முனீஸ்வரர் ஆனாரா புத்தர்?


download

தமிழ் ஹிந்து 9.7.2015 இதழில் ” தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்

என்னும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை கிராமத்து முனீஸ்வரன் உட்பட​ பல​ சிறு தெய்வங்கள் பௌத்த சமண​ வழிபாடுகள் வைதீக​ மதங்களால் தடுக்கப் பட்ட​ பின் உருவானவை என்னும் கருத்தை முன் வைக்கிறது. இந்த​ திசையிலான​ ஆய்வுகள் ஏற்கனவே இருப்பவையே. அவர் மேற்கோள் காட்டுவது இதை:

“அய்யனார், சாஸ்தா, தருமராஜா போன்ற கோயில்களை இவ்வகையில் மயிலை சீனிவேங்கடசாமி குறிப்பிடுகிறார்.” & ” புத்தர் சிலைகளின் தலைகளை மக்களையே உடைக்க வைத்ததாகவும் சான்றுகள் கூறுகின்றன. பவுத்த மதத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு வகையான நுட்பமான தாக்குதல் இது என்று ஆய்வாளர் அருளப்பன் சுட்டிக்காட்டுகிறார்.”

கட்டுரையின் மையக் கருத்து இந்தப்பத்தியில்:

“இச்சிலைகள், புத்தராக இருந்து முனியாக மாற்றப்பட்டன என்பது இதன் பொருளல்ல. மாறாக, முனியே புத்தர்தான். புத்தருக்கான பல்வேறு பெயர்களில் ஒன்றே முனி என்பதற்கு நம் மரபுகளில் ஆதாரம் இருக்கிறது. முனி – புத்தன், முனிசுவ்விரதர் – தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர், முனியன் – ஒரு சிறுதேவதை, முனீந்திரன் – புத்தன், அருகன் என்னும் ஐந்து பொருள்களை தமிழ் லெக்சிகன் தருகிறது. பவுத்தப் பின்னணி கொண்ட பெயர்களும் நம்பிக்கைகளும் பவுத்தம் என்றறியாமலேயே மக்களிடம் வேறு பெயர்களில் உலவுகின்றன.”

கட்டுரை முடிவில் முன் வைப்பது:

நம்முடைய இன்றைய வழிபாட்டு முறைமைகளில் பல்வேறு மரபுகளும் இணைந்து நிற்கும் பன்முக நோக்கு இருக்கிறது என்பதை இந்தச் சான்றுகள் காட்டுகின்றன. எழுதப்பட்ட நவீன பவுத்த வரலாற்று நூல்களில் மட்டுமல்லாது, மக்களிடையே பகுதிவாரியாகப் புழங்கிவரும் உள்ளூர் மரபுகளிலும் நம்பிக்கைகளிலும் வைத்து ஆராயும்போதுதான் பவுத்தத்தின் இப்பங்களிப்புகளைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தக் கட்டுரையின் சாராம்சத்தில் இரண்டு விஷயங்களே தென்படுகின்றன: 1. கிராம தெய்வம் பழங்குடி தெய்வங்கள் அவர்கள் தொடர்பான வழிபாடு எதுவுமே பௌத்தத்துக்கு முந்திய காலத்தில் இல்லை. பௌத்தம் முதலில் புத்தரை அளித்தது. வைதீக மதம் புத்தரைப் பறித்ததும் அந்த இடத்துக்கு சிறு தேவதைகள் வந்தனர். . 2.பௌத்தம் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் மீது பண்பாட்டு ரீதியன தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களில் சிலர் பலி கொடுப்பதை நிறுத்தி சைவத்துக்கு மாறினர்.

இந்தக் கட்டுரை ஆழமாக எதையுமே ஆய்ந்து மேற்செல்லாததால் நாம் சாதாரணமாகச் சில விஷயங்களைக் குறிப்பிட்டால் போதும். மிகவும் நெருக்கி அடித்துத் தமிழ் நாட்டில் தென்பட்டவற்றை மட்டும் வைத்து கட்டுரை முன் வைக்கப் பட்டிருக்கிறது. உண்மையில் பௌத்தம் தமிழ் நாட்டில்மட்டும் வெளியேற்றப் படவில்லை. தமிழ் நாட்டில் பௌத்தம் மட்டும் கடுமையாக எதிர்க்கப் படவில்லை. வைணவமும்தான். சோழ மன்னன் ஒருவன் ராமானுஜர் கண்களைத் தோண்ட அனுப்பிய படைவீரர்களும் “நானே ராமானுஜர்” எனக்கூறி கூரத்தாழ்வார் தம் கண்களைக் கொடுத்தார். அந்த அளவு வைணவம் வேட்டையாடப் பட்டது. பௌத்தம் வைணவம் இரண்டுமே ஜாதி ஏற்றத் தாழ்வை நிராகரித்தன. இந்தியாவில் வைதீகமதவாதிகளுக்கு ஜாதி அடுக்கு தகர்க்கப் படும் முன் முந்திக் கொள்ளும் வேகமே சமண பௌத்த மதங்களை ஓரங்கட்டும் முனைப்பை அளித்தது. சைவம் அசைவம் என்று புத்தர் தொடங்கியதாகத் தெரியவில்லை. அவ்வாறு தொடங்கியது மகாவீரரே. புத்தர் போரையும், விலங்குகளை யாகத்தில் பலியிடுவதையும் எதிர்த்தார்.

அஷ்வமேதயாகத்தில் குதிரைகளையும், கோமேத யாகத்தில் பசுக்களையும் பலியிட்டு அவற்றின் மாமிசத்தை உண்ட பிராமணர்கள், ஷத்திரியர்கள் அதை நிறுத்த புத்தரே காரணம். இந்திய அளவில், உலக அளவில் பல்வேறு ஆய்வுகள் விவாதங்கள் இவற்றை முன் வைக்கின்றன.
இந்தக் கட்டுரையில் மையப்படுத்தப் பட்டுள்ள பௌத்த எதிர்ப்பு சரியே. ஆனால் சிறிய தெய்வங்கள் பௌத்த காலத்துக்கு முன்பே கட்டாயம் இருந்திருக்க வேண்டும். வயலைக் காக்கும் எல்லையம்மன், காவத்தாயி, முனீஸ்வரன், அய்யனார் ஆகியோர் மனிதன் நிலையான வீடு கட்டி விவசாயம் செய்யும் போதே வந்திருக்க வேண்டும். காடுகளில் மரத்தையும், மழையையும், சூரியனையும், நதியையும் தெய்வமாக வணங்க புத்தர் காரணமுமில்லை. அவர் காலத்துக்கு முன்பே தென்னாட்டில் பண்பாடுகள் இருந்தன. பண்பாடுகளின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஒர் புரட்சியைச் செய்யும் ஆன்மபலத்தை அனேகமாக புத்தர் காலத்துக்குப் பின் பௌத்தம் இழந்தது. இன்று பௌத்தம் கோலோச்சும் நேபாளம், இலங்கை மற்றும் சீன அரசுகளின் போக்கே அதற்குச் சான்று. ஜனநாயக மறுப்பும், இன அழிப்பும், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவும் இந்த நாடுகளில் காணப்படும். ஜப்பான் விதிவிலக்கு. ஜென் என்னும் புத்தரின் போதனைகளின் சாராம்சமான “இயல்பாக இருத்தல்” ஜப்பானிலேயே உருவானது. இன்று ஜென் மட்டுமே அசல் பௌத்தம். புத்தர் பெண் துறவிகள் உருவாக வேண்டும் என விரும்பினார். அதை அவரது வழித்தோன்றல்கள் நிராகரித்தனர். புலனடக்கம் வாயிலாகப் பேராசையில்லாத போரில்லாத உலகத்தை அவர் கனவு கண்டார். பௌத்தம் கொண்டாடும் நாடுகள் அதற்கு எதிர் திசையில் செல்பவை. அவர் மடாலயப் பாரம்பரியத்துக்காக சீடர்களை ஏற்கவில்லை. தமது செய்தி பரவட்டுமே என விரும்பினார் அவ்வளவே. ஆனால் வைதீக மதங்களில் வழியில் இன்றும் பெரும்பான்மை பௌத்தம் போய்க் கொண்டிருக்கிறது. ஜென் மட்டும் பாலைவனச் சோலையாக நிற்கிறது. உலக அளவில் எதை பௌத்தம் செய்யவில்லையோ அதைத் தமிழ் நாட்டின் சிற்றூர்களில் செய்தது என்பது உற்சாகமிகுதியாகத் தெரிகிறது. வைணவம் பௌத்தத்தைத் தாண்டி நின்றதற்கு அதன் தமிழும் ராமானுஜர் காலத்தால் பிந்தியவர் என்பதுமே காரணம்.

ஆதாரமில்லாத கட்டுரையில்லை இது. ஆழமில்லாதது.
(image courtesy:sharmalandevar.blogspot.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s