‘ஏம்ப்பா…. தோனி மூணாவது ஒன் டேயில பங்களாதேஷ் பௌலிங்கை நல்லா ஃபேஸ் பண்ணி எல்லாரோட வாயையும் அடைச்சிட்டாரு பாத்தியா?”
“சரி கேகேகே… இந்த மேட்ச்லேயும் தோனி ஸ்கோர் பண்ணல்லே … இந்தியா தோத்துப்போயிருந்தா?”
“எல்லாரும் பின்னி எடுத்திருப்பாங்க இல்லே..?”
“தோனி என்னப்பா ரேஸ் குதிரையா… அவருமேலே பெட் கட்டியிருக்கோமா?”
“அப்பிடி இல்லே சத்யா… தோனி மேலே நாம வெச்சிருக்கிற நம்பிக்கையும் மதிப்பும் அன்பும் தான் காரணம்…”
“நேசிக்கிறதுங்கறதே நாம நேசிக்கிறவங்களுக்கு நெருக்கடி கொடுக்கறத்துக்குத்தான்…இல்லையா கேகேகே….”
‘தோனி தோக்கவே மாட்டாறு.. கூல்னெஸ்ஸை லூஸ் பண்ணமாட்டாறுங்கறதுதான் அவரோட இமேஜ்….’
“இமேஜ் தொல்லைதான் இல்லையா…?”
“ஏம்ப்பா நல்ல இமேஜை மெயிண்டென்ய்ன் பண்ணத்தானே வேணும்?”
“நாம் கொடுத்த இமேஜால அவருக்கு அடிப்படை உரிமையெல்லாம் பறி போயிடும்…”
‘அவருக்கு என்னப்பா சத்யா உரிமை பறி போவும்?”
” ஏம்ப்பா…கேகேகே… தோத்துப்போற உரிமை… எரிச்சலாவுற உரிமையெல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாதா?”
“ஏய் சத்யா… நீ என்னப்பா இந்தியன் … இண்டியன் கேப்டனுக்குத் தோத்துப்போவுற உரிமை உண்டுங்கறியே?”
“தோக்குற உரிமை இல்லேங்கறியா?”
“எப்படிப்பா உண்டு…. இந்தியா எப்பவுமே ஜெயிக்கணும்ப்பா….”
“கிரிக்கெட்ல மட்டும் இல்லியா…?”
“அப்புடி இல்லப்பா… கிரிக்கெட்டிலேயாவதுன்னு சொல்லு… நாம ஜெயிக்கிற வாய்ப்பு அதிகம் கிரிக்கெட்டிலதான்ப்பா…’
“நமக்கே அது ஒண்ணுதான்னா… பங்களாதேஷுக்கு வேறே நெறய இருக்காப்பா…?”
“நீ என்ன சொல்லவர்றே சத்யா… தெளிவாச்சொல்லு….”
“பங்களாதேஷ் கேப்டனுக்கு அவுங்க ஊருல தோத்துப்போற உரிமை கொடுத்திருக்காங்களா?”
“ஏம்ப்பா.. தோனி எங்கே அந்த சின்ன டீம் எங்கே?”
“இப்புடிச்சொல்லிச் சொல்லியே உசுப்பேத்துங்க….”
“தோனி வர்ல்ட் கப்பு ஜெயிச்சவரு…”
“அப்புடீன்னா அப்புறம் தோக்கவே கூடாதா?”
“நோ லுக்கிங் பேக்..ப்பா”
“சரி எல்லா கேம்லேயும் வெற்றி தோல்வி ரெண்டு உண்டு… கிரிக்கெட்ல டிரான்னு மூணாவதா ஒண்ணு உண்டு…. அந்த மூணுல ஒண்ணு இந்தியாவுக்கு ஒரு டர்ன்ல வரத்தான்ப்பா செய்யும்…..”
“நீ பேசறமாதிரி செஞ்சா…. நம்ம ப்ளேயர்ஸ் மோட்டிவேட் ஆவமாட்டாங்க… தோக்கற ஆப்ஷனை சூஸ் பண்ணிடுவாங்க…..’
“கரெக்டா தப்பாச் சொல்றே. இப்புடி ஓவரா ப்ரெஷர் போட்டுப் போட்டு அவங்களோட நார்மல் கேம் விளையாடாமத் தோக்கறாங்க….”
“சத்யா… உனக்கு நான் சொல்லுறது புரியலே…”
“எனக்கு நீ சொல்ற ஒண்ணே ஒண்ணு புரியலே… கேகேகே… ஆனா உங்க எல்லோருக்குமே விளையாட்டுங்கறது வெற்றி தோல்விங்கற ரெண்டு இருக்கறதே புரியலே… ஸ்போர்டிவ்வா இருக்குறதுன்னு ஒண்ணு இருக்குனே தெரியலே…”
“உன்னோட விதண்டா வாதம் பண்ண நான் தயாரில்லே… ” அவன் தப்பித்தான்.
“நீங்க தோனியப்பத்தித்தானே பேசிக்கிட்டிருந்தீங்க…. பாவம் அவரு…” என்று உள்ளே நுழைந்தாள் என் மனைவி.
‘ஏம்மா…?”
“அவருக்கு ஃபைன்லாம் போட்டாங்களாமே….”
“அதுனால என்ன?”
“இப்பத்தான் ரெண்டாவது குழந்தை பொறந்திருக்கு… செலவுக்கு என்ன பண்ணுவாரு..?”
(image courtesy:google.plus.com)