மனவளர்ச்சியற்ற குழந்தைகளின் எதிர்காலம்- எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை


arunshourie

மனவளர்ச்சியற்ற குழந்தைகளின் எதிர்காலம்- எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை

மனவளர்ச்சி துரதிர்ஷ்ட வசமாக இயல்பாக அமையாமற் போகும் குழந்தைகளின் பெற்றோரை இடைவிடாது உறுத்தி மனம் வெதும்பச் செய்யும் கேள்விகள் “நம் காலத்துக்குப் பின் நம் குழந்தையின் கதி என்ன? உண்மையான அன்புடன் அக்கறையுடன் யார் பார்த்துக் கொள்வார்கள்? கொடுமைக்கும் இழிவுக்கும் குழந்தை ஆளாகுமோ?” இந்தக் கேள்விகளுக்கு விடையே கிடையாது. ஒரு குடும்ப நண்பரின் வீட்டில் அவர்கள் இந்தக் கவலையைப் பகிர்ந்த போது மனம் மிகவும் வருத்தப் பட்டேன். ஆனால் பதில் எதுவும் கூற இயலவில்லை.

வலதுசாரி சிந்தனையாளர், மற்றும் எழுத்தாளர் முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி அவர்களின் குழந்தை ஆதித்யா இத்தகைய பாதிப்புடன் போராடி வாழ்பவர். அருண் ஷோரி எவ்வளவு அக்கறையுடன் அந்தக் குழந்தையைப் பராமரிக்கிறார் என்பது பற்றி எனக்கு அவரது உதவியாளர் மூலம் தெரிய வந்தது. அவர் அமைச்சராக இருந்த போதும் அவசியமேற்பட்டால் அலுவலகத்துக்கு அபூர்வமாக தமது மகனை அழைத்து வருவார். எந்தப் பணியாளர் அல்லது உதவியாளரக்கும் அந்தக் குழந்தையை கவனிக்கும் வேலையைக் கொடுக்க மாட்டார்.

18.6.2015 தமிழ் ஹிந்து இதழில் அருண் ஷோரியின் “Does he know a mother’s heart? -How suffering refutes religions” என்னும் நூலை மையப்படுத்தி எஸ்.ராமகிருஷ்ணன் “வீடில்லாப் புத்தகங்கள்” என்னும் பத்தியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலையை நம்முடன் பகிர்கிறார்.

உறுதியாக நம் குழந்தைகளை இவர் பேணுவார் என்று யாரிடம் பெற்றோர் விட இயலும்? அன்னை தெரஸா அளவு கருணை உள்ளமும் சேவையே லட்சியமுமான அர்ப்பணிப்பு உள்ள ஒரு உள்ளத்தாலேயே அந்த சேவை சாத்தியம்.

அது மிகவும் அதிக பட்சமான எதிர்பார்ப்பு இல்லையா? மாற்றுத் திறனாளியான குழந்தைகளின் பெற்றோருள் நேரம் தரும் வாய்ப்பு உள்ளவரகள் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி அவர்களது நேரடி மேற்பார்வையில் ஒரு  இல்லம் நடத்தப் பட்டால் கண்டிப்பாக அந்த இல்லத்தில் குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பான பராமரிப்பு இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒரு தன்னார்வ அமைப்பாகவும், அங்கத்தினர் குடும்பங்களின் சொந்த அமைப்பாக இரண்டுமாகவுமே இருக்கும் ஒரு அமைப்பு தேவை. இத்தகைய அமைப்புகள் ஏற்கனவே இருப்பது தெரிந்தவர்களும் பகிரலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் இரக்கம் காட்டுவது அகம்பாவமானது. அவர்களது நல வாழ்க்கையை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது நமது கடமை என்னும் புரிதல் தெளிவானது.

பிறப்பால் மாற்றுத் திறனாளியாய் இருப்பவர்களுக்கு நட்புக்கரம் நீட்டும் மனமாற்றம் நிகழும் போதே அது சாத்தியம்.
( image courtesy: http://thebookloversreview.blogspot.in/2011/10/review-does-he-know-mothers-heart.html)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s