கேகேகேயும் நானும் 12- (நாய்க்கு ஆதார் கார்டும்)


c806470e-ac95-4457-856c-5470daa2792cwallpaper1

கேகேகேயும் நானும் 12- (நாய்க்கு ஆதார் கார்டும்)

“என்னப்பா இது நாய்க்கு ஆதார் கார்டு போட்டிருக்காரு ஒரு ஆளு?” என்று நான் துவங்கினேன். எத்தனை நாள் தான் கேள்வி கேட்கும் கேசவனே கேட்டுக் கொண்டே இருப்பது?

“அதான் அந்த ஆள் மேலே நடவடிக்கை எடுக்கறாங்களே?”

“ஒரு கவர்மென்ட் ஆபிஸர் இப்படிப் பண்ணலாமா?’ — நான்

“ஏய் சத்யா.. உனக்கு இது கூடத் தெரியலையே.. அவரு கவர்மென்ட் ஆபிஸர் கிடையாது..ஏஜென்ட்…”

“அப்போ கவர்மென்ட் வேலையை ஏஜன்ட் செஞ்சா அது எங்கே கொண்டு போய் விடும்கறத்துக்கு இது ஒரு உதாரணமா?”

“உடனே கவர்மென்ட் வேலை செய்யரவங்களை சப்போர்ட் பண்ணற பாத்தியா….?”– கேகேகே.

“பழைய சிஸ்டம் ஞாபகம் வந்திச்சி கேகேகே…”

“யப்பா… கவர்மென்ட் தன் வேலைய ஏஜென்ட் கிட்டே உடறது தான் நமக்கு நல்லது”

“எப்பிடிப்பா?”

“கவர்மென்ட் சர்வன்ட் அதிகமான டாக்ஸ் அதிகமாகுமப்பா…”

“ஏன் கேகேகே… நாம சிறுவயசா இருந்தப்போ வேலை செஞ்ச ஆளுங்க முக்காவாசி பேரு உன்னை மாதிரி ரிடையர் ஆயிட்டாஙலே. வேற ஆளையும் போடலே. அப்புறம் ஏன் டாக்ஸே குறையலே?”

குறுக்குக் கேள்வி கேட்டு என்னைக் குழப்பாதேப்பா என்றான் கேகேகே.

“நாய் மாதிரி அலையற ஜனங்களுக்கு ஆதார் கார்டு கெடக்காம நாய்க்கே கெடச்சாலும் பரவாயில்லே ஆனா கவர்மன்ட் சர்வன்ட் எண்ணிக்கை கொறையணும் இல்லியா கேகேகே?”

“ஒரு கேஸ் இப்பிடி இருந்தா ப்ரைவேட் மட்டமாயிடுமா?”

அதெல்லாம் வேண்டாம் கேகேகே. பிரைவேட் சர்வீஸ் அவன் கை ஓங்கி இருக்குற சர்வீஸ் ஒத்துக்கிறயா?”

“அப்பிடின்னா?”

“இதுதான் விலை.. இவ்வளவு தான் சர்வீஸ்… வேணுமின்னா எடுத்துக்கோ… இல்லியா இடத்தைக் காலி பண்ணு… அதான் அவன் கை ஓங்கி இருக்குறதுன்னேன்….”

“ஒரு உதாரணமாவது சொல்லுப்பா”

“நூடில்ஸ்… இதையே கவர்மென்ட் தயாரிச்சிருந்தா தரக்கட்டுப்பாடு கண்டிப்பா இருந்திருக்கும்… சின்னத் தர பேதம் இருந்தாலும் எதிர்க்கட்சி, உபயோகிப்பாளர் சங்கம் எல்லாரும் பாய்ஞ்சிருப்பாங்க…”

“கவர்மென்ட் போயி ப்ரைவேட் வந்தப்புறம் இவ்வளவு சர்வீஸ்.. இத்தனை வெரைட்டி கிடைக்கிதே ப்பா..”

“சென்னையில தனியார் பள்ளிக்கூடத்தில ஏழைப்பசங்களுக்கு உண்டான பாதி ஸீட் ஃபில் அப்பே பண்ணலேன்னு நியூஸ் பாத்தியா?”

“நான் பாபநாசம் விமர்சனம் வந்திருக்கான்னு தேடிக்கிட்டிருந்ததிலே இதை விட்டுடேன்ப்பா”

“இண்டியன் ஏர்லைன்ஸ் ஆபரெட் பண்ற எல்லா ரூட்லேயும் ப்ரைவேட் போவறதில்லே…ஏன்னு தெரியுமா?”

“இவ்வளவு டீப்பாப்பாப் பாக்க என்னப்பா இருக்கப் போவுது?”

“திருச்சிக்கே வருவோம். அதுகிட்டே இருக்கிற குக்கிராமத்து ரூட் எல்லாமே கவர்மன்ட் பஸ் போனாதான் உண்டு… ஏன்னு தெரியுமா?”

“சென்னையிலே இருக்குற நமக்கு அதெல்லாம் எதுக்குப்பா?”

“சரி விடு. ப்ரைவேட் ஒரே ஒரு வேலை பண்ணுவாங்களா? ஆர்டியைக்குக் கீழே வரச்சொல்லு”

“அது என்னப்பா ஆர் டி ஐ?”

“தகவல் அறியும் உரிமை”

“அப்பிடின்னா என்னப்பா?” என்று இன்ப அதிர்ச்சி தந்தான் கேகேகே.

(image courtesy: hindustan times)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நகைச்சுவை and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s