அனுபவ ஆத்திச்சூடி – கவிதை
அறம் வேறு அரசியல் வேறு
ஆணாதிக்கம் அற்பம்
இலக்கியம் பண்படுத்தும்
ஈனம் லஞ்சம்
உரிமை பிச்சையில்லை
ஊழல் மரம் சுயநலம் விதை
எதிர்காலத்தை எழுதும் நிகழ்காலம்
ஏற்றத்தாழ்வு பிறப்பால் அல்ல
ஐயம் இருள் தேடல் விடிவெள்ளி
ஒருவனின் வன்மம் ஊரையே அழிக்கும்
ஓசை தேவையில்லை உண்மைக்கு
ஔடதம் தேட விஷம் அடையாளப்படும்
எஃகு இதயம் வேண்டும் ஏழைக்கு
(ஜூலை 2015ல் வந்த இலக்கியச்சிறகு இதழ் 20ல் வெளியானது)
image courtesy; wallpapers21.com
Advertisements