ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை உலகை உறுத்துவதே இல்லை


11174886_819871411440854_6432297781393734947_n

ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை உலகை உறுத்துவதே இல்லை
முகநூலில் என்னால் நேரம் செல்விட இயலுவதே இல்லை. இன்று Tree Bank of India – முல்லைவனம் அவர்களின் முகநூல் பக்கத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன். மனம் மிகவும் வருந்தியது. வறுமை, பட்டினிச்சாவு இவை சகஜமாக இருக்கும் ஏழை நாடுகள் பற்றி வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என்றுமே கவலை கொள்வதில்லை. இந்த நாடுகளில் வறுமையுடன் சேர்ந்து ஒரு சர்வாதிகாரி அல்லது ஒரு ராணுவ ஆட்சி, சமீபகாலமாக பயங்கரவாதிகள் ஆதிக்கம் இவையும் இருக்கும். இந்த நாடுகளின் குழந்தைகள் என்ன பாவம் செய்தன? அவர்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவுக்காவது வழி செய்யலாமே?

ஐநா அமைப்பில் குழந்தைகளுக்கும் ஏழைமக்களுக்கும் உதவி செய்யும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் இதை தம் பொறுப்பாக எண்ணவில்லை. ஆயுதங்களுக்குச் செலவு செய்வதில் உள்ள ஆர்வம் மனிதநேயப் பணிகளில் இருப்பதில்லை. மதப்பிரசாரத்துக்கு மதங்கள் செலவு செய்யும்பணம் இங்கே போனால் கூட இந்தக் குழந்தைகள் தப்பித்து விடும். புதிய வழிபாட்டுத்தலங்கள் கட்டும் செலவில் பத்தில் ஒரு பங்கு கிடைத்தால் கூட இந்தக் குழந்தைகள் சாகாமல் காக்கப் படும்.

மதம், ஆயுதம் வழி பலம், பொருளாதார பலத்துக்கான திட்டம் இவை தான் அரசுகளின் பார்வையில் முன்னுரிமை பெறுகின்றன. INCLUSIVENESS என்னும் எல்லா மக்களையும் எல்லா தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது எப்போதுமே ஒரு கனவாகவே நின்று விடும் என்றே தோன்றுகிறது.

ஆயுதப் போட்டியும் ஆதிக்கவெறியும், பொருளாதாரத்தில் எந்த வரைமுறையுமற்ற போட்டியுமே உலகை இன்று தவறான திசையில் கொண்டு செல்கிறது. மதங்கள் இன்னும் உரத்த குரலில் தம் பெருமை பேசுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் மதங்கள் மனித நேயத்தை வளர்க்கக் கையாலாகதவையாகவே இருக்கின்றன.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s