எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “அவர்கள் பாடுகிறார்கள்”


220px-M_mukundan 220px-M_mukundan

எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “அவர்கள் பாடுகிறார்கள்”

பின்நவீனத்துவக் கதை என்பது என்ன? அது நவீனத்துவத்தின், யதார்த்தத்தின் வரம்புகளுக்குள் அடங்காத ஒரு கதையை அல்லது ஒரு சித்தரிப்பை நம் முன் வைப்பது. கனவு கலையும் போது கனவின் அனுபவம் நனவில் கிடைக்கும் அனுபவ உணர்தலுக்குக் குறைவானதல்ல என நாம் உணர்கிறோம். அந்த ஒரு கணத்தில் நமக்கு கனவு, நனவு, முக்காலம் எல்லாமே முயங்கி நம் விழிப்பு ஒரு புதிய நிலையில் நம்மால் காணப்படுகிறது இல்லையா?

மேலே கூறியது எல்லோருக்கும் பொதுவான ஒரு உதாரணம். மற்றொரு உதாரணம் உண்டு. மூளை வேலை அதுவும் கடுமையான வேலைப்பளு. முடித்தே ஆக வேண்டும் ஆனால் முடிப்பது நிச்சயமான ஒன்றல்ல. கண்டிப்பாக எளிதான ஒன்றல்ல. அப்போது நடக்கும் போராட்டம் நாட்கணக்கில் சில சமயம் வாரக் கணக்கில். அந்தக் கால கட்டத்தில் திருப்பு முனைக்கு முந்தைய ஒரு நிலையில், (அதாவது திருப்பு முனை முன்னோக்கியா பின்னோக்கியா என்று தெரியாது) ஒவ்வொரு நாளில் எல்லாமே மறந்து, வேலையில் இருப்பது எந்த ஊரில் எதற்காக இருக்கிறோம் என்பது எல்லாமே கேள்விக்குறியாகி மனம் வெறுமையாய் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுத் திக்கிடும். அப்போது சுயத்தை இழந்துவிட்டோமோ என்னும் ஐயமே எழும். கடுமையான வேலைப்பளுவை சுமந்த யாருக்கும் இது புரியும்.

இப்படி ஒரு சங்கடத்தில் ஆழுந்த ஒரு இளைஞனின் கதையே “அவர்கள் பாடுகிறார்கள்”. டெல்லியில் ஒரு மொழிபெயர்ப்பாளனாகப் பணிபுரியும் இளைஞன் விழித்ததும் அலுவலகம் போகிறான் ஆனால் வேலை செய்ய மனமின்றித் தன் தோழியை தொலைபேசியில் அழைத்து அவளைச் சந்தித்து அளவளாவுகிறான். காலையில் தான் கண்ட கனவை விளக்குகிறான். கல்லறைகள் நிறைந்த ஒரு இடத்தில் அவர்கள் அளவளாவுகிறார்கள். பின்னர் கல்லறைகள் மீது படுத்துக் கொண்டே அவர்கள் பாடுகிறார்கள் “நாங்கள் இறந்து விட்டோம்”.

இந்தக் கதையில் நிகழ்ச்சிகளின் கால வரிசை மாறிக் கொண்டே வரும். முன்னே நடந்த ஒன்று பின்னே மறுபடி வரும். முதலில் பேசிய வசனமும் மறுபடி வரும்.

மன அழுத்தம், கனவாகிப் போன அரவணைப்பு இவை கனவில் எப்படி வெளிப்படும்? அது கனவானாலும் நனவானாலும் ஒருவன் வாழ்க்கையின் கசப்பை விழுங்கித்தான் தீர வேண்டும். அதன் கட்டாயங்களைச் சுமந்தே மேற்செல்ல வேண்டும்.

பின்நவீனத்துவக்கதை ஒன்று எழுதப் போகிறேன் என்று ஒரு எழுத்தாளர் முடிவு செய்து பிரகடனப்படுத்தி விட்டு ஒரு கதையை எழுத முடியாது. ஒரு கதையில் மாய யதார்த்தம் வருவது அல்லது கதையின் பிரதி, வாசகன், எழுத்தாளன், கதாபாத்திரங்கள் எல்லோரும் இடம் மாறும் பின்நவீனத்துவ வடிவம் வருவது இவை ஒரு கதை சுமக்கும் உட்பொருள், கதையின் களன் இவற்றை ஒட்டியே ஆகும்.

முகுந்தனின் கதை தனது பணிக்காலத்தின் உச்சத்தில் உள்ள ஒரு இளைஞனின் வறட்சியான வாழ்க்கைச் சூழலை, மன அழுத்தத்தை மையப்படுத்திய பின்நவீனத்துக் கதை. இனிய உதயம் ஜூன் 2015 இதழில் சுராவின் மொழிபெயர்ப்பில் படிக்கக் கிடைத்தது.

(image courtesy:wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை, விமர்சனம் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “அவர்கள் பாடுகிறார்கள்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s