மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைகள்


download (1)

மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைகள்

அன்னியமாதல்

“உன்னோடு
நடந்து நடந்து
கால் வலிக்கிறது”
என்று அலுத்துக் கொள்கின்றன
என்னுடையது என்று நான் நம்பிய
என் நிழல்கள்
தூரம்

இன்னும் கொஞ்ச நேரம்தான்
பொழுதடைவதற்குள் உன்னிடம்
வந்துவிடுவேன் என்று
வழக்கம்போல
என்னைப் போலவே நினைத்துக் கொண்டது
அந்த பெரிய மலையைக் கடந்து கொண்டிருந்த
சிற்றெறும்பு

அது போய்ச் சேரவேண்டிய சமவெளி
எங்கோ ஒரு எறும்பைப் போல
தெரிந்து கொண்டிருந்ததும்

உதவிக்குக் காத்திருப்பவர்கள் (கவிதையின் முக்கியப் பகுதி)

நான் காரில் ரொம்ப தூரம் போக வேண்டியிருந்தது
நான் இந்த சாலையில் ஏராளமான பேரை கைவிட்டால்தான்
இந்த தூரத்தைக் கடந்து நான் நேரத்திற்கு போய்ச்சேர முடியும்
அதற்கு நான் கைவிட வேண்டியவர்களை சந்தேகிப்பது அவசியம்

மூன்றாவது கவிதையின் ஒரு பத்தியில் இறுதி மூன்று வரிகளில் திரும்பத் திரும்ப வரும் நான் கடைசி வரியில் மட்டுமே இன்றியமையாத்து. பிற வரிகளில் நான் இல்லாமலேயே அந்தப் பொருள் வந்து விடும். மூத்த கவிஞர்- என்ற போதும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல அவரது கவிதை வரிகள். இல்லையா?

முதல் கவிதை பற்றி-
நான் ஒருவரை நமக்கு கொள்கை அடிப்படையில் அல்லது நீண்ட கால லட்சிய அடிப்படையில் ஒத்த கருத்துள்ளவராகக் கருதுகிறேன். அவர் என்னை ஆதரித்த போது அவர் என் தரப்பைப் புரிந்து கொண்டே அவ்வாறு செய்தார் என்று நம்பினேன். உண்மையில் அவர் என்னுடன் இருந்ததும் என்னை ஒத்து எடுத்த நிலைப்பாடுகளும் ஒத்துப் போனது தற்செயலானதே. அதில் ஆழமோ நான் எதிர்பார்த்த புரிதலோ எதுவுமே இல்லை. ஒருவிதத்தில் அது சந்தர்ப்பவசமான ஆதரவே. இப்படிப்பட்ட தற்காலிக இணக்கங்கள் சகஜமே. இருந்தாலும் அதை உணரும் தருணம் வலி மிகுந்ததே.

இரண்டாவது கவிதை பற்றி-

ஒரு லட்சியவாதி தனது தேடலில் மனம் சோர்வதுண்டு. அவன் இலக்காக வைத்திருக்கும் சமுதாய மாற்றம் அவனுக்கு உயிர் மூச்சு போன்றது. அவனை அடிக்கடி தொந்தரவு செய்வது. ஆனால் அது கானல் நீராக இருக்கலாம். அதனுடன் வாழ்தலும் அதைச் சுமத்தலுமே அவனை இயக்குபவை. சோர்வு மிகுந்த தருணங்களில் அவன் தனது தேடலை ஒருக்காலும் கைவிட முடியாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மேற்செல்கிறான். அவனது தேடல் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லுமளவு சிக்கலானது. அனேகமாக இயலாதது கூட. ஆனால் அவன் தன் சுயத்தை இழந்து வாழ முடியுமா? அந்த சிற்றெறும்பு போல அவன் சிறிய முன்னேற்றங்களை மட்டுமே துணையாய்க் கொண்டு பயணத்தைத் தொடர்கிறான்.

மூன்றாம் கவிதை பற்றி-

உதவி கேட்டு முன் நீளும் கரங்களில் சில நம் கழுத்துக்கான கத்தியை வேறு எங்கோ ஒளித்து வைத்திருக்கின்றன. மறுபக்கம் நம்மைத் துரத்தும் கட்டாயங்கள் நம்மால் தவிக்க இயலாதவை. இந்த முரணுக்கு முடிவில்லை. உதவி கேட்ட குரலைக்குச் செவி சாய்க்காமற் செல்லும் ஒவ்வொரு தருணமும் ஒரு ஆழ்ந்த மன உறுத்தலை நம்முள் விதைத்துச் செல்கிறது.

நவீனத்துவக் கவிதையின் சாத்தியங்களை ஒவ்வொரு முறை மனுஷ்யபுத்திரனின் படைப்புகளை வாசிக்கும் போது ஒரு புதிய கோணத்தில் நான் உணர்கிறேன். சமகாலத்தில் தீவிரமாக இயங்கு அவரது பங்களிப்பு தமிழ்க் கவிதைத் தடத்துக்குப் புதிய திசைகளைக் காட்டுவது.

(நன்றி:உயிர்மை ஜூலை 2015 இதழ்)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in கவிதை, விமர்சனம் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s