கேகேகேயும் நானும் (யோகாவும்)- 8
கேகேகே “ஏம்ப்பா யோகா எதுவும் சேரலியா ?” என்று தொடங்கினான்.
‘வாப்பா ஒண்ணாவே சேரலாம்” என்றேன்.
“அது முடியாதுப்பா… ”
“ஏன்ப்பா?”
“நீ சர்வீஸ்லே இருக்கே… நான் ரிடையர்ட்..”
‘யோகாவுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்?”
“இருக்குப்பா… அடையாறுலே ஒரு யோகா மாஸ்டர் கிட்டேப்போயிப் பேசிப்பார்த்தேன். ஒரு கிளாஸுக்கு 750 கேக்கறாரு”
எனக்கு மனதுக்குள் மத்தாப்பு இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. “ஏம்ப்பா… யோகா அந்த அளவு மதிப்புள்ளதுப்பா…”
“இருக்கலாம்ப்பா… எங்கிட்டே ஓட்டமில்லப்பா… சரி … நீ எங்கப்பா சேரலாமின்னு இருக்கே….?”
” நான் எங்கியும் சேரலப்பா…. திடீர்ன்னு திருந்தறதெல்லாம் ரொம்ப தூரத்துக்கு வராதுப்பா….’
“உலகமே யோகா.. யோகான்னு அலறுதுப்பா…”
“நம்ப சின்னப்பிள்ளையா இருந்தப்போ யோகா இல்லியா?”
“ஆனா வாட்ஸ் அப் இல்லையேப்பா….” என்றான்.
“வாட்ஸ் அப் எதுக்குப்பா யோகாவுக்கு,,,,,” என்றேன்
“அடப்பாவி… இப்போ வாட்ஸ் அப்புலே யோகா விடீயோ தான் வைரல்”
“நான் சொல்லவந்தது அது இல்லப்பா” என்று இழுத்துத் தொடங்கினேன்.
“சரி சொல்லு… நம்ப ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையா இருந்தப்போ என்ன இருந்திச்சு? இப்போ என்னா ஆயிப்போச்சு?”
“நாம் கில்லி தாண்டு, கபடி, வெறி பந்து, எம்ஜியார் ஃபைட் , ஜெய்சங்கர் ஃபைட் அப்பிடின்னு தமிழ் பாரம்பரிய விளையாட்டெல்லாம் விளையாடினோம்”
“ஆமா…. இப்போ பசங்க அதெல்லாம் விளையாடக்கூடாதுன்னு யாரு தடுக்கறாங்க?”
“வீடியோ கேம்ஸ், மொபைல் ஹாண்ட் செட் கேம்ஸ், டிவியில டபிள்யூ டபிள்யூ எஃப் இப்பிடி இதுக்கே நேரம் சரியாப் போச்சி… சின்னப்பசங்க ஆடாம அசையாம இதில போழுது போக்கி முதுகு வலியில அவஸ்தைப் படறாங்க….”
“அப்ப்போ அவுங்குளுக்குத் தான் யோகாவா…?”
“ஐடி ஜாப் பாக்குற பெரிய பசங்களைத் தூங்க சாப்பிட எதுக்குமே அந்த வேலை விடறதில்லே. அதுனால அவுங்க முப்பது வயசுக்குள்ளேயே அம்பது வயசுக்கு முதுகும் கழுத்தும் தேஞ்சு போயிடறாங்க…”
“அதுனால உலகத்துலே இருக்குற எல்லா பெரிய கம்பெனிக்கும் கவலை வந்துடிச்சு… நல்ல அனுபவம் வேலையிலே வந்து பீக்லே இருக்கிற ஐடி எம்ப்ளாயி எல்லாம் பெட் ரிட்டன் ஆயிடுவானின்னு….”
“அதுக்குத் தான் இப்புடி உலகமே யோகான்னு ஆர்வமாக வைக்கிறாங்களா,,,”
“என் சிற்றறிவுக்கு எட்டியது இதுதான்…” என்று நான் முடிப்பதற்குள் “நல்லதே தோணாதா உங்களுக்கு… நான் யோகால சேந்ததிலே இருந்தே ஒரே நக்கல் தான்..” என்று அறைக்குள் வர ஆதரவுக்குக் கேகேகேயைத் தேடினால் அவன் தப்பித்துப் போயிருந்தான்.
(image courtesy:shutterstock.com)
Reblogged this on vadivelkannu (வடிவேல்கண்ணு) and commented:
“அப்ப்போ அவுங்குளுக்குத் தான் யோகாவா…?”