியில் இருக்கும். அதை எடுத்துச் சென்று ராஜாவிடம் இவன் கொடுப்பான். ஒரு நாள்  அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதற்குள் வெள்ளைப்பாம்பின் துண்டுகள் உணவாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒரு துண்டை சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் அவனுக்குப் பறவை மிருகங்களின் பாஷை புரிய ஆரம்பித்தது. இண்டஹ் சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து புறப்பட்டான். குதிரையில் அவன் கிளம்பிச் செல்லும் வழியில் அவன் ஒரு இடத்தில் சாரிசாரியாகச் செல்லும் எறும்புகளைப் பார்த்தான் அவற்றின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். என்றேனும் அவனுக்கு உதவுவேன் என்று வாக்களித்தது. அடுத்து அவன் செல்லும் வழியில் மூன்று மீன்கள் அழும் குரல் ஒரு குளத்துக்கு அருகில் இருந்து கேட்டது. ஒரு புதரில் அவை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன.

மேலே அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. அம்மா அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகள் இவனிடம் உணவு வேண்டும் என்று கேட்கவே அவன் ஒரு முயலை வேட்டையாடி அவைகளுக்குத் தின்னக் கொடுத்தான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின.

அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது. அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம். அவள் வைக்கும் போட்டிகளில் வென்றால் திருமணம் இல்லையேல் சிறையில் தள்ளிவிடுவார்கள்.

முதலில் அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். அதற்குள் இருக்கும் மோதிரத்தை எடுக்க வேண்டும். அவன் மலைத்து நின்றான். “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன். இளவரசிக்கு ஒரே வியப்பு. அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டது. விடிவதற்குள் அவன் ஒரு மணி விடாமல் எடுக்க வேண்டும். இது நடக்கவே நடக்காது காலையில் சிறை தான் என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் அவற்றை எடுத்து மூட்டைக்குள் போட்டுவிட்டன. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான். இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும். அவனைக் காட்டில் விட்டார்கள். இருட்டும் வரை தேடினால் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கியவன் விழிக்கும் போது அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான்.

எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.

அரபுக் கதை. குழந்தைகளுக்கான கதை. இதை ஆல்பர்ட் தமிழாக்கம் செய்திருக்கிறார். வெளிவந்துள்ள ‘திசை எட்டும்” ஏப்ரல்-ஜூன் 2015 இதழ் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழாக வந்திருக்கிறது.

இந்தக் கதை எனக்குப் பிடித்தற்குக் காரணம் இதில் விலங்குகளிடம் அன்பு காட்டும் அறிவுரை பொதிந்திருப்பது தான். மாயாஜாலமும் இருக்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்தே உலகம் இயங்கும் என்னும் வழிகாட்டுதலும் கதைக்குள் இருக்கிறது.

குழந்தைகள் இலக்கியம் எந்த வயதினருக்கும் வாசிக்க இனிமையானவையே.

(image courtesy:freepik.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுவர் இலக்கியம் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s