முள்ளம் பன்றியின் பகற்கனவு நனவானது


download

முள்ளம் பன்றியின் பகற்கனவு நனவானது

முள்ளம்பன்றி பார்ப்பதற்கு அச்சமும் அருவருப்புமே சிறுவர்களுக்குத் தரும். ஆனால் அதனிடம் ஒரு கதை இருக்கிறது.

ஒரு முள்ளம்பன்றி ஒரு நாள் பகற்கனவு (தூங்கியபடி) காண்கிறது. அதில் அது ஒரு அழகிய பெண் முள்ளம்பன்றியுடன் நிலவொளியில் அல்லியின் தளிர் இதழ்களை உண்டபடி நடந்து செல்வதாகக் கனவு காண்கிறது.

அந்தக் கனவு முடிவதற்குள் மரத்தின் மேலிருந்த சிட்டுக்குருவி “நீ கேட்டாயே … அல்லிக்குளம் எங்கே இருக்கிறது என்று… அது சூரியன் மறையும் திசையில் கொஞ்சம் தொலைவு போனால் ஒரு பெரிய அல்லிக் குளம் இருக்கிறது…” என்று முள்ளம் பன்றியை எழுப்பி விட்டது. கனவு கலைந்தாலும் முள்ளம் பன்றிக்கு நாக்குக்கு ருசியான அல்லி இதழ்களைத் தின்னும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

முள்ளன் எழுந்தான். சூரியன் மறையும் திசையில் சென்றான். அணிலும் முயலும் அவனைப் பற்றிக் கேலிப் பேச்சு பேசுவது அவன் காதில் சரியாகக் கேட்கவில்லை. அவனுக்குக் கேட்கும் திறனும் ஓடும் திறனும் குறைவு என்று வெகுகாலமாகச் செய்யும் அதே கேலியைத்தானே செய்யப்போகிறார்கள். எதிரியைக் கண்டு ஓடும் தேவை எனக்கு உண்டா? பெரிய மிருகங்களையும் என் முட்கள் சமாளிக்கும். அந்தத் திறனில் இவர்கள் என் முன்னாடி நிற்க முடியுமா?

முள்ளன் எழுந்தான். சூரியன் மறையும் திசையில் சென்றான். அணிலும் முயலும் அவனைப் பற்றிக் கேலிப் பேச்சு பேசுவது அவன் காதில் சரியாகக் கேட்கவில்லை. அவனுக்குக் கேட்கும் திறனும் ஓடும் திறனும் குறைவு என்று வெகுகாலமாகச் செய்யும் அதே கேலியைத்தானே செய்யப்போகிறார்கள். எதிரியைக் கண்டு ஓடும் தேவை எனக்கு உண்டா? பெரிய மிருகங்களையும் என் முட்கள் சமாளிக்கும். அந்தத் திறனில் இவர்கள் என் முன்னாடி நிற்க முடியுமா?

ஒரு ஆந்தை மரத்தில் இருந்து பாய்ந்து வந்து ஒரு காட்டு எலியைக் கொத்திப்போய் தன் மனைவியுடன் பங்கிட்ட காட்சியை சற்று நின்று பார்த்த முள்ளனுக்குத் தனக்கு ஒரு துணையில்லாதது பெரிய ஏக்கமாக இருந்தது. அப்போது ஒரு பெருச்சாளி கிறீச்சிட்டுக் கத்தும் சத்தம் கேட்டது.

“என்னப்பா இவ்வளவு கோபமாக இருக்கிறாய் என வினவினான் முள்ளன்..

“என் பொந்துக்குள் யாரோ இருந்திருக்கிறார்கள். நான் பொந்தில் நுழைவதற்குள் என்னை முள்ளால் குத்தி விட்டார்கள்”

உண்மைதான். அந்தப் பெருச்சாளியின் முகமெங்கும் முட்கள். அவற்றைத் தன் கூர்மையான பற்களால் எடுக்கும் போதுதான் கவனித்தான் பெருச்சாளி குறிப்பிடும் விலங்கு ஒரு முள்ளம் பன்றியே. அதன் முட்களே அவன் முகமெங்கும் இருக்கின்றன. அப்போது அழகான பெண் முள்ளம்பன்றி ஒன்று அந்தப் பொந்திலிருந்து வெளிவந்தது. உடனே பெருச்சாளி “நீ என் பொந்துக்கு வந்ததே தவறு. என் முகம் முழுக்க முட்களால் குத்தி விட்டாயே” என்று சத்தம் போட்டான்.

உடனே முள்ளன் அந்தப் பெண் முள்ளிக்கு ஆதரவாக “நாங்கள் ஓய்வுக்காகக் கண்ணில் படும் முதல் பொந்தில் இறங்கித் தூங்குவது எங்கள் இனத்தின் பழக்கம். இதற்கு ஏன் இத்தனை சத்தம் போடுகிறாய்?” என்றது. பெண் முள்ளி மிகவும் நன்றியுடன் முள்ளனைப் பார்த்தது. “வா போகலாம்” என்பதாக முள்ளன் சைகை செய்தான்.

“முகமெல்லாம் முள் குத்துவாங்கும் வலி உங்களுக்குப் புரியாது” என்று பெருச்சாளி பொந்துக்குள் புகுந்து கொண்டது. அழகிய முள்ளியுடன் முள்ளன் நடந்து சென்று அல்லிக் குளத்தில் இருந்த இதழ்களை எடுத்து அவளுக்குக் கொடுத்தான். அவனுக்கு ஏற்கனவே வயிறு நிறைந்திருந்ததால் அவன் அவள் சாப்பிடும் அழகை ரசித்தான். தன் கனவு உடனே நிறைவேறியதில் அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

சுமங்களா மலையாளத்தில் எழுதிய கதையை யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ளார். “திசை எட்டும்”- ஏப்ரல்-ஜூன் 2015 -இதழில் வெளிவந்த இந்தக் கதையில் பல்வேறு விலங்குகளின் இயல்புகள் வெளிப்படுகின்றன. நான் சுருக்கமாகத் தந்திருக்கும் இந்தக் கதை சற்றே நீண்டது. பல விலங்குகளின் உரையாடல்கள் எவ்வளவு அழகாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என வியக்கிறோம்.

குழந்தைகளுக்காகக் கற்பனை செய்து எழுதுவது என்பது இருப்பதிலேயே மிகவும் கடினமானது. கற்பனைத் திறன் பல்வேறு பரிமாணத்துடன் உயிர்ப்புடன் இருக்கும் ஒருவருக்கே இது சாத்தியம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுவர் இலக்கியம் and tagged . Bookmark the permalink.

1 Response to முள்ளம் பன்றியின் பகற்கனவு நனவானது

  1. kavadivel61 says:

    Reblogged this on vadivelkannu (வடிவேல்கண்ணு) and commented:
    குழந்தைகளுக்காகக் கற்பனை செய்து எழுதுவது என்பது இருப்பதிலேயே மிகவும் கடினமானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s