Monthly Archives: June 2015

குழந்தை எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் சைதன்யா


குழந்தை எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் சைதன்யா ஆறாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவி எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர்களுக்கான கதை நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். “ஒரு தங்க நாணயம்’ என்னும் ஆப்கானிஸ்தானக் கதையை தமிழில் “திசை எட்டும்” -ஏப்ரல்-ஜூன் 2015 இதழில் சைதன்யா தந்திருக்கிறார். சரளமான பிழையற்ற தமிழ். 2013க்கான திசை எட்டும் விருதைப் பெற்றிருக்கிறார். தங்க நாணயம் கதை … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , | Leave a comment

முள்ளம் பன்றியின் பகற்கனவு நனவானது


முள்ளம் பன்றியின் பகற்கனவு நனவானது முள்ளம்பன்றி பார்ப்பதற்கு அச்சமும் அருவருப்புமே சிறுவர்களுக்குத் தரும். ஆனால் அதனிடம் ஒரு கதை இருக்கிறது. ஒரு முள்ளம்பன்றி ஒரு நாள் பகற்கனவு (தூங்கியபடி) காண்கிறது. அதில் அது ஒரு அழகிய பெண் முள்ளம்பன்றியுடன் நிலவொளியில் அல்லியின் தளிர் இதழ்களை உண்டபடி நடந்து செல்வதாகக் கனவு காண்கிறது. அந்தக் கனவு முடிவதற்குள் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged | 1 Comment

நந்தவனத்தில் ஓர் ஆண்டி- பாடலை இயற்றிய கடுவெளி சித்தர்


நந்தவனத்தில் ஓர் ஆண்டி- பாடலை இயற்றிய கடுவெளி சித்தர் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக் கூத்தாடித் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”/ இதை இயற்றிய கடுவெளிச்சித்தரின் வாழ்க்கையில் இதுவே நடந்தது என்று பகிர்கிறார் சென்னிமலை தண்டபாணி. ஈரோடு மாவட்டத்தில் வருவது சென்னிமலை. இனிய உதயம் ஜூன் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 1 Comment

பிரம்மலிபி- நூல் மதிப்புரை


பிரம்மலிபி- நூல் மதிப்புரை சத்யானந்தன் எஸ்ஸார்ஸியின் பிரம்மலிபி உள்ளிட்ட சிறுகதைகளில் பலவற்றை நாம் திண்ணையில் வாசித்திருக்கிறோம். படிக்காதவற்றையும் சேர்த்து ஒரு தொகுதியாக வாசிக்கும் அனுபவம் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள கதைகள் மனித உறவுகளில் உள்ள முரண்கள் புதிர்கள் இவை கலைமிகுந்த ஓவியங்களாய் நம்முன் விரிகின்றன. சுழல்-  இந்தக் கதை நடுத்தர … Continue reading

Posted in சிறுகதை, திண்ணை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

செய்தி வாசிப்பு


செய்தி வாசிப்பு சத்யானந்தன் சத்யானந்தன் யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப்  புகுந்து அநியாயம் செய்தன இயற்கை மலையில் வெறி வந்து நிலத்தைச் சரித்து பேரிடர் ஏற்படுத்தியது கூலித் தொழிலாளிகள் கூட்டணி அமைத்து சதிகாரர்களுடன் உலக அளவில் ஒப்பந்தம் போட்டு மரங்களைக் கடத்துகிறார்கள் விவசாயி சாகுபடி செய்யாமல் தற்கொலை செய்து விட்டார் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

ஆழ்வார் பாசுரங்கள் ஆணாதிக்கமானவையா?


ஆழ்வார் பாசுரங்கள் ஆணாதிக்கமானவையா? இது ஒரு கேள்வியாகவே எனக்குள் இருக்கிறது. ஆனால் கல்பனா சேக்கிழார் ‘இனிய உதயம் ‘ ஜூன் 2015ல் வந்துள்ள ஆய்வுக்கட்டுரையில் பல மேற்கோள்களைக் காட்டுகிறார். பெண் ஆன்மீகப் பாதையில் ஒரு தடையாகவே கருதப்படுகிறாள் என்பதே அவரது வாதம் . அவரது மேற்கோள்கள்: தொண்டரடிப்பொடியாழ்வார்- ‘பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

எஸ்.கெ.பொற்றெகாட் எழுதிய மலையாள சிறுகதை ‘சேது’


தனிமை என்பது தற்காலிகமானது. ஆனால் தனித்து வாழ்வது என்பது மிகவும் நீண்டது. மிகவும் வலியும் வறட்சியுமானது. வாழ்க்கைத் துணையில்லாமல் ஒருவர் வாழலாம். ஆனால் வாழ்நாளெல்லாம் தனியே வாழ வேண்டும் என்று முடிவெடுத்தால் அது காலப்போக்கில் மிகப்பெரிய போராட்டமாக மாறும். சற்றே நீண்ட சிறுகதை சேது. அது இந்தப் போராட்டத்தைக் கதையின் இறுதியில் தொடவில்லையென்றால் கதை மிகவும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

கேகேகேயும் நானும் (யோகாவும்)- 8


கேகேகேயும் நானும் (யோகாவும்)- 8 கேகேகே “ஏம்ப்பா யோகா எதுவும் சேரலியா ?” என்று தொடங்கினான். ‘வாப்பா ஒண்ணாவே சேரலாம்” என்றேன். “அது முடியாதுப்பா… ” “ஏன்ப்பா?” “நீ சர்வீஸ்லே இருக்கே… நான் ரிடையர்ட்..” ‘யோகாவுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்?” “இருக்குப்பா… அடையாறுலே ஒரு யோகா மாஸ்டர் கிட்டேப்போயிப் பேசிப்பார்த்தேன். ஒரு கிளாஸுக்கு 750 கேக்கறாரு” … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | 1 Comment

மனவளர்ச்சியற்ற குழந்தைகளின் எதிர்காலம்- எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை


மனவளர்ச்சியற்ற குழந்தைகளின் எதிர்காலம்- எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை மனவளர்ச்சி துரதிர்ஷ்ட வசமாக இயல்பாக அமையாமற் போகும் குழந்தைகளின் பெற்றோரை இடைவிடாது உறுத்தி மனம் வெதும்பச் செய்யும் கேள்விகள் “நம் காலத்துக்குப் பின் நம் குழந்தையின் கதி என்ன? உண்மையான அன்புடன் அக்கறையுடன் யார் பார்த்துக் கொள்வார்கள்? கொடுமைக்கும் இழிவுக்கும் குழந்தை ஆளாகுமோ?” இந்தக் கேள்விகளுக்கு விடையே கிடையாது. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “அவர்கள் பாடுகிறார்கள்”


எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “அவர்கள் பாடுகிறார்கள்” பின்நவீனத்துவக் கதை என்பது என்ன? அது நவீனத்துவத்தின், யதார்த்தத்தின் வரம்புகளுக்குள் அடங்காத ஒரு கதையை அல்லது ஒரு சித்தரிப்பை நம் முன் வைப்பது. கனவு கலையும் போது கனவின் அனுபவம் நனவில் கிடைக்கும் அனுபவ உணர்தலுக்குக் குறைவானதல்ல என நாம் உணர்கிறோம். அந்த ஒரு கணத்தில் நமக்கு கனவு, … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , , | 1 Comment